வியாழன், மார்ச் 15, 2012

வெள்ளை வெளேர்


அரிசி ஒரு கிலோ  நாற்பது ரூபாய் விற்க்கிறது.. ஒரு பிடி மீந்துபோனாலும்
யாருக்காவது கூப்பிட்டு கொடுங்க..!!இல்லை என்றால் ..வேறு எதாவது
செய்து பரிமாறுங்கள்.!! எங்கள் வீடு அருகே ...  ஆற்காடு பொன்னி அரிசியில் சமைத்த சாதம் தெரு வாசல் அருகே வெள்ளை  வெளேர் என்று கொட்டி
கிடந்தது.!!! யாருக்காவது கொடுத்து இருந்தால் ..பசி போக்கி இருக்கும்.
மனசே கேட்கலை.!! இப்படி கொட்டி போய் இருக்கார்களே என்று..!!!!
சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு விருந்தாளி வருவதாக சொல்லி ... சாப்பாடு
மீந்து விட்டது. (வரவில்லை)..நான் வடகம் போட்டது கிடையாது.!! சரி
ட்ரை பண்ணிதான் பாப்போம் என்று ..முயற்சி செய்தேன்.வெற்றி தான்..

சாதத்தை பிரிட்ஜ் ல் எடுத்து வைத்து , மறு நாள் காலை வெளியே ஆற
வைத்து பச்சை மிளகாய் , சீரகம் ,உப்பு போட்டு மிக்சி யில் ஒரு சுற்று
சுற்றி பிளாஸ்டிக் கவரில் ஒரு ஸ்பூன் வைத்து தட்டி வடகம் இட்டு மேலே
வெய்யிலில் காய வைத்து /.., எடுத்து சும்மா பொரித்தால் ...கான் ப்லேக்ஸ் 
மாதிரி மொரு மொரு என்று க்ரிஸ்ப்பி வடகம் (குர் குரே போல )செம taste !

அடுத்து என்ன பண்லாம் பழய சாதத்தை என்று யோசித்தேன்...இது போல
முதல் நாள் பிரிட்ஜ் ல் எடுத்து வைத்து, மறு நாள் ..மிக்சி யில் ஒரு சுற்று
சுற்றி .. கடுகு உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து ...வெள்ளரி  மற்றும் காரட் மாங்கா துருவி தாளித்து ..மாதுளை முத்துக்கள் மற்றும் திராட்சை கலந்து
தயிர் சாதம் பண்ணி ...(பகள பாத் ) மாவடு ஊறுகாய் தொட்டு கொண்டு
சாப்பிட்டோம்... ஒரே ரௌ ண்டில் . அனைத்து சாதமும் காலி..
அதனால் கொஞ்சம் மெனகெட்டு செய்தால் .. பழசும் புதுசு  தான்.
வெயில் காலத்துக்கு குளு குளு என்று வயிறு கெடுக்காத தயிர் சாதம் ரெடி.

இன்னும் சிலர் நீராரம் ஊற்றி மீந்து  போன சாப்பாட்டை , வெந்நீர் பழயதாக
கிராமங்களில் சாப்பிடுகிறார்கள். வைரம் பாய்ந்த உடம்புடேன் திடகார்த்தமாக
வயலில் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.!

சாதம் மீந்து போனால் ...தயவு செய்து குப்பையில் போடாதீர்!!
ஒரு வேளை உணவுக்கு எத்தனையோ பேர் பசியில் அல்லாடி கொண்டு இருக்கிறார்கள் !! அவர்களை தேடி கண்டு பிடித்தாவது ...சேர்த்து விடுங்கள்.


என் அம்மா சொல்லுவார்கள் !!! பத்தும் பத்தாமல் சமைத்து பழகு !! என்று.
ஒரு நேரம் பத்தாமல் போனால் கூட பரவா இல்லை !! ஆனா சமைத்து 
வேஸ்ட் பண்ணி வெளியே கொண்டு சென்று கொட்டாதே என்பார்கள்.


சாப்பாடு என்றவுடன் என் பள்ளி பருவம் பசுமையாக ஞாபகம் வருகிறது.
மார்ச் மாதம் முழுவதும் பள்ளியில் ஓவ்வரு வகுப்பு வாரியாக அனைவரும்
சாப்பாடு வீட்டில் இருந்து மொத்தமாக கொண்டு வந்து பூட் day செலேப்ரட்  
செய்வோம்.வாழை இலை போட்டு வரிசையாக அமர்ந்து டீச்சர் கூட
சாப்பிடுவோம்.! ஒரே கலர்புல் ஆக இருக்கும்  அன்றைய வகுப்பு.!!

11 கருத்துகள் :

 1. உங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/

  இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்

  பதிலளிநீக்கு
 2. வடகம், தயிர் சாதம் - நல்ல சமையல் குறிப்புகள் ! + நல்ல கருத்துக்கள் ! நன்றி !

  பதிலளிநீக்கு
 3. //என் அம்மா சொல்லுவார்கள் !!! பத்தும் பத்தாமல் சமைத்து பழகு !!//
  என்னங்க இது வரும் ஆனா இப்ப வராது என்றதுபோல....

  பதிலளிநீக்கு
 4. //...பத்தாமல் சமைத்து பழகு !!//
  பத்தாமல் சமைத்து பழகு என்று நீங்க சொல்ல அடுப்புபத்தாமல் சமைக்கவேணுமாக்கும் என்று நினைச்சன்

  பதிலளிநீக்கு
 5. //மிக்சி யில் ஒரு சுற்று
  சுற்றி .. கடுகு உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து ...வெள்ளரி மற்றும் காரட் மாங்கா துருவி தாளித்து ..மாதுளை முத்துக்கள் மற்றும் திராட்சை கலந்து
  தயிர் சாதம் பண்ணி ...(பகள பாத் ) மாவடு ஊறுகாய் தொட்டு கொண்டு
  சாப்பிட்டோம்... ஒரே ரௌ ண்டில் . அனைத்து சாதமும் காலி..
  அதனால் கொஞ்சம் மெனகெட்டு செய்தால் .. பழசும் புதுசு தான்.
  வெயில் காலத்துக்கு குளு குளு என்று வயிறு கெடுக்காத தயிர் சாதம் ரெடி.//
  படிக்கவே வாயூறுது எனக்கு மிகவும் பிடித்த உண்வுகளில் தயிர்சாதமும் ஒன்று

  பதிலளிநீக்கு
 6. வரும் ஆனா இப்ப வராது !!
  இப்படி அம்பல படுத்திவிட்டீர்கள் !

  பதிலளிநீக்கு
 7. அம்பலத்தார் வாங்க..உங்களுக்கு ஒரு பாக்கெட் தயிர் சாதம் பார்சல் வந்து கிட்டு இருக்கு...,

  பதிலளிநீக்கு
 8. எங்கள் தாத்தா பழைய சாதம் மிஞ்சினால் மாம்பழத்தோடு பிசைந்து சாப்பிடுவார்.அந்த ஞாபகம் வருகிறது கீதா !

  பதிலளிநீக்கு
 9. ஆமாம் ஹேமா பழய காலத்து மனிதர்கள்
  சாதத்தை ஒரு போதும் வேஸ்ட் பன்ணமாடார்கள்!
  ஞாபகங்கள் சுகமானது !

  பதிலளிநீக்கு

welcome