என் இனிய கோவை கொங்கு மக்களே !!
உங்களால் தான் மரியாதையை கற்று கொண்டேன் !
ஆம், நான் பிறந்தது,வளர்ந்தது,படித்து எல்லாம்
சென்னையில் தான்..மரியாதை என்பது கோவை
வந்த பிறகு தான் தெரிந்தது!அது வரை வயதானவரை
கூட பார பட்சம் இல்லாமல் ஒருமையில் அழைத்தேன் !
இங்கு வந்த பின்பும் உடனே மாற்ற முடியலை . பூ விற்கும்
பெண்மணியை இங்கே வா, ஒரு முழம் பூ கொடு என்றேன் !
அந்த பெண் பூவை கொடுத்து விட்டு என்னை ஆழமாய் பார்த்து ,
அம்மணி !!பெரிய படிப்பு எல்லாம் படிச்சு இருக்கீங்க ..கொஞ்சம்
கூட மரியாதை இல்லாமல் வா,போ..நு சொல்றீக . நீங்க
படிச்ச பள்ளிகூடத்தில் சொல்லி தரலையா? உங்களுக்கு ..
என்றாரே பார்க்கலாம்.!! அன்றிலிருந்து .ஒவ்வரு வார்த்தைக்கும்
ங்க ..போட்டு பேச கற்றுக்கொண்டேன் !மிக நன்றாக உள்ளது.
அடுத்து சென்னையில் காய்களை தொட விட மாட்டார்கள்.
மீறி தொட்டு விட்டால் ..அவ்ளோ தான் ..சகட்டுமேனிக்கு
யாருஎன்ன என்று பார்க்காமல் திட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
அவிக, இவிக என்று மிக அழகாக அழைகிறார்கள் இங்கே !!
அடுத்ததாக மனிதாபிமானம் ..இங்கே கண்டேன்.
என் அம்மா ஹோட்டல் ஒன்றுக்கு போன போது
அங்குள்ள படிகளை கடக்க மிகவும் சிரமம் அடைந்த போது
கல்லாவில் அமர்ந்து இருந்த பெண்மணி மற்றும் சர்வர்
ஓடி வந்து இரண்டு பக்கம் தாங்கி பிடித்து சாப்பிடும் நாற்காலியில்
அமர வைத்து fan , போட்டு தண்ணீர் கொடுத்து உதவினார்கள்.
இவர்கள் பேசும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது.
சாதரனமாக பஸ் இப்ப வருமா என்று கேட்டால்..
அது லேட்டாய் வரும் என்றாலும், கிளவரம் இப்பதான்
போச்சு தாயீ ..இப்ப வந்துவிடும் என்று பாசிடிவ் ஆக
சொல்லுவார்கள்.எதற்கும் டென்சன் ஆகாமல் ..அடுத்த
ஆல்ட்டர் நெட் என்ன.. இப்படி பண்ணினால் தீர்ந்து போச்சு !!
என்று படு காஸ்ஷூலாக ஆக மலைப்பாக கருதும்
விசயங்களை கூட நொடி பொழுதில் ஈசி ஆக மாற்றி
விடுவார்கள். நானும் இப்போ ஈசி ஆக எடுத்து கொள்கிறேன்.
உதவும் மனப்பான்மை நிறையே உண்டு இவர்களிடத்தில்!
பாசமும் நேசமும் ஊறி போன ஒன்று இவர்களிடம் ...
பாகத்து வீட்டில் என்ன நடக்குது என்று தெரியாது
அங்கு. ஆனால் இங்கு ஊர்ரில் இல்லாவிட்டால் கூட
சிறு சத்தம் கேட்டால் கூட ஓடி வந்து விசாரிக்கிரார்கள்.
பிரச்சனை என்றால் நமக்கு என்ன என்று இல்லாமல் ,
ஓடோடி வந்து ஆலோசனை கூறி உதவுகிறார்கள்.
நாம் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி கொண்டோம் என்றால்
எல்லாம் நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.