செவ்வாய், டிசம்பர் 27, 2011

போட்டு தாக்கு

சமீபத்தில் ஒரு விஷயம் என்னை மிகவும் பாதித்தது.
எனது தாய் மாமன்கள் வயது 77 , 69 இருவரும் அம்மாவை பார்க்க வந்து  இருந்தனர்..பெரிய மாமா மட்டும் முதல் வாரம் வந்தார்.பேசிக்கொண்டு இருக்கும் போது சின்ன மாமா பையன் ஆனந்த் (ஒரே பையன் ) பற்றி ஒரு விஷத்தை நக்கலாக அம்மாவிடம் சொன்னார். விஷயம் தெர்யுமா? நம்ம ஆனந்த் தண்ணீர் ,போதை மருந்து என்று சாப்பிட்டு, உடம்புக்கு முடியாம
வேலூர் சி  எம் சி சென்று மூன்று மாதங்கள்  பெற்றோருடன் அங்கேயே
வீடு எடுத்து தங்கி , சிகிச்சை பெற்று மிகவும் சீரியஸ் ஆக போய், பிழைத்து
வந்தது பெரிய ஆச்சரியம் போங்க என்றார்.எப்படியோ எந்த இழிச்சவாயன்

பொண்ணு கொடுத்தானோ ,தெரியலை ., சாமர்த்தியமா கல்யாணம் முடிச்சுட்டான் மகனுக்கு., நான் சொன்னதா கேக்காதீங்க.,நீங்களா
கேட்கிறமாதிரி கேளுங்க., என்றார் ., அந்த தாளாத வயதிலும் நையாண்டி
செய்து தம்பி குடும்பத்தை போட்டு தாக்கினார்...
(இதில் முக்கியமான விஷயம் இவர் வேலூர் சென்று பையனை நலம் விசாரிக்க செல்லவில்லை ., நடந்தது என்ன என்று துப்பறியும் வேலை
செய்ய புறபிட்டு சென்றாராம் !! அறிய கண்டுபிடிப்பை கூறினார்)

என் அம்மா உடனே., ஏண்டா உனக்கு கொண்டாட்டமா இருக்கா அவன்
கஷ்ட படுவது ? இப்ப என் கிட்ட சொன்ன மாதிரி வேறே யார் கிட்டயும்
போய் நக்கலாய் உன் தம்பியை பற்றி நீயே அவதூறு பேசாதே என்றார்.

அதற்கு முன்பு வாரம் தான் மற்றொரு சின்ன  மாமா அம்மாவை பார்க்க


வந்து இருந்தார்.அவர் இந்த மாமாவை பற்றி ஒரு நாள் முழுதும் குறை
சொல்லி கொண்டு இருந்தார். அப்போதும் அம்மா டேய் ஏண்டா இப்படி
உன் கூட பிறந்த அண்ணனை பற்றி பேசுறே ? முடிந்தால் உதவி செய்.,
இல்லாவிட்டால் உபத்வரம் செய்யாதே. பேசாம இரு.,என்றார். உடனே
அவர் ., நான் என்ன தப்பா சொல்லிட்டேன்., உங்க கிட்ட தானே சொன்னேன்
என்றார். சின்ன குழந்தைகள்  போல் இந்த வயதிலும் ஒருவருக்கொருவர்
போட்டு தாக்குகின்றனர்.  .. அதுவும்  கூட பிறந்தவர்களுக்கு இடையில் ...

என் சித்தி பையன் அவன் கூட பிறந்த அக்கா பையனை பற்றி நக்கலாக
அவன் யாருக்கும் தெரியாமல் லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டதை
விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்.  இதில் வேடிக்கை என்வென்றால்
அவருக்கு முதல் கல்யாணம் செய்து  டிவோர்ஸ் ஆகி இரண்டாவதாக
கல்யாணம் செய்து குழந்தை இல்லாமல் பிரச்சனயுடேன் உள்ளார்.!
நம்மை பற்றி யாராவது பேச எத்தனை நேரம் ஆகும் என்று யோசிக்கணும் இலையா? அடுத்தவர்களை கிண்டல் செய்து போட்டு  தாக்குவது எத்தனை
கேவலமான செயல் என்று ,இது எல்லாம்  ஒரு பிழைப்பா?
முதலில் நாம் எப்படி இருக்கோம் என்று  பார்க்கணும்...

தான் ஆடவிட்டாலும் தன சதை ஆடும் என்று கேள்விபட்டிருக்கோம்.
ஒரு கஷ்டம் என்றால் சரி செய்ய உதவ வேண்டுமே தவிர ., சிரிக்ககூடாது!
எத்தனயோ நல்ல விஷயங்கள் இருக்கு உறவுகள் இடையே பரிமாறிக்கொள்ள !.,அதை விட்டு, கேலி செய்து மற்றவர் மனம்
நோகும்படி பேசுவது எவ்வளவு  அசிங்கமாக உள்ளது! இனி வரும்
புது வருடத்தில் இவர்கள் திருந்த நாம் பிராத்திப்போம்.!

10 கருத்துகள் :

 1. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  பதிலளிநீக்கு
 2. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  பதிலளிநீக்கு
 3. // இனி வரும்
  புது வருடத்தில் இவர்கள் திருந்த நாம் பிராத்திப்போம்.!//

  எல்லா வீட்டிலும் இப்படிப்பட்டவங்க இருக்காங்க கீதா .இவங்க திருந்தர மாதிரி தெரியல்ல .என்ன செய்றதுன்னே புரியல .இறைவனின் படைப்பில்தான் எத்தனை எத்தனை விதமான மனித மனங்கள் .
  வயசாகியும் gossip பேசுவது /பிறரை நக்கலடிப்பது தவறென்பது இவங்களுக்கு எல்லாம் தெரியாதா .புது வருஷத்திலாவது இறைவன் இவர்களுக்கு நல்ல புத்தியை தரட்டும் .

  பதிலளிநீக்கு
 4. இதுபோல மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். அவரவர்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது தான் அதன் வலி தெரியும். முடிந்தால் உதவ வேண்டும். அல்லது பேசாமலாவது வீண் பேச்சுகளும் வம்புகளும் பேசாமலாவது இருக்க வேண்டும். தாங்கள் சொல்வது மிகவும் நியாயம் தான். vgk

  பதிலளிநீக்கு
 5. வீட்டுக்கு வீடு வாசப்படி. இவங்களைத் திருத்தவே முடியாது. இவர்களைக்கண்டால் நாம உசாராகிக்கவேண்டியதுதான். இல்லையின்னா நம்ம கதையையும் இன்னுமொரு இடத்தில் போட்டுத்தாக்கிடுவாங்க

  பதிலளிநீக்கு
 6. வை.கோபாலகிருஷ்ணன் sir தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 7. திண்டுக்கல் தனபாலன் sir மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு

welcome