cell phone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cell phone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 09, 2011

பகல் கொள்ளை



 
ஆபர் ஆபர் என்று ஒவ்வரு  நெட்வொர்க் போட்டி போட்டுக்கொண்டு


விளம்பரம் செய்கிறார்கள்..கொஞ்சநாள் கழித்து  ஆட் ஆன் க்கு ரூபாய்


பத்து என்ற விதத்தில் ஒவ்வரு நம்பர் க்கும்  பத்து என்று பிடித்து


கொள்கிறார்கள்..நிமிடத்திற்கு பத்து பைசா என்று முதலில்


கூறுகிறார்கள்..பின்பு இருபது பைசா என்கிறார்கள்.


ஒரு லேன் லைன் முற்றிலும் இலவசம் என்கிறது ஒரு நெட் வொர்க்.


புது வருடம் ,அதற்கு முதல் நாள் பேசும் போது பில் எகிறியது.


இதை முதலில் தெரிவித்தால் ...நாம் உஷாராக இருப்போம்.!!!!


எஸ் எம் எஸ் மூலமாக மெசேஜ் பிறகு தான் வருகிறது..


இதை எல்லாம் மிஞ்சும் வகையில் ஆர்செல் ரீச்சார்ஜ் செய்து


இரண்டாம் நிமிடத்தில்   முப்பது ரூபாய் நம்மை கேட்காமலே


எடுத்து கொண்டார்கள்..இது தெரியாமல் நண்பருக்கு போன்


செய்தால்  . யுவர் பாலன்ஸ்  இஸ் டூ லோ பார் திஸ் கால்;


என்று கட் ஆகி விட்டது...எப்ப பணம் போட்டாலும் இதே தொல்லை !!


கடுப்பாகி கஸ்ட்டமெர் கேர் க்கு போன் செய்ய கூட காசு இல்லாமல்


தோழி செல்லில் இருந்து தொடர்பு கொண்டால்...செம்ம டென்ஷன்.


தங்கள் முழு பெயர் தெரிந்து கொள்ளலாமா ? என்று எதிர் முனையில் ...


அடுத்து தங்கள் செல் போன் நம்பர் சொல்லுங்க என்று...


அடுத்து நீங்க இப்ப அழைக்கும் செல் நம்பர் பற்றி தெரிந்து கொள்ளலாமா?


என்று கேள்வி மேல் கேள்வி வேறு..அதற்கும் இப்ப சார்ஜ் செய்றாங்க..


அவர்கள் சொன்ன தகவல் கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டேன் 


பெட் டைம் ஸ்டோரி என்று ஒரு சர்வீஸ் டிசம்பர் மாதம் முதல்


ஆக்டிவே ட்   ஆகி இருக்கு என்றனர்...அது ம்மாதிரி ஒரு சர்வீஸ்


இருப்பதே அப்போது தான் தெரிந்தது...மாதம் முப்பது ரூபாய் 


வசூல் செய்கிறார் களாம்   !!!..நான் பெட் டைம் ஸ்டோரி எல்லாம்


கேட்கவில்லை.. எங்க வீட்டு பொடிசுகள் சொல்ற ஸ்டோரி கேட்கவே


எனக்கு நேரம் இல்லை ..இவர்கள் சொல்லும் ஸ்டோரி நமக்கு எதுக்கு.?


உங்க கை தவறுதலாக பிரஸ் பண்ணி நீங்க ஆக்டிவேட் பன்ணி


இருக்கீங்க ! என்று ஒரே  போடாக போட்டனர்...நாம் அக்செப்ட் 


பண்ணாமல் அது எப்படி ஆக்டிவேட் ஆகும் என்றால் ...டீஆக்டிவேட்

பண்ண ஒரு மெசேஜ் பார்மட் சொனார்கள்..அதற்கு மூன்று ரூபாய் !!!


இதற்கு பேர் தான் பகல் கொள்ளை யோ ?நம்மை இப்படி கூட 


முட்டாள் ஆக்குவார்களா? இதை கவனிப்பார்களா? 




போன வாரம் என் அண்ணனுக்கும்  இதே நிலை தான்.. 


அவர் கேட்காமல் matrimonial சர்வீஸ் ஆக்டிவேட்

ஆகி இருந்தது!! கேட்ட தற்கு உங்க கை தவறுதலாக பட்டிருக்கும்


என்று அதே பதில் ..அவர்  டிஆக்டிவேட் பண்ண மெசேஜ்  அனுப்ப 


மினி மம் 4 ரூபாய் வேண்டும் என்பதால் ..சிம்மை கழட்டி வீசி 


விட்டார். வேறு நம்பர்கு மாறி விட்டார்...இப்படி செய்தால் எப்படி


என்னையும் வேறு நம்பர்  க்கு மாற    சொல்லுகிறார் !!


அடிக்கடி இந்த பாட்டு வேணுமா?..இதை பெற இந்த நம்பர் அழுத்துங்க..


என்று தொல்லை வேறு.!!! இதை நீக்க DO NOT DISTURB என்று ஒரு 


மெசேஜ் கொடுக்க சொன்னார்கள்.48 மணி நேரத்தில் சரி ஆகி விடும் .


என்றதை நம்பி மூன்று ரூபாய் போனது தான் மிச்சம் ..இன்று வரை 

தொடர்ந்து கொண்டு இருக்கிறது..இதையும் கவனிப்பார்களா?  





சனி, டிசம்பர் 11, 2010

டீன் ஏஜ் பெண்களே...


படுக்கையில் இது வேண்டாமே...!
பெரும்பாலானவர்கள் விளக்கு அணைத்தபிறகு
 தூங்க வேண்டிய நேரத்தில் படுக்கையில் வைத்து 
செல்போனை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் 
தூக்கம் கெடுகிறது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் 
நீங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.எனவே செல்போன்களை படுக்கைக்குச் எடுத்து சென்று உபயோகிப்பதை குறையுங்கள் !
இன்று இளைய தலை முறையினர்  குறிப்பாக இளம் பெண்கள் கவச குண்டலம் போல் செல்போனை வைத்து  இருக்கின்றனர்.
குறிபிட்ட நேரம் மட்டுமே  செல்போனை உபயோகிங்கள்., இணையம் மற்றும் புளூடூத் இணைப்பு வழியாக உங்களை  தவறாக தொடர்பு கொள்ளலாம்...உஷார்..   முன்பின் தெரியாதவர்களின் தேவையற்ற அழைப்ப்புகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்கவும். சிலர் மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுப்பார்கள். அப்படி எதும் வந்தால் அந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களை தடை செய்யுங்கள்..போலீசில் புகார் கொடுங்கள்.யாராவது தேவையற்ற படங்களை அனுப்பினாலோ அல்லது உங்களை  படம் பிடிக்க முயன்றாலோ போலீஸ் உதவியை அணுகுங்கள்.
இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்!! இதனால் ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். !!இரவில் செல்போனை வைத்து கொண்டு நெடுநேரம் SMS செய்துகொண்டு இருந்தால், பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். ஜாக்கிரதை.!!  விளையாட்டாக நாம் நினைத்து செய்வது.. வினையை தேடி தரும்.!!! செல்போன் என்ன உபயோகத்திற்காக பயன்படுத்துகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். குறிப்பாக கால் டைவேர்ட் யுஸ்  பண்ணி இன்று பல பெண்கள் தங்கள் பாய் ப்ரென்ட்  உடன் உரையாடுவதை தன் தோழிகளுக்கு பெருமையாக தங்களுக்கு வரும் காள்களை திருப்பி விட்டு ரசிக்கிரார்கள் வெகுநேரம் .!!
 கடைசியாக ஒன்று.. ..  நமக்கு என்று ஒரு பாதுகாப்பு வலையம் தேவை. !!!
அளவுக்கு  மீறினால் அமிர்தமும் நஞ்சு .  என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.