வெள்ளி, நவம்பர் 25, 2011

சொந்த பந்தம்

   நம் சொந்த பந்தங்கள்  பற்றி இந்த இயந்தர யுகத்தில் நினைத்து பார்க்க கூட நேரம் இல்லாமல் ஓடிகொண்டிருக்கும் நேரத்தில்
...... சினிமாக்களில் வரும் கதா பாத்திரங்கள் போல் நிஜத்திலும் ஒரு சுவையான நிகழ்ச்சியை சமீபத்தில்   சந்தித்தேன்.கனவு போல் தோன்றிய இந்த நிஜம் சுவராசியமானது!!உண்மை...

நானும் ஊரில் இருந்து வந்த என் அக்காவும் ஷாப்பிங் சென்று விட்டு  
ஹோட்டேலில் டிபன் சாப்பிட ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தோம்.எதிர் சீட்டில் அமர்ந்து இருந்த நபர் எங்களை உற்று பார்த்து கொண்டே இருந்தார்...பார்வை எங்கள் மீதே இருந்தது !!..
சே எங்கே போனாலும் வந்துரும் சில ஜென்மங்கள் என்று நாங்கள் வேறு இடம் மாற்றி அமர்ந்தோம்.!!! கை  கழுவும் இடத்தில மீண்டும்  அந்த நபர் உற்று பார்த்து கொண்டே சென்றார்.பொறுமை  இழந்தோம் !

ஒரு வழியாக வெளியே வரும் பொது எங்களை துரத்தாத குறையாய் பின்னாடி மறுபடியும்  ஓடி வந்தார் ....நெற்றி கண்ணை திறந்த என் சகோதரி என்ன என்பது போல் முகத்தை திருப்பினார்.....நீங்க   ...  பரிமளா தானே ? சென்னை ? 
நான் ...................சாமியப்பன் !!!.. என்றார்.!!! ஆமாம் என்ற என் அக்கா என்னை பார்த்தார்.நான் சைகையில் எனக்கு தெரியலை என்றேன்...மீண்டும் தொடர்ந்தார் ........உங்களை எனக்கு அடையாளம் தெரிது !! ஆனா ,,,  என்று என்னை பார்த்தார்.!!!!! அத்தை நல்லா இருக்காங்களா ? என்றார் அக்காவிடம்


எனக்கு இப்ப தான் ஞாபகம் வருகிறது.. இருந்தாலும் சந்தேகத்துடன் நாகராஜன்? என்றேன்..ஆமாம் நான் சாமியப்பன் தான் (நாகராஜன்)என்றார்.
25 வருடங்களுக்கு முன்னாடி பார்த்தது.. எனக்கு கீதாவை அடையாளம் தெரியலை ...அண்ணியை தான் தெரிந்தது   கோபப்படாதீர்கள் !! என்றார்.,

சொந்த அத்தை பையனை ஹோட்டேலில் வைத்து சந்தித்தேன். 25    வருடங்களுக்கு முன் இரண்டு  குடும்பங்களுக்குள் மனஸ்தாபம் ..பேச்சு  வார்த்தை  இல்லாமல் போய .நல்லது  கெட்டதுக்கு கூட சந்திக்கவிலை!
சிறுவர் சிறுமியாக பார்த்து கொண்டது வளர்ந்தவுடன் முகபாவனை 
மாறிவிட்டது !!யாரோ என்று நினைத்து கொண்டோம்...இப்ப சந்தித்தவுடன் 
ஒரே ஆச்சரியமாக இருந்தது.அவர் அவருக்கு குடும்பம் குழந்தை என்று கால சக்கரம் உருண்டோடி விட்டது,அடுத்த தலை முறை வந்தாச்சு!! பரவா இல்லை ,இப்பொழுதாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததே ..என்று ஆண்டவனுக்கு நன்றி சொன்னோம் ..நாம் ஏன் இப்படி இருந்து விட்டோம்?
பெரியவர்களுக்குள் மனஸ்தாபம் என்றால் அவர்களுடன் போகட்டுமே..
சிறியவர்கள் நாம் ஏன் இப்படி விலகி இருந்து விட்டோம்..எங்கே செல்கிறது நமது கலாச்சாரம்...எவ்வளவு  தூரம் நாம் வந்து விட்டோம் என்று நினைத்தால் ..
மலைப்பாக உள்ளது ..பிரமிப்பாக உள்ளது!!! இதை  தான் விதி என்பாரோ ?
14 கருத்துகள் :

 1. மகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. என் தந்தையுடன் கூடப்பிறந்தவர்கள் 2 சகோதரர்களும், 8 சகோதரிகளும்.

  அனைவருமே ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்தும், ஏதாவது சுகதுக்கங்கள் நடைபெற்றால் அவற்றில் கலந்து கொண்டும் இருக்க, என் அப்பவின் தம்பி (சித்தப்பா) அவர் மனைவி
  (சித்தி) மட்டும் யாருடனும் ஒட்டாமல், சண்டையிட்டு உறவே வேண்டாம் என்று ஒதிங்கியிருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு பிள்ளை மட்டும்.

  தாங்கள் சொல்வதுபோல பெரியோர்களெல்லாம் காலமாகி விட்டார்கள். நானும், என் சித்தப்பா பிள்ளையும் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையின் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றும் படியாக நேர்ந்தது.

  சித்தப்பா பிள்ளை, பெரியப்பா பிள்ளை என்று ஒருவருக்கொருவர் தெரியும். ஆனால் பேச்சு வார்த்தைகள் இல்லை. எங்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் இல்லை.

  நான் என் பெரிய மகன் திருமணத்திற்கு என் அலுவலக ஊழியர்கள் சுமார் 300 பேர்களை அழைத்தேன்.

  அதே போல என் சம்பந்தி (அவரும் என்னுடன் அதே அலுவலகத்தில் பணியாற்றியவரே)
  தன் பெண் கல்யாணம் என்று அவர் தனியாக சுமார் 300 பேர்களுக்கு அழைப்பு கொடுத்திருந்தார். அவர் கொடுத்த அழைப்பில் என் சித்தப்பா பிள்ளையும் ஒருவர்.

  என் சம்பந்தியிடம் அவர் “என் பெரியப்பா பிள்ளைக்குத் தானே நீ பெண் கொடுக்கப்போகிறாய். கேள்விப்பட்டேன். நீ மட்டும் அழைப்பு கொடுத்தால் நான் வந்துவிட முடியுமா? என் தம்பி எனக்கு அழைப்புக்கொடுத்தால் தானே எனக்கும் பெறுமையாக இருக்கும்” என்று சொல்லிவிட்டார். அதை என் சம்பந்தி என்னிடம் வந்து கூறினார்.

  நான் நேராக என் மனைவியுடன் அவர் வீட்டுக்கே சென்று, 10 வயது பெரியவராக இருந்ததால் நமஸ்காரம் செய்து, பத்திரிகையுடன் புதுப்புடவை, வேஷ்டி முதலியனவும் கொடுத்து அழைத்து விட்டு வந்தேன்.

  அவருக்கும் அவர் மனைவிக்கும் அவர்களின் 2 பெண்களுக்கும் புது உறவை நான் மலரச்செய்ததில் ரொம்பவும் சந்தோஷம்.

  அன்று முதல் இன்றுவரை கடந்த 13 வருடங்களாக எங்கள் உறவு நீடித்து வருகிறது. இதற்கிடையில் என் அடுத்த 2 மகன்களுக்கும், திருமணம் ஆனது. அவருடைய 2 மகள்களுக்கும் கூட திருமணம் ஆனது. அவர் மகளின் திருமணங்கள் இரண்டுக்குமே நான் தான் உறவினர் என்று சொல்லிக்கொள்ளும்படியான VIP ஆக இருந்து, முன்நின்று அவருக்கு உதவிகள் செய்தேன்.

  தங்கள் பதிவைப்படித்ததும், எனக்கு இதுதான் ஞாபகம் வந்தது.
  அவரின் பெண்களி ஒருவள் சென்னையிலும், ஒரு மும்பையிலும் செளகர்யமாக உள்ளனர். சித்தப்பா, சித்தப்பா என்று என்னுடன் அன்புடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வருகிறர்கள்.

  மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 3. தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா!
  மிகவும் சுவராசியமாக இருந்தது !

  பதிலளிநீக்கு
 4. புதிய பதிவரான நான் தங்களின் பதிவுகளை விரும்பி படிப்பேன். தங்களின் சேவைக்கு எனது வாழ்த்துக்கள். மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 5. உங்கள் ஆதங்கப்பகிர்வு மனதை தொட்டது.வை.கோ அவர்களின் பின்னூட்டப் பகிர்வும் அருமை.

  பதிலளிநீக்கு
 6. தாங்கள் ஆதங்கப்படுவது மிகச் சரி
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. அருமை பாராட்டுக்கள்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  பதிலளிநீக்கு
 8. சந்தர்ப்ப சூழ் ந்ல தான் இப்படி ஒரு பிரிவு., வாழும் ொஞம் காலம்வரை உற்வுகளை அறவனைத்துu கொள்ளனும்

  உங்க பதிவும் சூப்ப்ர்

  வைகோ அவர்க்ளின் க்ருத்து பதிவும் சூuப்பர்

  பதிலளிநீக்கு

welcome