செவ்வாய், டிசம்பர் 20, 2011

இப்பவாது கூப்பிடுவிகளா

மார்கழியும் வந்தாச்சு !! இப்பவாது கூப்பிடுவிகளா ?
என் வீடு அருகில்  பழுத்த பழங்களாக இரண்டு
பாட்டிகள் எப்ப பகவான் கூப்பிடுவார் ? என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் !  மார்கழி யில்  லாவது நாங்க போனா மோட்சம் உண்டு ..என்று கூறுகிறார்கள் .ஆண்டவன் அழைக்கும் போது தானே போக முடியும்.~! இவர்கள் கூறுகிறார்கள் ..எங்களை எல்லாம் விட்டு விட்டு கீதா அம்மா மட்டும் கொடுத்து வைத்தவர்கள் ,, எங்களை விட வயதில் சிறியவர் ..படுக்கையில் விழாமல் நல்ல பதத்தில் போய் சேர்ந்து விட்டார்கள் .,என்கிறார்கள்.(என் அம்மாவை)! ஏன் அம்மா உனக்கு இந்த அவசரம் .... என்று சொல்கிறார்கள்.
பகவானே இப்பவாது கூப்பிடுவிகளா எங்களை .?.என்று படுத்த வண்ணம்
தினம் பகவான் எப்ப கூப்பிடுவார் என்று எதிர் பார்த்து கொண்டு உள்ளனர்/

கஷ்டம் தான் படுத்து விட்டால்...என்ன  செய்வது ? அவரவருக்கு நேரம் வரும்
போது தானே செல்ல முடியும் ..கூட இருந்து பார்பவர்களுக்கு ..அதை விட கஷ்டம்!! எல்லாம் அவன் செய்யல ..நம் கையில் என்ன உள்ளது?பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்று நிச்சயம் உண்டு என்பார் அன் அம்மா! அது அவரவர் பிறப்பின் போது அன்றே ஆயுசு நிர்ணைக்க படுகிறது.பகவான் எப்ப
கூப்பிடுவார் என்று எதிர்பார்ப்பதில் ஒரு பலனும் இல்லை..இதுதான் உண்மை,

இருபது வருடங்கள் முன்பு என் அப்பா இறந்த போது மயானம் எடுத்து சென்று
தகனம் செய்தனர்.
என் அம்மா இப்போது இறந்த போது மின் மயானம் எடுத்து சென்று தகனம் செய்தனர். இப்பொழுது நடை முறை இது.
இனி நம் தலை முறையில் உடல் தானம் செய்வது சிறந்து .

காலகட்டங்கள் சுழற்சிக்கு ஏற்ப நாமும் மாறி தான் ஆகவேண்டும் ..ஏற்று கொள்ளும் மனோ பக்குவத்தை வளர்த்து   தான் ஆக வேண்டும்.

பகவான் கூப்பிடமாட்டேன்கிறார் ... என்பது எப்படி ஏற்று கொள்வது?

4 கருத்துகள் :

 1. உலகில் எதுவும் நிலையல்ல சோகங்களும் கவலைகளும்கூட கடந்துபோகும். இருக்கும்வரயல்ல இறந்தபின்பும் வாழும் வழியைச் சொல்லியிருக்கிறீர்கள். தானத்தில் சிறந்த தானமுடல் உறுப்புகளைத்தானம் செய்வது நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு.

  பதிலளிநீக்கு
 2. ஆம் சகோதரரர்.அனைவர்க்கும்
  விழிப்புனர்வு தேவை.
  நேற்று இதில் ஒரு பாட்டியை பகவான் அழைத்து கொண்டார்.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்/

  பதிலளிநீக்கு
 3. நவம்பர் மாதம் ஹைதையில் திருமணத்தில் ஒருவரை சந்தித்தேன். டிசம்பர் 15 வாக்கில் அவர் இயற்கை எய்திவிட்டதாக தகவல். அதுவும் எப்படி? இலவசவமாக சவங்களை எறியூட்ட உதவி செய்பவர். நண்பர்களிடம் பேசிவிட்டு ஜூஸ் குடித்து சேரில் அமர்ந்தவர் அமர்ந்த நிலையிலேயே உயிர் பிரிந்தது. :(

  பதிலளிநீக்கு
 4. ஆம் சகோதரி ., இந்த மாதிரி நல்லவர்களுக்கு தான் இது மாதிரி அமைகிறது.

  பதிலளிநீக்கு

welcome