புதன், பிப்ரவரி 29, 2012

பிப்ரவரி 29 அரிய நாள்


இன்று அரிய நாள் !! பிப்ரவரி 29  நான்கு வருடங்களுக்கு முறை
தான் வரும்..இன்று பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் ..நான்கு
ஆண்டுகள் கழித்து தான் அடுத்து பிறந்தநாள் கொண்டாடுவார்கள்.
இன்று பிறந்தநாள் காணும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.!! 
இந்த நன்னாளில் எனக்கு ஒரு அரிய செய்தி..ஆமாம் என் பள்ளி
தோழி இன்று என்னோடு பல வருடங்களுக்கு பிறகு என்னுடன்
போனில் பேசினாள்!!..அதற்கு face  புக் குக்கு  தான் என் நன்றியை 
சொல்லணும்.ஆமாம் face  புக்கில் இருந்த என் பள்ளி தோழிக்கு ஒரு
செய்தி அனுப்பினேன்.அவள் உடனே என்னுடன் தொடர்பு கொண்டு 
பழய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டோம்.பொற்காலங்கள் அவை.

மூன்று வருடங்கள் ஒன்றாக படித்ததால்..அவள் முகம் நினைவு
இருக்கிறது!..எப்படி என்னை அடையாளம் கண்டாய் என்று கேட்டாள்.
நாங்க இருவரும் ரொம்ப க்ளோஸ் இல்லை என்றாலும்..இருவரும்
ஒன்றாக நடனம் ஆடி இருக்கிறோம்.!! என் மனம் பின் நோக்கி போகிறது:

வஞ்சி  கோட்டை   வாலிபன்   படத்தில்  வரும் நடன  போட்டியில்
வைஜெயந்தி மற்றும் பத்மினி அம்மா ஆடும் நடன காட்சியை நாங்க
இருவரும் சாதுரியம் பேசாதேடி !! என்று ஆவேசமாக ஆடி எல்லோர்
கை தட்டல்களை பெற்றது பசுமையாக ஞாபகம் உள்ளது..எங்களுக்கு
டிரஸ் மற்றும் காஸ்ட்யு ம்ஸ் வழங்குவது என் அருமை தோழி தான்.   

இத்தனை வருடங்கள் கடந்தாலும்... அந்த நாள் ஞாபகம் !!!!!நன்றாக
மனதில் உள்ளது. அவரவர் குடும்பம் பற்றி பேசி .,பழய ஞாபங்களை
பகிர்ந்து கொண்டு போனதில் நேரம் போனதே தெரிய வில்லை..


என் தோழி சித்ரூபா இன்று ஒரு டாக்டர் !! child  ஸ்பெஷல் லிஸ்ட் !..
அவள் கணவனும் ஒரு டாக்டர்.இருவரும் பிஸி ஆன டாக்டர்கள்.!!


மூன்று குழந்தைகள் ...சந்தோசமாக இருப்பதாக சொன்னவுடேன் 
எனக்கு உடனே பார்க்கணும் போல் ஆசையாக இருக்கு.!!!!


என் ஆசை தோழி குரல் அன்று கேட்டது போலவே இருந்தது இன்று..
இந்த நாள் அரிய நாள்!!நன்றி இறைவா!!இருவரும் விரைவில் சந்திப்போம்.4 கருத்துகள் :

 1. 29 பிப்ரவரி பற்றிய அழகான அனுபவப் பகிர்வு.
  படங்களும் சொன்ன விஷயங்களும் வெகு அருமை.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. மேடம் வணக்கம் . படிப்தற்கு மிக மகிழ்சியாக இருந்தது . அறிய நாள்லில் ' மிக உயர்ந்ததை ;.." பள்ளி தோழி ' பெற்று உள்ளீர்கள் . மனம் நிறந்த வாழ்த்துகள் . " ' 'பள்ளி நட்பு...பள்ளி நாட்கள் ' நினைத்து பார்க்க இதை விட சிறந்தது உலகில் இல்லை என்பது என் அபிப்ராயம் . இதை நான் அனுபவமாக உண்ணர்ந்து மகிழ்ந்து உள்ளேன் . என் கருத்து எல்லாம் ' இதை பிப்-29 லீப் இல் தொடர்ந்ததால் , 4 வருடத்துக்கு ஒரு முறையாக நீட்டி விடாமல் தொடர்ந்து தொடர்பில் இருந்து நட்பை பேணுங்கள் . .. !! வாழ்கையின் அற்புதமனவைகளில் ஒன்று ' நட்பும் அதை தொடர்ந்து பேணுவதும் '!! ..நட்புடன் ..../ ராகுல் குமரன் /

  பதிலளிநீக்கு
 3. ராகுல் குமரன் , தாங்கள் சொல்வது போல் நான்கு
  வருடங்களுக்கு ஒரு முறை தொடராது எங்கள் நட்பு.
  நட்பை பேணுவேன்..உறுதி..

  பதிலளிநீக்கு

welcome