பயங்கரம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயங்கரம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 11, 2011

கண் எதிரே ஒரு பயங்கரம்.

மகளிர் தினம் அன்று எங்க காலேஜ் மாணவியை தொடர்பு கொண்டேன்.

அபபடியே அந்த நிகழ்ச்சி என் கண் முன் தோன்றி மறைந்தது.

சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பு நான் கண்ட பயங்கரம்!!

நான் காலேஜில்  Lecturer   ஆக பனி புரிந்த  நேரம் அது !!

உடுமலை GVG  விசாலாட்சி  காலேஜ் வாசல் அருகே...

அன்று என் வண்டி ரிப்பேர்.  காலாற நடந்து சென்றேன்!

பீக் டைம்.  மாணவிகள் சே !! சனிக்கிழமை கூட காலேஜ்

வைத்து உசிரை எடுக்கிரார்கள் என்று கூறி கொண்டே 

என்னை பார்த்ததும் பேச்சை நிறுத்தி விட்டு கடந்து 

சென்றார்கள்....காலேஜ் வாசலுக்கு எதிர்புறம்  நெருங்கினேன் .

வேகமாக வந்த ஒரு மினி பால் வேன் மயிர் இழையில் என்னை 

உரசி கொண்டு இரண்டு அடி எனக்கு முன்பு சென்று கொண்டிருந்த 

டிவிஎஸ் பிப்டி (மாணவி பின்னால் அமர்ந்து, அவள் அண்ணன் 

வண்டியை ஓட்ட ) பின்னால் அமர்ந்து இருந்த மாணவியை முட்டி

தள்ளி , மாணவி தூக்கி வீ சப்பட்ட நிலையில்  ..அந்த வேன் அந்த 

பெண் வய்ற்றின் மீது பாய்ந்து ஏறி நிலை குலைந்து  ஒரு மரத்தின் 

மீது முட்டி நின்றது ! படக் என்று அதில் இருந்து டிரைவர் கிழே குதித்து 

ஓடினார்.(வண்டியில் ப்ரேக் பிடிக்காத காரணத்தால் .. ) கண் மூடி 

 திறப்பதர்க்குள் , நொடியில் நடந்தது !! மாணவியின் அண்ணன் 

ரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கையை  இரு கைகளில் ஏந்தி , காலேஜ் 
 
வாட்ச்    மேன்  உதவி உடன் , இர ன்டு பேரூம்    டிவிஎஸ் பிப்டி ல்  அமர்ந்து 

மாணவியை நடுவில் சாய்த்து ! வேகமாக ஆஸ்பத்திரி  நோக்கி சென்றனர்.

அன்று முழுவதும் எனக்கு மனசே சரி இல்லை, லீவ் போட்டு விட்டேன்.
M .A (லிட்) பைனல்  இயர் மாணவி ..campus interview வில் செலக்ட் ஆகி 

இருந்தாள்! நாங்கள் ஹாஸ்ப்பிட்டலில் போய் பார்த்த போது, எனக்கு 

சீக்கிரம் சரி ஆகி விடும் மேம் ..என்று தனம்பிகையுடன் கூறினாள்!!!

பல லட்சங்கள் செலவு செய்து வைத்தியம் பார்த்தும் பலன் இல்லை.

பல அறுவை சிகிச்சை க்கு உட்பட்டு , குணம் ஆக வில்லை.ஏதோ

நரம்புகள் கோளாறு காரணாமாய் அவளால் எழுந்து உட்கார கூட 

முடியலை. ரண வேதனை உடன் , சிரித்த முகம் மாறாமல் , தொலை தூர 

கல்வி மூலம் விட்ட படிப்பை தொடர்கிறாள். என்றனர்.இது தான் விதி

என்பதா?..என்னால் ஜீரணித்து கொள்ளவே முடிய வில்லை.  இன்று

நினைத்தாலும் , ஆண்டவன் மீது கோபம் வருகிறது...உயிருடன் செத்து

கொண்டு இருக்கிறாள்..யாரை நொந்து என்ன செய்ய..அவன் செய்யல

அனைத்தும்.. சக்கர நாற்காலி மீது கூட உட்கார முடியாத நிலை.!!!!

அந்த பெண்ணை தான் நான்  தொடர்பு   கொண்டேன் போனில்....!