என் நெருங்கிய தோழி வீட்டிற்கு சென்று
இருந்தேன்...மறு நாள் அவர்கள் வீட்டில்
உள்ளவர்கள் பரபரப்புடன்கானப்பட்டநேர் ...
போன் மூலம் தோழியின் நாத்தனார்அங்கு
வருவதால் தான் பரபரப்புக்கு காரணம் ..என்று
தெரிந்து கொண்டேன்...யார் முகத்திலும் அங்கு
மகிழ்ச்சி இல்லை...அங்கும் இங்கும் ஓடி கொண்டு
இருந்தநேர்.சுனாமி வருது.என்று என் தோழி
மற்றொரு தோழி இடம் போனில் சொல்வது
கேட்டு.. ஒரு நிமிடம அதிர்ந்தேன்.!!
மகிழ்ச்சி இல்லை...அங்கும் இங்கும் ஓடி கொண்டு
இருந்தநேர்.சுனாமி வருது.என்று என் தோழி
மற்றொரு தோழி இடம் போனில் சொல்வது
கேட்டு.. ஒரு நிமிடம அதிர்ந்தேன்.!!
ஸ்நாக்ஸ் டப்பாக்களை பீ ரோவில் பூட்டி
வைத்தார்கள் !!பழங்களை பிரிட்ஜ் கீழ்
பகுதியில் மறைத்து வைதநேர்.
ஸ்டோர் ரூம் திங்க்ஸ் பீரோகுள்
கண்ணனுக்கு தெரியாத வண்ணம்
மறைத்து வைக்கப்பட்டன !வீட்டு சாமான்கள்
ஷிப்ட் ஆகியது!!!ஒரே வியப்பாக இருந்தது எனக்கு!!!
அது வரை அமைதியாக இருந்த என் தோழி....மிகுந்த
படபடப்புடன் காணப்பட்டாள்..நான் கிளம்பும் முன்
தயங்கி.தயங்கி..ஒரு வழியாக விசயத்தை சொன்னாள்..
என் நாத்தனார் வந்தால் ...போவதற்குள் ஒரு வழி பண்ணி
சென்று விடுவாள்..வீட்டில் ஒரு சாமான் இருக்காது !.
சாப்பிடும் பொருள் அனைத்தையும் ,பத்திர படுத்த வேண்டும்.
வாரி வழித்து.பாத்திரத்தை கவிழ்த்தி துடைத்து விடுவாளாம்.
சமையல் காஸ் முதல் ...மளிகை சாமான் மற்றும் அணைத்து
பொருள்களையும் தீர்த்து ,மறுபடியும் வாங்கும்படி ஆகிவிடும்.
இதில் அம்மாவிடம் புகார் வேறு.! சரியா கவனிக்கலே.. என்று...
போதா குறைக்கு இவள் மாமியார் அடுத்த பஸ்சில் ஏறி வந்து
அவர் பங்குக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் ..செலவு களை
ஏற்றி கொண்டு செல்வாராம்.இவர்கள் என்ன செய்வது என்று
தெரியாமல் கண்ணு முழி பிதுங்கி..,, அவர்களை சமாளித்து
அனுப்புவதேற்குள் போதும் என்று ஆகி விடும் என்று கூறினாள்!
ஆக இவர்கள் ஏன் வருகிறார்கள் என்று நினைக்க வைக்கிறது
இவர்களின் செயல்.என்று கூறி பெருமூச்சு விட்டாள்,தோழி.
போன தடவை இது போல் தான் நாத்தனார் வந்த போது....
ஹாட் பாக்கில் இட்லி வார்த்து வைத்து விட்டு, மறு
நாள் குழந்தைகளுக்கு இட்லி உப்புமா லஞ்சுக்கு கொடுக்க
பிளான் பண்ணி சற்று லேட் ஆக எழுந்து சட்டியை அடுப்பில்
போட்டு இட்லியை தேடினால் ...ஹாட் பாக்..காலி.!!!!
ஒரு இட்லி கூட வைக்காமல் அத்தனையும் அபேஸ் .....
அட்லீஸ்ட் எடுத்ததை முன் கூட்டியே சொல்லலாம்.
அல்லது மாவு எடுத்து தனக்கு வேண்டியதை செய்யலாம்.
இந்த பெண்கள் கொஞ்சமாவது யோசிக்க மாட்டார்களா?
இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல்
இருக்கலாம் அல்லவா? என்று என் தோழி புலம்பினாள்..
ஆக இவர்கள் ஏன் வருகிறார்கள் என்று நினைக்க வைக்கிறது
இவர்களின் செயல்.என்று கூறி பெருமூச்சு விட்டாள்,தோழி.