சனி, நவம்பர் 23, 2019

"The only place success comes before work is in the dictionary

சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைத்தளத்தில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் துவக்க விழா பற்றி பகிர்ந்து இருந்தார். அதை பார்த்த உடேன நம் பள்ளியில் நம் மாணவர்களுக்கு இது போல் ஒரு திட்டத்தை துவங்கினால் என்ன என்று தோன்றியது. எங்கள் பள்ளியில் +1 மற்றும் +2 மாணவர்கள் 200 பேர் படிக்கின்றனர் . அவர்கள் மாலை 5 மணி வரை சிறப்பு வகுப்பில் கலந்து கொள்கின்றனர் .மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மாணவர்களே இதில் அதிகம் உள்ளனர். எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர் . அவர்களில் யாரேனும் ஒருவர் முன் வந்து எம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாலை 4 மணி அளவில் ஸ்னாக்ஸ் மற்றும் ஹெல்த்தி  டிபென்  அதாவது பொறி,மற்றும் அரிசி உப்புமா ,சுண்டல், கடலை மிட்டாய் போன்றவைகளை வழங்க முன் வருவார்களா? என்று பணிவன்புடன் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து இந்த குழந்தைகள் பயனடைய உதவுவுவார்களா என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்னும் நூறு நாட்களே உள்ளன ..இவர்கள் சிறப்பு வகுப்பு.
சமீபத்தில் வாட்டஸ் அப் இல் ஒரு வீடியோ பார்த்தேன்.
இதை பார்த்தவுடன் மெய்  சிலிர்த்து போனேன்...தர்மம்  செத்து  போக வில்லை .அதனால் தான் நாட்டில் மழை பெய்கிறது ..நன்றி இறைவா !!

கீதா
 9965251995