இது போல் உங்க தேவைக்கு ஏற்ப சாமான்களை சுமார் ஒரு மாதத்திற்கு
வேண்டியதை சிரமம் பார்க்காமல் மொத்த வியாபார கடைகளில் , ஒரு
தடவை இப்படி லிஸ்ட் போட்டு வாங்கி ஸ்டோர் செய்து கொண்டால் ....
அடுத்த மாதம் வரை ..அடிக்கடி கடைக்கு சென்று மனம் போன போக்கில்
சாமான்களை அடுக்கி அள்ளி கொண்டு வந்து வீணாவதை தவிர்க்கலாம்.!!
உங்க பாமிலிக்கு இது போல் ,உங்களுக்கு வேண்டிய அளவில் லிஸ்ட்
தயாரித்து வைத்து கொண்டால் மண்டையை பிய்த்து கொள்ள வேணாமே ...
ஒரு தடவை தயாரித்தால் போதும் !! வருடம் முழுவதும் இந்த மாஸ்டர்
லிஸ்டை யூஸ் பண்ணி வேண்டியதை மட்டும் டிக் செய்து வாங்கலாம்.!!
நான்கு பேர் உள்ள பாமிலிக்கு தோரயனமாய் தேவை படும் மளிகை ஐட்டம்
இந்த லிஸ்டில் சில சாமான்கள் விடு பட்டு இருக்கலாம் ..சுட்டி காட்டுங்க.ப்ளீஸ்..
மளிகை சாமான்கள் | அளவு |
மஞ்சள் தூள் | நூறு கிராம் |
கடுகு | இருநூறு கிராம் |
சீரகம் | நூறு கிராம் |
மிளகு | நூறு கிராம் |
தாளிக்கும் உளுந்து | நூறு கிராம் |
வெந்தயம் | நூறு கிராம் |
சோம்பு | ஐம்பது கிராம் |
கிராம்பு | இருபத்தி ஐந்து கிராம் |
பட்டை | இருபத்தி ஐந்து கிராம் |
பிரியாணி இலை | ஐ ந்து ரூபாய் பாக்கெட் |
வரமிளகாய் | ஒரு கிலோ |
தனியா | ஒரு கிலோ |
கடலை பருப்பு | ஒரு கிலோ |
துவரம் பருப்பு | இரண்டு கிலோ |
பாசி பருப்பு | ஒரு கிலோ |
உளுந்து | இரண்டு கிலோ |
ராஜ்மா பீன்ஸ் | கால கிலோ |
கொள்ளு | கால கிலோ |
பாசி பயறு | அரை கிலோ |
கொண்டை கடலை | அரை கிலோ |
உடைத்த கடலை | அரை கிலோ |
நிலகடலை | கால கிலோ |
தட்டை பயறு | கால கிலோ |
முந்திரி | இருபத்து ஐந்து கிராம் |
திராட்சை வத்தல் | இருபத்து ஐந்து கிராம் |
ஏலக்ககாய் | இருபது ரூபாய் |
கோதுமை மாவு | இரண்டு கிலோ |
சக்கரை | மூன்று கிலோ |
வெல்லம் | ஒரு கிலோ |
மைதா | அரை கிலோ |
வெள்ளை ரவை | ஒரு கிலோ |
சம்பா கோதுமை ரவை | ஒரு கிலோ |
கடலை மாவு | அரை கிலோ |
பச்சை அரிசி மாவு /பச்சை அரிசி | அரை கிலோ /ஒன்று |
கல் உப்பு/சால்ட் | தலா ௧ கிலோ |
சாப்பாடு அரிசி | இருபத்தி ஐந்து கிலோ பாக் |
இட்லி அரிசி | பாத்து கிலோ பாக் |
ஜவ்வரிசி | இருநூறு கிராம் |
ராகி மாவு | அரை கிலோ |
சேமியா /நூட்லஸ் | இரண்டு பாக்கெட் |
நல்ல எண்ணெய் | ஒரு லிட்டர் |
ரிபைன்டு ஆயில் | இரண்டு லிட்டர் |
விளக்கு எண்ணெய் | ஒரு லிட்டர் |
தேங்காய் எண்ணெய் | அரை லிட்டர் |
வாஷிங் சோப்பு /Detergent பவுடர் | ஒரு கிலோ |
குளிக்கிற சோப்பு | நான்கு |
டிஷ் வாஷிங் சோப்பு | நாங்கு |
ஆல் அவுட் காயில் / லிக்விடு | இரண்டு |
பெருங்காயம் | ஒரு டப்பா |
காபி /டீ/காம்ப்ளான்/பூஸ்ட் | தலா அரை கிலோ |
பேரிச்சை /தேன்/ஓட்ஸ் | தலா அரை கிலோ |
வெண்ணை/நெய் | ஒரு கிலோ |
மிளகாய் தூள்/மல்லி தூள் | தலா நூறு கிராம் |
புளி | ஒரு கிலோ |
பூண்டு | ஒரு கிலோ |
பிரியாணி மசால் பவுடர் | நூறு கிராம் |
காயந்த பட்டாணி | கால கிலோ |
பற்பசை பவுடர்/பேஸ்ட் -பிரஷ் | இரண்டு |
சூடம்/சாம்பிராணி | இரண்டு டப்பா |
ஓகே..இதை வாங்கினால் மட்டும் போதாது. தந்தை குலம் /அண்ணன் /தம்பிகள்
உங்க பாமிலிக்கு இதை நேர்த்தியாக டப்பாகளில் கொட்டி அடுக்கி வைக்க உதவும்
படி கேட்டு கொள்கிறேன்...ப்ளீஸ் முறைக்காதீர்கள்..நீங்க நல்ல மக்கள் ..செய்வீகே ..
அடுத்து பெண்களே /சகோதரிகளே !! வெங்காயம் நேற்று அதிக விலை என்று
படித்தேன். !! இந்த லிஸ்ட் எவ்வளவு காஸ்ட்லி என்பதை மனதில் கொண்டு
சிறிது கூட வேஸ்ட் ஆகாமல் ..அடுத்த மாதம் வரும் வரை ..எந்த காரணத்திற்கும்
நடுவில் சாமான் வாங்கும் நினைப்பை மறந்து விடுங்கள். உறுதியாக இருங்கள்.
உதாரனத்திற்கு துவரம் பருப்பு இரண்டு கிலோ வாங்கினால் ..அதை அந்த மாதம்
முழுவதும் அடிக்கடி சாம்பார் செய்து போர் அடிக்காமல் இருக்க வாரம் இருமுறை
வீதம் செய்ய ,துவரம் பருப்பை 5x2 =10
பத்து பங்குகளாக பிரித்து சின்ன கவர்களில்
கொட்டி பின் போட்டு விடுங்க ..காலை அவசரத்துக்கு கவரை பிரித்து கொட்ட ஈஸி
ஆக இருக்கும்...சாம்பார் ரிப்பீட் ஆகாது ..சாமானும் சீக்கிரம் தீராது.என் அனுபவம் இது.