சனி, பிப்ரவரி 25, 2012

நேரம் ஆச்சு


ஆகா மணி நாலு ஆச்சு!!  நேரம் ஆச்சு...வந்து விடு வாரே..
அவசரம் அவசரமா மூஞ்சியை கழுவி மேக் அப் போட
துவங்கினாள்.....நீளமான பொட்டு நல்லா இலைன்னு நேத்து
சொன்னார் !!! சரி சரி இந்த வட்ட பொட்டை வைக்கலாம்..
அடுத்து செயின் ..,அந்த வெள்ளி செயின் னை போட சொன்னார்..
இன்ணைக் காவது மறக்காம போடணும்..இல்லைனா ஏன் போடலை ?
என்று கோபிப்பார்..!!  அடுத்து சுற்று சூழல் ..அனைத்தையும்
கிளீன் ஆக எடுத்து அந்தந்த இடத்தில் வைத்தேன்.!!எல்லாம் சரியா
இருக்கானு பார்த்து செக் பண்ணி கொண்டாள்... அடடா இந்த ஹேர்
ஸ்டைலை கவனிக்காம விட்டேன்..இப்படி வழித்து சீவா தேனு எத்தனை
தடவி சொல்லி இருக்கேன்  என்று கடிந்து கொள்வார்.!! திரும்பவும்
கலைத்து சரி செய்து .கொண்டாள்.  அடுத்து பொட்டு ., சே இப்படி
கோணலா வச்சா..அவ்ளோதான்...பொட்டு கூட நேர வைக்க தெரியாது ..
என்று சொல்லுவார்... ஓகே..எல்லாம் பார்த்து பார்த்து சரி செய்தாச்சு..

ரைட் போலாம்..என்று போனை சைலன்ட் ல வைக்க போனாள்.
அதுக்குள்ளே போன்.. அச்சோ சோ ... அவரே தான்..எடுக்க missed  கால் ..


ஓட்டமும் நடையுமாக சென்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்து..ஆன் செய்து
ஒரு வழியாக ஸ்கைப் ஸ்டார்ட் பண்ணி முடிப்பதேற்குள் ..
நான்கு மிஸ் கால் !! அவரே தான்.


போச்சு இன்னை க்கு செம அர்ச்சனை தான் !! என்று யோசிபதேற்குள் ..
ஹலோ ....  ஏன் இவ்ளோ லேட்...டைம் கு வர முடியாதோ?? என்று குரல்.
ஸ்கை ப் ல அவர் தோன்ற  ....கேமரா ஆன் பண்ணு ! ஏன் இவ்ளோ லேட் ?

ஓ ..நெட்ல வரதுக்கு தான் இவ்ளோ ஆர்பாட்டமா ...அப்ப நேரே....!!!??
அயோ டா !!! எஸ்கேப் நு உள்ளே வ ந்த வேகத்தில் வெளியேறிவிட்டேன் !
இனி யார் கதவை தட்டினாலும் எந்த பதிலும் இருக்காது.தெரியும் எனக்கு.


ஆமாம் என் friend  வீட்டில் தான் இத்தனை அமர்க்களம்...அவள் கணவன்
வெளிநாட்டில் உள்ளார் !! தினம் அவர் டைம் மாறுவதால்...கரெக்டா
மாலையில் ஆஜராகி ...இருவரும் chat செய்ய தான் இந்த ஏற்பாடு.!

12 கருத்துகள் :

 1. அட , சோகத்துக்குள்ளும் ஒரு சந்தோசம் :) :-(

  பதிலளிநீக்கு
 2. இனிமேல் இப்படித்தான் லைஃப் இருக்குமோ என்னவோ??????

  பதிலளிநீக்கு
 3. விட்டுப் பிரிந்திருக்கும் கணவன் மனைவிக்குக் கிடைக்கும் ஒரு குட்டிச் சந்தோஷம்.மனம் நெகிழ்ச்சியாய் உணர்கிறேன் கீதா !

  பதிலளிநீக்கு
 4. தலைவன் அங்கேயும் தலைவி இங்கேயும் இருக்க கம்ப்யூட்டர் தூது போகிறதா!!.. அருமை.

  பதிலளிநீக்கு
 5. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி தோழி !

  பதிலளிநீக்கு
 6. Madam Vanakkam. it is so nice to read (feel proud for the real love)[is it real lov or Afraid/respect..!!??, sorry.. just for Joke..] the attachment between them. So much of care and spl interest taking by ur friend to appear b4 even the wcam...(!!!???) 2 c hubby daily..!!. I really wonder how she will act/ happy when He comes back in real b4 her after some time..??CONGRATS & WISHES TO THAT REAL LOVE HUB & WIF/ HATS UP.. .../Raagul Kumaran/

  பதிலளிநீக்கு
 7. நன்றி ராகுல்..உங்க பொன்னான பிஸி ஆனா
  நேரத்திலும் கூட , என் ப்லோகை பார்த்து
  கருத்து சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி !!!

  பதிலளிநீக்கு

welcome