amma லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
amma லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 06, 2011

குழந்தையாக மாறிவிட்டாய் அம்மா


சொல்லு அப்புறம் என்ன ஆச்சு? 

நீ முதலில் இந்த பாலை குடி ..பெறகு சொல்றேன்.

இம்..இப்ப சொல்லு! என்ன ஆச்சு?
வாயை துடை... என் கையை பிடித்து 
கொண்டு நட !அப்ப தான் சொல்லுவேன்! 
மீதி கதையை..சரியா?

எனக்கு தூக்கம் வருது.! போ !! மீதி கதை வேணாம் .
எனக்கு டயர்ட் ஆக இருக்கு.போ போ ..வேணாம் போ .

stroke Pictures, Images and Photos

சரி இந்த டையாபர் கட்டி கொண்டாவது படு!!
உச்சா பெட் எல்லாம் ..நனைத்து விடும்.

எனக்கு வேணாம் போ.

சரி படுத்து கொண்டு இந்த பந்தை  

மெதுவா அமுக்கி பிடி !

போ வேணாம்.! கை வலிக்குது.

கொஞ்ச நேரம் கழித்து....

தலை வாரி கொள் . இந்த டிரெஸ்ஸை 
போட்டு கொள் ..கையை தூக்கு .. 
பவுடர் அடித்து விடுகிறேன்.

வலிக்குது..வேணாம்.!

டயாபர் கழட்டு.. கஷ்டமா இருக்கு. 
ப்ரீ யா   படுக்கணும்...மீதி கதை சொல்லி முடி.!!

சீக்கிரம்.. எனக்கு துக்கம் துக்கமா வருது.



என் தோழியும் அவள் அம்மாவும் 
பேசிக்கொண்டு இருந்தார்கள் .

சில மாதங்களுக்கு  முன் திடீர்  என்று  
தோழியின் அம்மா ஸ்ட்ரோக் வந்து 
பாதிக்கப்பட்டார். மூளை பாதித்து , சிறு 
குழந்தை போல் மழலை பேசி , 
குழந்தையாகவே  மாறி 
விட்டார்.!  அத்தனை சுறுசுறுப்புடன்
இருப்பார்...இப்போமனதளவில் பச்சை 
குழந்தை போல் இருக்கிறார்.தோழியும் 
அம்மாவை குழந்தையாக வே பாவித்து 
சேவை செய்கிறார்.


என் கையை பிடித்துகொண்டு , 
இது போல் நான் ஆகி விட்டால்.. 
என்னை யார் கவனிப்பார்கள் என்று
நா தழுதழுக்க கேட்டார்.!

மூளையில் பாதிப்பு ஏற்பட்டால்..
இப்படி மாறி விடுவார்கள் !!!
நேரில் பார்த்த எனக்கு மிகவும் 
வியப்பாகவும் , அதிர்ச்சியாகவும் 
இருந்தது அவரின் செயல்கள்....
ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்..