வெள்ளி, ஜனவரி 20, 2012

சுய நலம் .















சில பெண்கள் சுயநலமாக நடந்து கொள்வதை
பார்த்தால் ..மிகவும் அநாகரிகமாக வும் ,
வெறுப்பாகவும் ..தோன்றியது !மனதை
அதிகமாக பாதித்த சில விஷயங்கள்.பற்றி இங்கு 
சொல்கிறேன்!!எங்க வீட்டு இல்ல விழாவில்
நடந்த சில சம்பவங்களை பகிர்கிறேன்.!!!.
ஏன் விழாக்கள் வருகிறது ?
என்று எண்ண வைத்து வியக்கும்
படி அமைந்து விடுகிறது.!!!!

காசை கொட்டி அனைவரையும் அழைத்து விழாக்களை 
கொண்டாடுகிறோம்.!! எவ்வளவு தொலைவில் இருந்தோ 
இல்ல விழாக்களில் பங்கேற்க , பல நெருக்கடியான
 நிலைகளில்  அப்பாற்பட்டு , தவிர்க்காமல் கலந்து
கொள்கிறோம்...  முடிந்த பின்பு  , நன்றாக அமைந்தது !!
 என்று மனசார நினைக்கணும்.!!அனைவரையும்
முக மலர்ச்சியு டேன் வழி அனுப்பி வைப்பது 
தானே சிறப்பு?   குறை சொல்லி வெறுப்பை  காட்டி
பிரச்சனைகளை உருவாக்கி ...ஒரே நொடியில் !
ரண களம் ஆனால் எப்படி இருக்கும்.!!

இதை ஒரு அனுபவம் இல்லாத பெண் செய்து
 இருந்தால் கூட ஏற்று கொள்ளலாம்...விழா நாயகி ,
வயது முதிர்ந்த , வாழ்ந்து சலித்த ஒரு பெண் செய்தால் ...
 எத்தனை கஷ்டமாக இருக்கும்?

அதுவும் சாப்பிடும் பொருள்  பற்றி பிரச்சனை
என்றால் ..எத்தனை கேவலம்.? இது போல்
சம்பவங்கள் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.!

நெருக்கமான உறவின் 60 ம் கல்யாணம்.!!
அனைத்தும் நல்ல படியாய் முடிந்தது!!.
முடிந்தவுடன் ..பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்தது.

அவர்கள் சொந்த மகனை அத்தனை உறவினர்கள்
 முன் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல்
சகட்டு மேனிக்கு காய்ச்சி எடுத்தி விட்டார்கள்.
அதுவும் சாப்பாடு நடந்து கொண்டு இருக்கும் போது...
அருவெறுப்பாக இருந்தது அவர்கள் செய்யல.!!
எத்தனை பெரிதாக இருக்கட்டும் பிரச்சனை..,

அதை நாலு பேரு முன்னிலையில் போட்டா
 உடைப்பது?  மற்றவர்கள் என்ன  நினைப்பார்கள்
என்பதை பற்றி சிறிதும் கவலை படாத சுய நலம் 
கொண்ட ஜடங்கள்.!! யார் இவர்களுக்கு எடுத்து சொல்வது?

அடுத்து 50 ஆவது கல்யாண நாள் வைபோகம்.!
 ஊரை கூட்டி கொண்டாடி  முடிந்தது.  மறுபடியும்
சண்டை... விழாவில் பரிமாற வைத்து இருந்த 

அல்வா வை  காணோம்...அந்த பெண்மணியின்
தங்கை ,முழுவதையும்  அபேஸ் செய்து வீட்டுக்கு
கட்டி கொண்டு சென்று விட்டார்...அத்தனை
பேருக்கு என்று உள்ளதை  ஒருவரே  சுட்டு
கொண்டு செல்வது , எத்தனை கேவலமான
செய்யல? அந்த பெண்ணுக்கு தான் இங்கீதம் கிடையாதா?

தன தங்கை இடம் காட்ட வேண்டியது
தானே தன் கோபத்தை? நீ கொடுத்து  பழக்கியது
 தானே  அனைத்தும்...இப்ப தன் இஷ்டத்திற்கு
உரிமையுடன்  எடுத்து செல்கிறார் ..அதை தடுக்க
 முடியாமல் , இயலாமையை இப்படி 
வெளிப்படுத்தி !! கல்யாண நாளை , இழவு வீடாக மாற்றி ,
வாய் பேசாத கணவன், மற்றும் பிள்ளை களிட ம்
காட்டுவது எந்த விதத்தில் நியாயம்?


















கூட பிறந்த சகோதரி ஆனாலும்,,
தனக்கு மிஞ்சினது தானே தானம்?

நாகரீகம் தெரியாத இந்த பெண்களின்
 செயல் வந்தவர்களின் முகம்  சுளிக்க வைத்தது!!
 ஏன் தான் இப்படி இருக்கிறார்கள் என்று புரியலை!!


மற்றொரு இல்ல விழா வுக்கு சென்று வந்தோம்.!!
ஸ்வீட் எல்லாம் அந்த பென்னிடம்  இருந்து  காப்பாற்ற ..
அவர் வரும் முன்னே எடுத்து பத்திர படுத்த ஆரம்பிதநர்!
சுனாமி போல் வந்து அனைத்தையும் சுழட்டி 
சென்று விடும் என்று கமெண்ட்ஸ் வேறு!.
சாப்பிடும் பொருள் க் காக அடித்து கொள்வதை
 இங்கு தான் பார்த்தேன். ஒருவரே அனைத்தையும்
ஆக்ரமித்து கொள்வதை முதலில் தகர்க்க 

வேண்டும்!!.எபேர்பட்ட அமிர்தமாக இருந்தாலும் .
. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை
இந்த மாதிரி ஜென்மங்கள் முதலில் உணர வேண்டும்...
அடுத்து  அப்படியே எடுத்து சென்றாலும்..  மற்றவர்களும் 
சாப்பிட வேண்டுமே என்ற எண்ணம் வேண்டும்.
அவர்களுக்கும் சிறிதாவது விட்டு செல்ல
வேண்டும் ருசி பார்ப்பதுக்காக அட்லீஸ்ட்.!!!

3 கருத்துகள் :

  1. வணக்கம்.உங்கள் பதிவுகள் சில வாசித்தேன்.சமூக,குடும்ப அவலங்களைக் கடுப்போடு கவனித்து விமர்சித்திருக்கிறீர்கள்.

    இப்போது நீங்கள் சொல்லியிருக்கும் இதே நிகழ்ச்சியை நானும் பார்த்திருக்கிறேன் என் தோழி வீட்டில்.சாப்பாட்டை எடுக்கும்போது சொல்லவும் மெல்லவும் முடியாமல் தடுமாறுவாள என் தோழி.
    சொந்த அறிவு இல்லை சிலருக்கு !

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு! எழுத்துக்கள் மிகச் சிறியதாக உள்ளன. கவனிக்கவும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. thanks ஹேமா
    thanks திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு

welcome