கிச்சென் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிச்சென் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 14, 2011

என் சமையல் அறையில்

தேங்க்ஸ் google images  


நேற்றைய முன் தினம் பால் வாங்கி வந்தேன்.
அடுப்பில் ஸிம்மில் வைத்து விட்டு மற்ற 
வேலைகளை எப்போதும் போல் செய்ய 
ஆரம்பித்தேன்!இரண்டு போன் கால்கள் 
வந்தது.ஜப்பான் சுனாமி பற்றி சன் நியூஸ் 
பார்க்கும் படி சொன்னார்கள் தோழிகள்..

அப்படியே ஹாலில் உட்கார்ந்து ,அந்த 
கோர காட்சிகள் ஸ்தபிக்க வைத்தது!!
மனசை உலுக்கி எடுத்து  விட்டது ! 
கண் இமைக்காமல் முழுவதையும் 
பார்த்தேன்.வேதனைக்கு உட்பட்டேன்.  .

 வீடு முழுக்க கருகி தீய்ந்த புகை வாடை,
வயிற்றை புரட்டி எடுத்தது ..ஓடி சென்று 
சமையல் அறையில் பார்த்தால்.....அரை
லிட்டர் பாலும் காலி ..அழுகையே வந்து 
விட்டது,  என் அஜாக்கிரத்தை நினைத்து..
என்னை நொந்து கொண்டேன்.!!  தண்ணீர்
ஊற்றி ஊற வைத்தேன்..
பழனி ம்மாவிடம் பாத்திரத்தை விளக்கப்
போட்டால்அவ்வளவு  தான்.! என்னை 
வறுத்து எடுத்து விடும்..
இப்போது எல்லாம் செல் போனை எடுத்து 
கொண்டு சமையல் அறையில் ஐக்கியம் 
ஆகி விடு கிறேன்..மேடையில் ஐ ப்போன்  
சகிதம், லேப்டாப் உடன். ,அடுப்புக்கு நேர் 
எதிரே மேடை  மீது அமர்ந்து கொள்கி றேன்!.

நாம் வேலை மும்முரத்தில் இருந்தால்..அடுப்பை 
நிறுத்தி விட்டு , அடுத்ததை கவனிக்க வேணும்.,,  எங்கும் செல்ல கூடாது !

சுத்தமாக பாலை அடுப்பில் வைத்த 
ஞாபகமே இல்ல்லாமல் மறந்து
போனதே காரணம்.!!!

சில நேரங்களில் .. நம் கை மட்டும் வேலைகள் செய்த வண்ணம் இருக்கும்... மனசு மற்றும் கவனம் வேறு  எங்காவது ஓடி கொண்டிருக்கும்...கவனம் தேவை.
இல்லாவிட்டால் ஏடா கூடம் ஆகி பிரச்சனைகள் வரும்.