செவ்வாய், செப்டம்பர் 27, 2011

மஹாளய அமாவாசை

இன்று மஹாளய அமாவாசை....விசேஷ்மானது !..நம் முன்னோர்களுக்கு
செயும் பித்ரு பூஜை இன் நாளில் விமர்சையாக கொண்டாடும் தினம் .
சென்ற அமாவாசை அன்று தான் என் அம்மா விரதம் இருந்தார்கள் .
பக்தி உடன் திருப்பதி வெங்கடாசலபதி யை  எங்கள் பூஜை அறையில் 
கும்பிட்டு ... அன்றைய அமாவசை தினத்தை கழித்தார் .... அன்று இரவு 
நிறை அமாவாசை அன்று எங்களிடம்.விடை பெற்று சென்று விட்டார்.

இதோ இந்த மஹாளய அமாவாசை க்கு  அவர் படத்துக்கு படையல் 
போட்டு ..அண்ணன் திருமூர்த்தி மலை சென்று இன்று தர்ப்பணம் 
செய்து விட்டு... வந்தது ...கனவா அல்லது நிஜமா என்று தெரியலை.

அதற்குள் 30  நாட்கள் உருண்டோடி விட்டத்தை நினைத்து நம்பாமல்
இருக்கவும் முடியலை !!!!..கால சகரம்  வெகு  வேகமாக சுழல்கிறது !!

போன அமாவாசை அன்று தான் என் தாயார் எங்களை தவிக்க விட்டு 
சென்ற கடைசி நாள்!!  என்  வாழ்கையில் மாறாக முடியாத தருணம்...

எல்லாமே முடிந்து விட்டது ....என் கண்கள் குளமாகிறது !! என் கூடவே

எனக்கு பக்கபலமாக இருந்த என் தாய் இன்று என்னுடேன் இல்லை.

ஒவெரு மஹாளய அம்மாவசை அன்றும் பசு மடம் பித்ரு பூஜைக்கு 
என் அம்மா பணம் அனுப்பு வார்கள் ...இந்த மஹாளய அமாவாசைக்கு
அவர்களுக்கும் சேர்த்து அனுப்ப வேண்டி ஆகி விட்டது.!! அவர்கள் 
ஆத்மா சாந்தி அடைய இறைவனை நாடுகிறேன்!!
 

6 கருத்துகள் :

  1. மிகவும் வருத்தமான செய்திதான். அம்மாவை இழப்பது என்பது (அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு) ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு தான்.

    அவர்கள் ஆத்மா ஸாந்தி அடையட்டும். தாங்களும் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். நாளடைவில் தான் இந்த துக்கம் குறையக்கூடும்.

    பதிலளிநீக்கு
  2. முந்தைய பதிவில் படிச்சப்பவே மிகவும் துக்கமாக இருந்தது கீதா .
    .உங்கள் வேதனை புரிகிறது .அம்மா ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  3. அவர்கள்
    ஆத்மா சாந்தி அடைய இறைவனை நாடுகிறேன்!!

    பதிலளிநீக்கு
  4. அம்மாவின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது கீதா,உங்க வேதனை புரிகிறது.அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு பக்கபலமாக இருந்த
    உங்கள் தாயின் ஆத்மா என்றும் உங்களுடனே
    இருந்து உங்களை காக்கும்...
    அவர்களின் ஆத்மா சாந்தியடைய
    இறைவனை வேண்டுகிறோம்...

    பதிலளிநீக்கு
  6. எனக்கு ஆறுதல் அளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும்
    தலை வணங்குகிறேன் .

    பதிலளிநீக்கு

welcome