திங்கள், ஜூன் 06, 2011

டீன் ஏஜ் பெண்களே ஸெல்ப் கண்ட்ரோல் வேணும்



எப்ப பார்த்தாலும் செல்லை வச்சுகிட்டே 
பொழுதை போக்கிட்டே இருந்தால் போதும்..
இந்த பக்கம் வந்து தொலை .. சனியனே..

 பக்கத்து வீட்டில்.. அம்மா கூறுவது கேட்டது.

ஏன் லீவுல கூட உசிரை வாங்குறே...டீன் ஏஜ் மகள் !

இந்த செல் போனை கண்டு பிடித்தவனை நிக்க
வச்சு சுடனும்.மறுபடியும் அம்மா கத்துவது 
கேட்டது. அதுலயும் மெசேஜ் (எஸ் ம் ஸ்) கண்டு 
பிடித்தவனை நிலை படியுல வச்சு வெட்டனும்...

சும்மா கத்தாதே !! வேறு வேலை இருந்தால் 
போய் பாரு..மனுஷன் லீவுல கூட நிமதியா 
இருக்க முடியலே.!! மீண்டும் டீன் ஏஜ் மகள் !

நீ சொல்லுடா .. எங்க அம்மா கத்துது.!! அதுக்கு
வேறு என்ன வேலை? பொழுதன்னைக்கும்
என்னை கரிச்சு கொட்டாட்டி அதுக்கு துக்கம் 
வராது! விட்ட இடத்தில இருந்து மகள் 
செல்போனில் தொடர ஆரம்பித்து விட்டார்.!

நாளைக்கு பார் பேச செல்போன் இருக்கானு. 
ரூபாய் போனாலும் பரவா இல்லை ...தலைய 
சுத்தி .. விட்டு எறிகிறேன்..அப்புறம் எப்படி 
மெசேஜ் அனுப்ரே னு பாப்போம்.மீண்டும் அம்மா 

சட் அப் மா... இதோட நிறுத்துரியா ஒப்பாரியை ..

உனக்கு செல் வாங்கி கொடுத்த உங்க அப்பாவை 
சொல்லணும் டி .. அறிவு கெட்ட நாயே..இந்த மாதம் 
வரட்டும்..அப்புறம் வச்கிறேன் கச்சேரியை.!!
ஸெல்ப்  கண்ட்ரோல் இல்லாதவளுக்கு எல்லாம் 
எதுக்கு செல்போன்..சே!! உரத்த குரலில் அம்மா  


இத்தனைக்கும் பட்டதாரிகள் அம்மா அப்பா 

பெண் பி ஈ கம்ப்யூட்டர் இஞ்சினீயர் முதல் 
வருடம் படிக்கிறாள்.அப்பாவுக்கு தொலை 
தூரத்தில் உத்தியோகம்.மாதம் ஒரு முறை 
மட்டுமே வந்து போவார்.மகளுக்கு அட்வைஸ் 
செய்வதோடு சரி.அணைத்து காரியங்க்களை
அம்மா மட்டுமே ஒன் மேன் ஆர்மி போல் 
குடும்பத்தை நிர்வகித்து ,வேலைக்கும் போய் 
கொண்டு , வீட்டயும் பார்த்து கொள்ளுகிறார்.!

 இந்த டீன் ஏஜ் பெண் என்ன என்றால்...எப் போதும்
செல்லும் கையுமாக வலம் வருவார். மெசேஜ் 
அனுப்பிய வண்ணம் எப்போதும் உட்கார்ந்து 
இருப்பார்.வண்டி ஓட்டும் போது கூட செல்லில் 
மெசேஜ் படிப்பார்..நானே பார்த்து இருக்கேன்.

வண்டி ஓட்டும் போது செல் போன் அடித்தால் 
கூப்பிடுவது எமனாக கூட இருக்கும் என்பது 
அந்த இளம் ரத்தத்துக்கு தெரியாதோ போலும்.
அவளவு மும்மரமாய் செல்லில் ஆழ்ந்து 
போய் இருப்பார் அந்த டீன் ஏஜ் பெண்.
அவர் அம்மா கத்துவதில் தவறு ஒன்றும் இல்லை 
என்று நினைத்து கொள்ளுவே ன்!! பாவம் அந்த அம்மா '
என்று பரிதாபம் கொள்வேன்.  ஒரு முறை அந்த 
அம்மா என்னிடம் வந்து .. இந்த எஸ் எம் ஸ் அனுப்புவதை 
மட்டுமாவது லாக் செய்ய ஏதாவது வழி உள்ளதா ?
என்று கேட்டார். நானும் பார்த்து சொல்லுகிறேன் 
என்று சொன்னேன். நேற்று இருவரும் காரா சாரமாக 
சண்டை போட்டு கொண்டது எனக்கு மிகவும் 
வருத்தமாக இருந்தது ....அந்த பெண்ணை அழைத்து 
அட்வைஸ் பன் ணலாமா என்று கூட நினைத்தேன்.

இன்றைய டீன் ஏஜ் பெண்களுக்கு அதெல்லாம் 
ஏறராது மண்டையில் என்று விட்டு விட்டேன்...

அந்த அம்மா சொன்னது போல் ஸெல்ப் கண்ட்ரோல் 
இல்லை என்றால் ...இவர்கள் எப்படி திருந்து வார்கள் ?

இத்தனைக்கும் இந்த பெண்களுக்கு தனியாக போய் 
தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொள்ள கூட 
துப்பு கிடையாது.அம்மா முந்தானையை பிடித்து 
கொண்டு தான் பெரும்பாலோனோர் செல்கிறார்கள் !

அம்மா அட்வைஸ் பண்ணினால் மட்டும் பிடிக்காது.
வேலையே பார் என்று எகத்தாளமாக சொல்லுபவர்கள் 
நாளைக்கு இவர்களும் ஒரு பெண்னுக்கு தாய் ஆகும் போது 
 தான் தன தாயின் அருமை தெரியும் போல்.!! அது வரை 
இளம் இரத்தம் இப்படி தான் பயம் அறியாமல் ஆடும்.

இவர்களுக்காக புரியும் போது தான் இவர்கள் ஆட்டத்தை 
நிறுத்து வார்கள். சமீபத்தில்  ஒரு ஆராய்ச்சியில் 
செல்போன்னால் புற்று நோய் ஆபத்து என்பதை 
எல்லாம் இவர்கள் ஒத்து கொள்வதே கிடையாது.

வண்டி ஓட்டும் போது கன்ட்ரோலை விட்டு விட்டால் ..
வண்டி எப்படி தறி கேட்டு நிலை தடுமாறி முட்டி மோதும்   

அது போல் இளம் பெண்களே ..உஷாராய் இருங்க ..
செல் அடிமைகளாய் மாறி உங்கள் வாழ்கையை 
துலைத்து விடாதீர்கள். ஸெல்ப் கண்ட்ரோல் லை 
இழந்து தொழில் நுட்பத்தை தவறாக பயன் படுத்தாமல் 
எல்லா விசயங்களிலும் ஜாகிரதையாக அடி எடுத்து 
வைக்காவிட்டால் , உங்களுக்கு தான் கஷ்டம்.

கண்ணாடியில் கல் பட்டாலும், கல் மீது கண்ணாடி 
பட்டாலும் , கண்னாடிக்கு தான் நஷ்டம் என்பதை 
மனதில் கொள்ளுங்கள்.செல் போன் பேசுங்க '
மெசேஜ் அனுப்புங்க..ஆனால் அதயே வேலையாக 
கொள்ளாதீர்கள் !. மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பு 
கொடுத்து அடுத்தவர் மனம் நோகாத வண்ணம் ,குறிப்பாக 
பெற்றவர்கள் முகம் சுளிக்காத வண்ணம் நடந்து 
கொள்ளுங்கள்.அவர்களை விட உங்களுக்கு 
வேறு யாரும் உங்கள் மீது அக்கறை கொள்ள 
முன் வர மாட்டார்கள். பரண்ட்ஸ் காட்டிலும் 
உங்கள் பெற்றோர் உங்கள் நலனில் அதிகம் 
அக்கறை கொளவார்கள் என்பதை எந்த 
சநதரப்பத்திலும் மறந்து விடாதீர்கள் டீன் ஏஜ் பெண்களே.

இதற்கு முன்பும் இது போல் பதிவு போட்டு இருந்தேன்.


மறுபடியும் உங்கள் நலனுக்காக , இன்று பெரும் பாலோநேர் 
வீட்டில் இது போல் பிரச்சனைகள் செல் போன் னால்
வந்த வண்ணம் இருப்பதால் தான் மீண்டும் டீன் ஏஜ் 
பெண்களுக்காக .. கருத்தில் கொண்டு எழதுகிறேன்.

ஆல் தி பெஸ்ட் டீன் ஏஜ் ர் ஸ்..  டோன்ட் கெட் ஆங்ரி ! 

24 கருத்துகள் :

  1. சரியாய் சொன்னீர்கள்.இந்த செல் போன வச்சிக்கிட்டு இவங்க ஆடுற ஆட்டம் இருக்கே ...யப்பா......

    பதிலளிநீக்கு
  2. எனக்கு இதை படித்ததும் பல விஷயம் மனசுல தோணுது
    ஏதும் தவறாக இருப்பின் please delete my comment.
    ஒரு செல் போன் விலை பத்து பதினைந்து ஆயிரம் இருக்கும்
    படிக்கிற பிள்ளைகளை கெடுத்தது பெற்றோர்தானே .
    எல்லா நாட்டிலும் இந்த பிரச்சினை இருக்கு
    காதில் ear phone மாட்டிட்டு ரோடு கிராஸ் பண்ணுவாங்க தங்கள சுத்தி
    என்ன நடகுன்னே தெரியாது இந்த பிள்ளைகளுக்கு .
    //மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பு
    கொடுத்து அடுத்தவர் மனம் நோகாத வண்ணம் ,குறிப்பாக
    பெற்றவர்கள் முகம் சுளிக்காத வண்ணம் நடந்து
    கொள்ளுங்கள்.// சரியாக சொன்னீர்கள் .
    இங்கெல்லாம் பெரியவங்களோ இல்ல சின்னவங்களோ p and q (please,thankyou ) சொல்லாட்டி முறைப்பு கிடைக்கும் )
    நேற்று church போயிருந்த போது சர்வீஸ் நடக்கிற நேரத்தில் ஒரு டீன் ஏஜ் ,sms செஞ்சுட்டிருக்கு .ஆலயம் ,கோவில் இதெல்லாம் இறைவனை வழிபடும் இடங்கள் இங்கே கூடவா செல் போன்
    (1,வளர்ந்த மகள் தாயை வா போ என்று மரியாதை குறைவாக அழைபதா
    2, அந்த தாய் பிள்ளையை சனியனே என்றெல்லாம் விளிப்பது
    3, நாய் .ஒப்பாரி ,அது இது
    பல வருட வெளி நாட்டு வாழ்க்கையில் எனக்கு இதெல்லாம் வித்யாசமா
    தோணுதா ).இந்த பெண் தாயை மதிக்கா விட்டால் எப்படி அவள் நண்பர் மதிப்பார்கள் ?.
    //அட்வைஸ் பன் ணலாமா என்று கூட நினைத்தேன்.//
    வேண்டாம் கீதா
    இவர்களுக்காக புரியும் போது தான் இவர்கள் ஆட்டத்தை
    நிறுத்து வார்கள்.
    பின்னூட்டம் பெரிதாகிவிட்டது மனசுல பட்டத எழுதிட்டேன் .

    பதிலளிநீக்கு
  3. correctஆக சொன்னீங்க...ஆனா யார் கேட்கிறாங்க..

    இப்படி தான் நிறைய பசங்க இருக்காங்க...

    பதிலளிநீக்கு
  4. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக நன்றி கீதா !!

    பதிலளிநீக்கு
  5. angelin பல விஷயம் மனசுல தோணுது
    அதை வெளிபடுத்த தான் இந்த பின்னூட்டம்.எதற்காக நீக்கணும்.உங்க கருத்து தெளிவாக இருக்கு .நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பெற்றவர்கள் முகம் சுளிக்காத வண்ணம் நடந்து
    கொள்ளுங்கள்.அவர்களை விட உங்களுக்கு
    வேறு யாரும் உங்கள் மீது அக்கறை கொள்ள
    முன் வர மாட்டார்கள். பரண்ட்ஸ் காட்டிலும்
    உங்கள் பெற்றோர் உங்கள் நலனில் அதிகம்
    அக்கறை கொளவார்கள் என்பதை எந்த
    சநதரப்பத்திலும் மறந்து விடாதீர்கள் டீன் ஏஜ் பெண்களே.


    சத்தியமான வார்த்தைகள்
    நாம் நல்ல இருக்கணும் என்று நம் பெற்றோரை விட யார் அதிகமாக ஆசைப்படுவார்கள், இந்த கால பெண்கள் யோசிக்க வேண்டும் , நானும் வீட்டில் ஒரு அணுகுண்டு வச்சிருக்கேன் அது என்ன பண்ண போவுதோ ,
    மிக அவசிய பதிவு தோழி நன்றி

    பதிலளிநீக்கு
  7. அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.

    ஆனா இப்படி ஏசாமல், அன்பாலதான் திருத்தமுடியும் ரீச் ஏச் வந்தாலே கைக்குள்போட்டுத்தான் எம் வழிக்கு வரவைக்கவேண்டும்.. இப்படித்தான் நான் நினைப்பதுண்டு, முடியுமோ தெரியாதே... உலகம் எங்கும் இதுதான் நடக்கிறது. விட்டுப்பிடிக்கவேண்டும், ஆனா கண்காணிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. மகளீர் கடலுக்கு என் வலைப்பூவிலும் உங்களை மாதிரி லிங்க் கொடுக்க ஆசை. எப்படி செய்வது??

    பதிலளிநீக்கு
  9. புதுகைத் தென்றல் வாங்க
    http://magalirkadal.blogspot.com
    தமிழ் மகளிருக்கு இந்த திரட்டியை அறிமுகப் படுத்துங்கள் என்பதை செலக்ட் செய்து கீழே
    உள்ள ஸ்க்ரிப்டை காப்பி செய்து
    லே அவுட் சென்று ஹெச்டிம எல் /ஜாவா ஸ்கிரிப்ட் செலக்ட் செய்து பேஸ்ட் பண்ணி save பண்ணுங்க .
    இணைப்பு கிடைத்து விடும் !

    பதிலளிநீக்கு
  10. nice read geetha and very well said- hope teenager n especially girls are listening !

    பதிலளிநீக்கு
  11. Nandrga chonnai Geetha.
    Teenagers parvayel ethu pattal nandayai errukkum.
    viji

    பதிலளிநீக்கு
  12. எனக்கென்னவோ , அம்மா பெண்ணிடம் கடினமாக நடந்து கொள்வது சரியென்றுதான்படுகிறது. இந்த பஞ்சாயத்திலேயே உள்ளுக்குள் பயம் இருக்கும். இதற்குமேல் தவறு செய்ய தோன்றாது. அம்மா கத்தி தீர்க்கும் பயம் இருக்கும். அப்பாவின் செல்லமும் சரிதான், வீட்டின்மேல் நம்பிக்கை இருக்கும். டீன் ஏஜில் இது மட்டும் பிரச்சினையாக இருப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
  13. சாகம்பரி மேடம் வாங்க ,நீங்கள் சொல்வது முற்றிலும் சரி!

    பதிலளிநீக்கு
  14. குட் போஸ்ட்.. பிளாக்கின் லே அவுட் செம

    பதிலளிநீக்கு
  15. தமிழ்மண ஓட்டு நீங்களே உங்களுக்கு போட்டுக்கலை.. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  16. சி.பி.செந்தில்குமார் வாங்க !
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. டீன் ஏஜ் வயதில் பெண்கள் நீங்கள் சொல்வதைப் போல்தான் செல்லும் கையுமாய் இருக்கின்றனர். பையன்களும் அப்படித்தான்.
    உள்ளனர். பட் பெண்கள் சதவீதம் கொஞ்சம் அதிகம் என்று நினைக்கிறேன். உங்க பதிவைப் பார்த்து அட் லீஸ்ட் ஒரு பெண் திருந்தினால்
    அந்த பெருமை உங்களுக்குத்தான். கீப் இட் அப்.

    பதிலளிநீக்கு
  18. ஆமாம் சார், ஒரு டீன் ஏஜ் பென்னாவது
    இதை பார்த்து திருந்தினால் எனக்கு சந்தோசம் தான் !

    பதிலளிநீக்கு
  19. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.உபயோகமான பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

welcome