வியாழன், ஜூன் 16, 2011

தவமி .. எவவெ ...

கொ மு !  தவமி .. 
கொ பி !   எவவெ ..
ஓகே.கரெக்ட்?
என் தங்கை அவள் தோழி போனில் 
பேசிகொண்டார்கள். !!
அது  என்ன தவமி ? தகதிமி?.....
என்ன பாஷை பேசுகிறார்கள்..
க  பாஷை போல் இதுவும் ஒன்றா?
இன்றைக்கு தசமி என்பதை தான் 
அப்படி தவமி னு சொல்றாங்களா? 
பேசி  முடிக்கும் வரை சஸ்பென்சுக்காக 
காத்து  இருந்தேன்.!! இது தான் விஷயம்.!

புளியோதரை செய்ய பொடிகள் வறுத்து
அரைக்க இப்படி ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக

மனதில் வைத்து கொள்வார்களாம்.!!

தவமி என்றால் ..தனியா ,வர மிளகாய் , மிளகு 
அது என்ன  கொ மு ? என்றேன் ஆச்சரியத்துடன் !!

அது புளி கொதிக்கும் முன்பாம் !! சபாஷ் !

எவவெ ..என்றால் ... எள்ளு ,வரமிளகாய் ,வெந்தயம் .

கொ பி  என்றால் புளி கொதித்த பின்பா ? என்றேன்!!
கரெக்ட் அக்கா !  எவவெ  மட்டும் சாதம் கிளறும் 
போது கடைசியில் தூவி இறக்க வேணும் ..போ..
அதான் என்ன பொடி என்பதை கூறி விட்டேன் !!லேட்
பண்ணாம்மே  சீக்கிரம் கிளறி எடுத்து ட்டு வா பாக்கலாம்..
என்றாள். ...நானும் மறக்காமல் இருக்க  தவமி ..    எவவெ ... 

என்று சொல்லிக் கொண்டே கிட்சேன் சென்றேன்.!!!!!

எங்க தாயம்மா .. என்னை ஒரு மாதரி பார்த்து கொண்டே 
என்ன அம்மணி ஒரே யோசனையாக இருக்கே? என்றது.
பேசினால் தவமி ..    எவவெ ... மறந்து விடும் !
என்று மௌன்னமாக  சென்றேன்!  
வெ வ் வெ வே என்று யாரும் நினைக்கா விட்டால் .. சரி ! 

ந மீ ச !!!!!!  அதாங்க ....நன்றி மீண்டும் சந்திப்போம் ங்க !!!

8 கருத்துகள் :

  1. இ ப ரொ ந இ.
    பா, வா !




    [இந்தப்பதிவு ரொம்ப நல்லா இருக்கு.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்]

    பதிலளிநீக்கு
  2. ஒரு நிமிஷம் ஒன்னும் புரியலேங்க !
    நல்ல வேலை விளக்கி இருந்தீர்கள் இல்லாவிட்டால் தலை சுற்றி இருக்கும்
    நன்றி ஐயா !

    பதிலளிநீக்கு
  3. சமையல் செய்யும் முறையை எளிதாகவும் இனிமையாகவும் மற்றும் வழியின் மொழி இது

    செய்யும் செயலில் முழு ஈடுபாடு இருந்தால் மட்டுமே இது சாத்தியம்

    பகிர்வுக்கு நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
  4. அ த உ வே (அந்த தட்டு உடனே வேண்டும் ரொம்ப பசிக்குது )

    பதிலளிநீக்கு
  5. angelin அ த உ உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்!! அது வரை கொஞ்சம் பொறுத்து கோங்க !

    பதிலளிநீக்கு
  6. வாங்க சகோதரரே
    வழியின் மொழி
    அழகாக சொன்னீர்கள் !

    பதிலளிநீக்கு
  7. தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக நன்றி ராஜேஸ்வரி ! என்னை அறிமுக
    படுத்தியததர் க்கு மகிழ்ச்சி !

    பதிலளிநீக்கு

welcome