செவ்வாய், ஜனவரி 10, 2012

அம்மா ப்ரென்ட்

சாவித்திரி பாட்டி என் அம்மாவின் தோழி !
என் அம்மா இறந்த அன்று , உன் அக்கா நான்
இருக்கும் பொழுது ...
உனக்கு என்ன அவசரம் அம்மான்னு .,,
உருகினார்.!!!இன்று அவர் இல்லை.
நேற்று மாலை 4  மணி அளவில் அவர்
உயிர் இந்த மன்னுலகத்தை விட்டு
பிரிந்து சென்று விட்டது.95  வயது ஆகிறது!!
ஆனால் சிறு பெண்போல் சுறுசுறுப்பு
போன தேர் நோம்புக்கு பெரிய தேர் கோலம்
போட்டு எங்க தெருவையே ஆச்சரிய
வெள்ளத்தில் கொண்டுசென்றார்.கண்ணாடி
போடாமல் தினம் பேப்பர் வாங்கி
படிப்பார்.குரோஷா அழகாக பின்னுவார்.
அவர் ஞாபகமாக எனக்கு ஒன்று பின்னி
கொடுத்தார்.அது மட்டும் இல்லாமல் கை
 வேலைபாடுகள் அத்துபடி அவருக்கு.இவரை  பற்றி ஒரு
பதிவில் குறிபிட்டு உள்ளேன் !

எப்ப பகவான் கூப்பிடுவார்
எங்களை என்று கேட்டுகொண்டே
இருந்த இவர்களை பகவான்
அழைத்து கொண்டார்.!!
http://udtgeeth.blogspot.com/2011/12/blog-post.html

2 கருத்துகள் :

  1. அம்மாவின் நண்பியின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரைப்பிரிந்த துயரில் வாடும் அவரது உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

    பதிலளிநீக்கு

welcome