அப்பாவும் நானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்பாவும் நானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 02, 2011

அப்பாவும் நானும் இரண்டாம் நாள்.!

அப்பாவும் நானும் மீண்டும் தொடர்கிறது.!!
வருடம் பிறந்து இரண்டாம் நாள்...
 என் டைரியில் இருந்து .....(1994 )
புது வருடம் அன்று வர முடியாதவர்கள் ,, அப்பாவை
காண இன்று வந்து இருந்தார்கள்..அனைவரிடமும்
பேசி முடித்து விட்டு ...சேது !! பாப்பா ஊரில் இருந்து
வந்திருக்கு ..ராமேஸ்வரம் கடல் மீன் வஞ்சிரம் வாங்கு!!
முள்ளு அதிகம் இருக்காது. டேஸ்ட்  ஆக இருக்கும் என்று
அப்பா எனக்காக மீன் வாங்கி வர சொல்லி கொண்டு இருந்தார்.

அப்பாவுக்கு மீன் வாடையே பிடிக்காது.சாபிட்டது இல்லை .
இருந்தாலும்..டேஸ்ட்  ஆகவும், முள்ளு இல்லாமல் இருக்கும்
என்று தெரிந்து வைத்து இருக்கிறார்.!!!அம்மாவிடம் , வாசம்
வராமல் நல்லா வறுத்து வை ,விரும்பி சாப்பிடுவா..என்றார்..


 மதியம் சாபிட்டு முடித்தவுடன் ,, நல்லா சாப்பிட்டாயாமா ? 
மீன் பிரெஷ் ஆக நால்லா இருந்துச்சா? நாளைக்கு இன்னும் 
கொஞ்சம் பிரெஷ் ஆக கொண்டு வர சொல்லட்டுமா?  என்றார்..
போதும் பா .திருப்தி ஆக இருந்தது..நீங்க தான் .டேஸ்ட் பன்னவே 
இல்லை..என்றேன்..அதனால் என்னமா..நீ நல்லா சாப்பிட்டாய் 
இல்லை?வேறே என்ன மா  வேணும்?  பேத்திக்கு என்ன 
வாங்கட்டும்?என்றார்....அவள் ஒன்னும் சாப்பிட மாட்டாள் பா ..என்றேன் .
                                                      
ரொம்ப நேரம் பேசிக் கொண்டி இருந்தோம். ! நேரம் போனதே தெரியவில்லை.
சிறு குழந்தை போல் பேத்தியுடன் கொஞ்சி விளையாடினர்.அன்று அவளை 
தூக்கி கொண்டு வாக்கிங் போய் வருகிறேன் என்று கிளம்பினார் உற்சாகத்துடன் .

நாளையுடன் என் டைரி முடிவு பெறும்.நன்றி மீண்டும் சந்திப்போம்!!!!
நியூ இயர் வாழ்த்து உங்களுக்கு. 
கிளிக்  பண்ணுங்க !!

சனி, ஜனவரி 01, 2011

அப்பாவும் நானும் ..புது வருடம் அன்று ...

 அப்பாவும் நானும் தொடர்கிறது..(!)

 புத்தாண்டு வாழ்த்துக்கள் 


  
என் டயரி 

இன்று புது வருடம் ..நானும் அப்பாவும்..காலாற நடந்து வந்தோம்.
1994 புது வருடம்   இன்று போல் சனிக்கிழமை பிறந்தது !!!
சனிக்கிழமை வந்திருக்கு என்றேன்..சனி பெருக்கு நல்லது தான்.
என்றார் பாசிட்டிவ்  அப்ரோச் ஆக..எல்லாமே நல்லதுக்கு தான்...
என்ற பாலிசி என் அப்பாவுக்கு.எதயும் ஈஸி ஆக எடுத்து கொள்வது!!

இப்ப எல்லாம் முன்ன மாதிரி  நியூ இயர் க்கு நிறைய பேர் வருவது 
இல்லையே அப்பா .. என்றேன்,. ஆமாம் மா ..அப்பா  ரி ட்டயர்  ஆன 
பின்னாடி இவ்வளவு பேர் வரதே  பெரிய விஷயம்....டிபார்ட்மென்ட்ல் ல 
இருக்கிற வரை தான் எல்லாம்..என்றார்..புண் சிரிப்புடன்.!!

தினசரி கலேண்டேரை எடுத்து  முக்கியமான தினங்களை மிக 
நேர்த்தியுடன் மார்க்கர் வைத்து மறக்காமல் இருக்க ஹை லைட் 
பண்ணி சுவரில் மாற்றினார்...பல்பு வெளிச்சம் சரி இல்லை என்று 
ஸ்டூல் போட்டு வேறு ஒரு பல்பு  மாற்றினார்.அவருடைய சுறு சுறுப்பு 
என்னை அசர வைக்கும்...அவர் அடிக்கடி சொல்லும் வரிகள்..
பிறவி பெருங்கடல் எப்படி தீர்ப்பது.?? என்ற வரிகள்.

 அண்ணன் கேக்,எலுமிச்சை பழம் ,ரோஜாபூ மாலை கொண்டு வந்து
அப்பா விடம்  கொடுத்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்..அப்பா
கையில் எலுமிச்சை பழம் கொடுத்து ஹாப்பி நியூ இயர்  பா  என்று
சொல்லி கொண்டு இருக்கும் போது அப்பா கையில் வாங்கிய
எலுமிச்சை ..தவறி கீழே விழுந்து உருண்டு ஓடியது..அச்சோ..சோ ..
என்று அண்ணன் எலுமிச்சை பழத்தை தரையில் இருந்து எடுத்து
மீண்டும்  கொடுத்தார்..கவலை படாதே..தவறுவது நல்ல சகுனம் தான்..
என்றார்.. அவர் பாணியில்..ஒன்றுமே நடக்காதது போல....அந்த
வருடம் எனக்கு மறக்க முடியாத வருடம் ஆக அமைந்தது....




 மீண்டும் நாளை பொழுதில் சந்திப்போம்..!!!