சனி, ஜூலை 30, 2011

புரியாத பாஷை

சில நேரங்களில் நம் பாஷை பல சந்தர்ப்பங்களில்
புரியாத புதிர் ஆகி விடுகிறது.
நான் சென்னை வாசி ... உடுமலை -கோவையில்  நான் புதிதாக அங்கு
பேசும் பாஷைகள் பார்க்கும் போது எனக்கு பல வார்த்தைகள்
அப்போது வியப்பாக இருந்தது !
புரியாத பாஷை வார்த்தைகள்
சண்டை கட்டுவது
செருப்பை தொடுவது.
பகலை
ரகளை
தோட்டம்
தனியா \\

நானும் என் பக்கத்து வீட்டு காரரும்  சண்டை கட்டினோம் என்றார்.பார்த்தால் ......  ஆர்க் யூ  அதாவது ...  ஒருவருக்கொருவர் பேசுவதை
சண்டை கட்டுவது என்கிறார்.

என்  தோழி ஒரு நிமிஷம் இரு செருப்பை .. தொட்டு  விட்டு  வரேன் என்றாள்.
செருப்பை எதற்கு தொடணும்? மண்டையை பிய்த்து கொண்டேன் !
கடைசியில் ... போலாமா ? என்று செருப்பை போட்டுகொண்டு வந்து
கேட்டாள்.  பிறகு தான் புரிந்தது.. செருப்பை தொடுவது 
என்றால் செருப்பை மாட்டிகொள்வது என்று அர்த்தம்..

அடுத்து தோட்டத்துக்கு போயிட்டு வரேன் என்றார்..நண்பர்..
நான் வீட்டுக்கு பின்னால் இருக்கும் தோட்ட த்தை  பார்க்க
எதற்கு செல்கிறார் ? என்று குழம்பி நின்றேன் !

அப்ப தான் புரிந்தது !! ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னந்
தோப்பு ,வாழை தோப்பை தோட்டம் என்று கூறுகிறார் என்று.. 


ஒரே ரகளை போங்க எங்க வீட்டில்  என்றார்...ரகளை என்றால்
ஏதோ பயங்கரமா சண்டை என்று  நினைத்தேன்.  பிறகு தான்
புரிந்தது !! ரகளை என்றால் விடாமல் தனக்கு வேண்டும்
என்று அடம் பிடிப்பதை தான் அப்படி சொல்லி இருக்கிறார் என்று..!!

மிளகாய் தனியா கொடுங்க என்று மளிகை கடைக்காரரிடம் கேட்டேன்.
கடைக்காரர் கொடுத்தார். பார்த்தால் மிளகாய் மட்டுமே இருந்தது.
கேட்டால் மிளகாய் தனியா கட்டி கொடுத்து  இருக்கேன் என்றார்.
தனியா எங்கே ?  என்றால் ..மிளகாயை காட்டுகிறார்.10 நிமிடம்
போராட்டத்துக்கு பிறகு மிளகாயை தனியாக கொடுத்து இருக்கார்.
நான் தனியா என்றது கொத்த மல்லி விதையை..  கடைக்காரரோ
மிளகாயை தனியாக கேட்டேன் என்று நினைத்து  கொடுத்து உள்ளார்.
Add caption

இன்னும் சில (இது போல)
கிகோட்டில -  கிழக்கிலே 
பகலை   என்றால்  பலகை என்பது
மேராக்காய் என்றால் சௌ சௌ
கருஞ்சி குட்டி (சுக்குட்டி )என்றால் மனத்தக்காளி (மிளகு தக்காளி)


இப்போ எல்லாம் சகஜமப்பா!
எங்களுக்கும் தெரியும் இல்ல !

 

12 கருத்துகள் :

  1. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சில பேச்சு வழக்குகள் இருக்கு நமக்கு எளிதில் புரியாது. நானும் ஆரம்பத்துல முழிச்சி இருக்கேன் . :-)

    பதிலளிநீக்கு
  2. தனியா இன்னும் பல பேருக்கு தெரியாது தான்.... சக்கரை என்றால் சீனி. ஆனா இங்குள்ள கடைகளீல் கேட்டால் வெல்லத்தை கொடுப்பாங்க :)

    பதிலளிநீக்கு
  3. நான் மிகச்சிறு பையனாக (10 வயது) இருக்கும்போது, ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்தேன். என் பெரியம்மா எங்கோ வெய்யிலில் போய்விட்டு வந்தவள், என் வீட்டுக்குப்போய் என் அம்மாவிடம் துரவல் வாங்கிவா என்றாள். என் பெரியம்மாவைக்கண்டால் எங்கள் எல்லோருக்குமே ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு. நான் நேராக என் வீட்டுக்குப்போய் தேங்காய் துருவக்கூடிய துருவளகாயைக் (அருவாமனை போல இருக்குமே)கொண்டுவந்து, ஒரு திண்ணையில் அமர்ந்திருந்த, என் பெரியம்மாவிடம் கொடுத்தேன். அவர்களுக்கு வந்ததே கோபம்; ”இந்தத்திருவளகாயை வைத்து நான் என் மண்டையைச் சுரண்டிக்கொள்ளணுமா” என்று என்னிடம் கத்தினார்கள். நான் பயந்து போய் என் அம்மாவை அழைத்து வந்தேன். பிறகு தான் தெரிந்தது, அவர்கள் என்னிடம் வாங்கிவரச்சொன்னது, அவர்களின் பூட்டியிருக்கும் வீட்டைத் திறப்பதற்கான “சாவி” என்று. சாவியைத் துறவல் என்று சொல்லியிருக்கிறார்கள் அந்த மிகவும் வயதான என் பெரியம்மாக் கிழவி.

    இப்போ நினைத்தாலும் ஒரே சிரிப்பு தான். அது போலவே நீங்களும் இந்தப்பதிவில் பல எழுதியுள்ளீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஜெய்லானி :ஆரம்பத்துல முழிச்சி இருக்கேன்!அப்ப இப்ப ?ஒக்கே வா ?

    பதிலளிநீக்கு
  5. ஆமாங்க அமீனா ,பல பேருக்கு தெரியாது தான்....கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க அய்யா ! மிகவும்
    ஸ்வராசியமாக இருந்தது
    தங்களின் பகிர்வு ! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ஹா ஹா ஹா இப்பத்தான் அனுபவ படரீங்களா .நானெல்லாம் எப்பவோ .

    இன்னும் நிறைய இருக்கு சகோதரி ,கேட்டால் அதுதான் உண்மையான வார்த்தை ,நாம் பேசுவது இல்லை என்கிறார்கள் .

    விடுங்க சகோதரி அது அவர்களுடைய
    வழக்கம் .

    பதிலளிநீக்கு
  8. ஆஹா... சீனி (சர்க்கரை)கேட்டால் கடைக்காரர் கடையில் வேலை செய்யும் சீனிவாசனை பொட்டலம் கட்டிவிட பொகிறார்.... ஹி ஹி..பகிர்வுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  9. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோ M.R !!

    பதிலளிநீக்கு
  10. மிக நன்றி ஆமினா !! இதோ செல்கிறேன் ..

    பதிலளிநீக்கு
  11. I'd like to find out more? I'd care to find out some additional
    information.

    my webpage how to get more followers on instagram

    பதிலளிநீக்கு

welcome