சின்ன வீடு ... பொரட்டா கார அம்மா
படுத்து இருக்கிறார் ! அவரை சுற்றி
அவருடைய நான்கு பெண்கள் அமர்ந்து
இருந்தநர்.என் கண்கள் நாகராஜை
தேடியது !! மருமகன்கள் தலைகள்
மட்டுமே தெரிந்தது.நிசப்தமாக இருந்தது.
படுத்து இருக்கிறார் ! அவரை சுற்றி
அவருடைய நான்கு பெண்கள் அமர்ந்து
இருந்தநர்.என் கண்கள் நாகராஜை
தேடியது !! மருமகன்கள் தலைகள்
மட்டுமே தெரிந்தது.நிசப்தமாக இருந்தது.
தேங்க்ஸ் google images |
குப்பை கார அம்மா கூறினார் ..
படி அளக்கும் மக ராசி
போய் சேர்ந்துட்டாக !
நல்ல படியா !! ஐயா ..வாங்க
அழாதீங்க.. மனசை தேத்தி கோங்க ..
சிறிது நேரத்திற்கு மேல் என்னால்
அங்கு நிற்க முடியலை,கனத்த
இதயத்துடன் , நெஞ்சை பிசைய
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து
விட்டு கிளம்பி விட்டேன் !!
ஒரே மகன் வரலையாம்!கொள்ளி
வைக்க ..எதிர் பார்க்க வேணாம் !
சொல்லி அனுபிட்டான் . என்றனர் ..
மதுரையில் திருவிழா !! காப்பு கட்டி இருக்கு ! அதனால் யாரும்
வரலையாம் ..சம்மந்தி காரர்கள் வர மாட்டார்கள் .. என்று தகவல்!!
பெண்கள், மாப்பிள்ளை சேர்ந்து பம்பரமாக காரியத்தை முடித்தனர் .
பெண் பிள்ளைகள் மட்டும் தான் உட்கார்ந்து அழுவார்கள் அம்மாவுக்காக
என்பதை உணர்ந்தேன்.!! இரண்டு வருடங்களுக்கு முன் என் மனம்
பின் நோக்கி சென்றது....பொரட்டா கார அம்மா (அவரை அப்படி தான்
கூப்பிடுவார்கள் )முகம் ஞாபகம் வந்தது! எங்கள் வீட்டுக்கு நேர் எதிரில்
அவர் வீடு ,கடை.!! பாஸ்ட் புட் , அணைத்து வித ஐட்டம் கிடைக்கும்.
மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 12 மணிக்கு பாத்திரங்களை இருவரும்
கழுவி கவழ்த்து வார்கள் மகன் நாக ராஜ் தான் அனைத்தையும் கவனிப்பார்.
நன்றி youtube
காரில் வந்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் !!
நாகராஜ் & மச்சினன் குமார் , இருவருக்கும் மனஸ்தாபம் !!
ஒரு நாள் குமார் (மச்சினன்) என் கணவரிடம் வந்து. சார் உங்க
ஒரு நாள் குமார் (மச்சினன்) என் கணவரிடம் வந்து. சார் உங்க
சக்கரை மில்லில் எதாவது ஒரு வேலை வாங்கி தாங்க !! என்றார்.
வெல்டர் வேலை செய்ய தெரியும் என்பதால் ...என் கணவர் சிபாரிசால்
வேலை கிடைக்க , பொரட்டா கார அம்மா வந்து , ராசா !! நீங்க
நல்லா இருப்பீகே !! என்று வாழ்த்தி போனார்.!! நாகராசுகு கல்யாணம்
வச்சு இருக்கு !! பொன்னு எழுமலை என்று அனைவரையும் அழைத்தார்.
மகன் என்றால் கொள்ளை பிரியம் , நாலு காசு சேர்த்தால் உடனே
மகனுக்கு கொடுத்து உதவுவார்.தண்ணீர் வெளியே காய வைத்து
ரா பூரா அடுப்பில் நின்னவனுக்கு ,வெந்நீர் காய வைக்குறேன் மா ..
என்பார் சிரித்த முகத்துடன்.!! வீட்டுக்காரர் .ஒத்தாசையாக இருப்பார்.
நாளாடைவில் ..கடை ஒரே நஷ்டம்..கடன் காரர்கள் தினம் கடையை
சூழ்ந்தனர் !..வீட்டில் அடிக்கடி சண்டை.!!அம்மாவை அடித்து
நொறுக்கினான் மகன். முடிவாக அம்மா ,அப்பா வெளி ஏறினார்கள் .
ஒரு நாள் நாகராஸ் மனைவியை கூட்டி கொண்டு கடன் தொல்லை
தாங்காமல் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு, சாமான்களை கடன்
காரர்களுக்கு விட்டு விட்டு சென்று விட ..பொரட்டா கார அம்மா வாய்
வயற்றில் அடித்து கொண்டு சாமான்களை அள்ளி கொண்டு மகள் வீட்டில்
தஞ்சம் அடைந்தார். கடடை சியாக ஒரு வக்கீல் வீட்டில் வீட்டு வேலை
செய்ய சென்று விட்டார். அவர் இறந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகுது.
சாவதற்கு இரண்டு நாட்கள் முன்பு எங்கள் தெருவில் வந்து எல்லோரிடமும்
பேசி சென்றார்.அவர்கள் வைத்து இருந்த கடையை இரண்டு மாதங்களுக்கு
முன்பு புதிப்பிக்க இடித்து தரை மட்டமாக ஆக்கி இருப்பதை பார்த்து கண்
கலங்கினார்.!!என் மகன் திரும்ப வருவான்.!! பரோட்டா கடை வைப்பான்.
என்று சொல்லி விட்டு சென்றார்.கடைசியில் அவரை பிணமாக தான்
பார்க்க முடிந்தது . தூங்கு வதை போல் இருந்தது..அவர் முகம்.!!தரை
மட்டமான அந்த இடத்தை பார்க்கும் போது, அந்த அம்மாவே அங்கு
நின்று கொண்டு வெந்நீர் காய வைக்குறேன் மா என்று கூறுவது
போல் உள்ளது!!! மனசை நெகிழ வைத்து அவரது மறைவு.!!!
அருமையான நிஜக்கதையைப் படித்ததும் என் கண்கள் கலங்கி விட்டது.
பதிலளிநீக்குபாவம். இதுபோல ஆங்காங்கே எவ்வளவோ அம்மாக்கள்.
பெத்தமனம் பித்து! பிள்ளை மனம் கல்லு!! என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.
பதிவுக்கு நன்றி,
கண்களில் நீர்த்துளிகளுடன்,
vgk
என்ன பண்ணுவது...இப்பொழுது உள்ள உலகம் அப்படி இருக்கு...
பதிலளிநீக்குயாரோ எப்படியோ போனார்கள் என்றில்லாமல் அவரது இறுதி யாதிரக்குமுன் சென்று கண்டு, இங்கே அவரது வாழ்கை நிகழ்வை மனம் நெகிழும் வண்ணம் கொடுத்திருகிறீர்கள். அந்த பரோடாக்கார அம்மாவின் கதை என் விழியோரம் ஈரமாக்கியது.
பதிலளிநீக்குபடித்ததும் மனம் கனத்துவிட்டது....இதுதான் இன்றைய உலகம்...
பதிலளிநீக்குவாங்க ஐயா ! மிக சரி யான ஒன்று
பதிலளிநீக்குபெத்தமனம் பித்து! பிள்ளை மனம் கல்லு!! உணர்ந்தேன் !!
GEETHA ACHAL Madam
பதிலளிநீக்குதங்கள் வரவுவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Mira வாங்க, மனதை மிகவும் பாதித்தது.அதனால் தான் அனைவருடன் இதை பகிர்ந்து கொள்கிறேன் !
பதிலளிநீக்குS.Menaga வாங்க,
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !
//பெண் பிள்ளைகள் மட்டும் தான் உட்கார்ந்து அழுவார்கள் அம்மாவுக்காக
பதிலளிநீக்குஎன்பதை உணர்ந்தேன்.!!//
சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை
எதார்த்தமான வரிகள்
மனதை கணமாக்கியது
அந்த அன்னை மனம்
சாந்தியடைய பிராத்திக்கிறேன்
A.R.ராஜகோபாலன் வாங்க,
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !