சனி, மே 28, 2011

ஆஹா ..... ஓட்ரா ராமா



கீத்து இந்த காபியை மட்டும் குடிச்சுட்டு 
படுத்துக்கோடா செல்லம்  . 
ம் .. தூங்குறேன் .. அப்புறம் குடிக்கிறேன் !! 
ஒரு வாய் மட்டுமாவது குடிடா !!! 
இச்சே .. மடக் என்று ஒரே வாயில் குடிச்சாச்சு.

சிறிது நேரம் கழிந்தது....  கீத்து கீத்து ... மணி 
ஆச்சு .. எழுந்து பல் விலக்கிட்டு டிபேன் சாப்பிடுமா! 

இம்சை டா..கொஞ்ச நேரம் நிமதியா தூங்க முடியலே.

பைவ் மினிட்ஸ் ப்ளீஸ்.. சிறிது நேரம் சென்றது.
சுட சுட எனக்கு பிடித்த பூரி கிழங்கு மூக்கை துளைக்க 
இங்கும் அங்கும் பார்த்தேன்.அழகாக வாழை இல்லை 
மூடப்பட்ட வெள்ளி பிலேட்டில் பூரி என்னை  அழைத்தது. 

படக் என்று எழுந்து கை காலை உதறி பல் தேய்த்து 
பூரியை ஆசை தீர சுவைத்தேன்.மனசு இறக்கை கட்டி 
பறந்தது.ஆற அமர சாபிட்டு முடித்தவுடன் , காப்பி யின்
மனம் வந்தது !! அதயும் சுவைத்து முடித்தேன்.

அருகே நியூஸ் பேப்பேர். காபியை சுவைத்த வண்ணம் 
நியூஸ்சை சுவராசியமாய் படித்து முடித்தேன் , நிதானமாக. 

அடுத்து குளிக்கலாமா?  யோசித்தேன் !! நோ ..இன்னும் 
ஒரு குட்டி தூக்கம் போடலாம் ..என்று மீண்டும் படுத்தேன்.


என்ன ஆச்சரியம்..என்னை யாரும் டிஸ்ட்டேர்ப் பண்லை.
ஹையா !! யாரும் காலிங் பெல் கூட அழுத்தல ..அப்பாடி!!
தப்பிச்சொம்பா.அட மணி இரண்டு ..தூங்கி னதுல நேரம் 
போனதே தெரியலை...அதற்குள் பிசிபேளா  பாத் வாசனை 
மூக்கை துளைக்க டைணிங் டேபிள் சென்று பார்த்தால் ..
சுட சுட உருளை வறுவல் ..சிப்ஸ் தயிர் சேமியா..

வாவ் இன்னைக்கு நரி முகத்தில்  முழிச்சோமா?  ஓகே 

இதை ஒரு பிடி பிடிப்போம்.என்று ஆசையுடன் பாமிலி 
மெம்பெர்ஸ் கூட ஜாலியா பேசி கொண்டே சாபிட்டு 
ஒரு வழியா முடிச்சாச்சு ! அடுத்து பீடா போடாச்சு.


நெக்ஸ்ட் ...டிவி ஆன் பன்ணிய உடன் எனக்கு பிடித்த 
மௌன ராகம் படம் ..சாய்வு நாற்காலியை போட்டு 
உட்கார்ந்து வேப்பமரம் காற்று என்னை தாலாட்ட .
அடடா.. என்ன ஆச்சரியம் நான் படம் பார்த்து முடிக்கும் 
வரை .என்னை போன்ல கூட யாரும் கூப்பிட்டு டிஸ்ட்டேர்ப்
பன்னல.. அடுத்து ஐ பாட் காதில் மாட்டி பிடித்த பாடல்களை 
வரிசையாக கேட்டு மகிழ்ந்தேன்.

அடுத்து பாடல் கேட்ட வண்ணம் கண் மூடி தூங்கி போனேன்.

 மறுபடியும் கீத்து காபி ..என்று ஒலிக்க கையை நீட்டி 
சூடு குறையாமல் ரசித்து குடித்தேன்.
 மிகவும் நிதானமாக ஒரு குளியல் போட்டு விட்டு
 விளக்கு ஏற்றுவோம் ..என்று சாமி ரூமுக்கு சென்றேன்.

சுடர் விட்டு தூண்டாமணி விளக்கு எரிந்து கொண்டு இருந்தது.

எனக்கு பிடித்த வீணை பிச்சு மணி இன் இசை டேப் ல்
ஒலித்தது.பிறகு கேட்க வேண்டுமா? மறுபடியும் மெய்மறந்து 
கண் மூடி கேட்டு மகிழ்ந்ததில் நேரம் போனதே தெரியலை.

டின்னெர் என்ன? ஆச்சரியம் தாங்க முடியாமல் அடுப்படி 
வந்தேன்..ஆஹா என்ன  ருசி.. அமிர்தமாக அடை, அவியல் 
ஒரு பிடி பிடிச்சாச்சு.இன்றைய நாள் இனிய நாள்.இதை 
விட வேற என்ன வேண்ணும்? யோசிச்சேன்.!!!


  

How to celebrate life everyday என்ற புத்தகத்தை படித்து 

ஞாபகம் வந்தது. சுகமான நினைவு கலைந்து விடாமல் 
இருக்க மீண்டும் உறங்கினேன்.எழ மனம்மில்லாமல்.


அடுத்து தில்லானா மோகனாம்பா பாட்டில் வரும் கன்னும்
 கன்னும் கலந்து பாட்டுக்கு நானும் என் தோழியும் பத்மினி 
வைஜயந்தி மாலா போல் ஆடி ஸ்கூலில் பஸ்ட் ப்ரைஸ் 
வாங்கியது கண் முன் தோன்றி மகிழ்ந்தேன்.!


என்ன சுகமான நினைவுகள்.


கலர் கலராய் பூக்கள் தோன்றி மறைந்தன !! அசரிரி போல்
மெலிய குரல் என்னை தாலாட்டியது.அடடா ..
..நானும் சேர்ந்து ஆரிராரோ பாடினேன்....


2) Leafpol9.exe

அம்மா டிபேன் ரெடியா? மணி ஆச்சு என்று என் மகளின் 
குரல். கீதா..... லஞ்ச் கட்டியாச்சா ? என் கணவர் குரல்.
அம்மணி ... நான் வரட்டுமா? என்று தாயம்மா வின் குரல்.
(வேலை முடித்து கிளம்புகிறார் போல்...) அக்கா ..காஸ் 
என்று வெளியே இருந்து குரல்..போன் சினுங்கும் சத்தம் . 

சே ..பத்து கை இருந்தா கூட பத்தாது பா.ஓட்ரா ராமா
ஓட்ரா ராமா ..என்று மனசு சொல்ல ..கடிகாரம் பாட்டரி 
இல்லாமல் இரவு இரண்டு மணி உடன் நின்று போய்
உள்ளதால் ... அலாரம் அடிக்காமல் ..மணியை பார்த்து விட்டு 
மெய் மறந்து கலேர் கலேறாய் ,, கனவு வந்து தூங்கி
 இருக்கேன். இனி எங்கே லஞ்ச்..டிபேன்? டிசைன் டிசைனாய்
டோஸ் வாங்க வேண்டியது தான்.இம் ... இன்னைக்கு நாள் 
நல்லா இல்லை .. என்று பூனை போல் மெதுவாக சத்தம் 
இல்லாமல் எழுந்து நடந்தேன் .நல்ல  வேலை நான் கனவு 
கண்டு . தூங்கியதை யாரும் பாக்கல போல.. ஹையா.. 


எனக்கு ஏற்றார் போல் சித்தி படத்தில் இருந்து சிட்டிவேஷன் 
சாங் ஒலித்து கொண்டு இருந்தது ..இதோ ..கேளுங்க ....நீங்க 



Kaalamithu-Chithi-P.Suseela.mp3


நாம் கனவில் பார்த்தது போல எப்ப இப்படி எல்லாம் நடக்கும்? 
என்று கேட்டுக் கொண்டே காஸ் சிலிளிண்டரை வாங்கினேன்.
தாயம்மா என்னை பார்த்து ஏன் மா உடம்பு  சரி இல்லையா? 
என்று கேட்டவுடன்.வேகமாக ஆமாம் என்று தலை ஆட்டினேன்.




16 கருத்துகள் :

  1. ம், நல்ல கனவு! உங்கள் மகளுக்கும் வரலாம்!
    கண்ணும் கண்ணும் கலந்து - வஞ்சிக்கோட்டை வாலிபன் என்று ஞாபகம்!

    பதிலளிநீக்கு
  2. very nice dream.. hope u got happy for that..

    http://zenguna.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. கனவு கூட எவ்வளவு எளிமையா காண்றீங்க. அலிபாபா குகைக்குள் சென்று கண்டதுபோல பொன்னும் வைரமுமா காணவில்லையே. ஒரு ஹாலிடே அவுட்டிங்க சென்றால் குட்டி கனவுகள் நிறைவேறும்.

    பதிலளிநீக்கு
  4. கனவு! ஆனந்த கனவு. அருமையாய் மனதை வருடியது. பாராட்டுக்கள்.
    கனவு ஒருநாள் மெய்பட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. Kanna antha pattu thilana mohanambal illaida chellam.
    Vanji kottai valiban.(Ethanai thadavai adierikkan nanum en co dancer banumathiyum entha pattukku)
    Althe best for happening the dream come true.(Come to my house one day I will make it happen.)
    viji

    பதிலளிநீக்கு
  6. சாரி விஜிமா! தூக்க கலக்கத்தில்
    தப்பாய் தில்லான மோகனாம்பா
    என்று கூறிவிட்டேன்.மன்னியுங்கள்
    கனவில் உளறிவிட்டேன்..சுட்டி காட்டியதற்கு மிக நன்றி. இனி இது போல் தவறு நடக்காமல் ..பார்த்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. ஹா ஹா எல்லாம் கனவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  8. >>டிசைன் டிசைனாய்
    டோஸ் வாங்க வேண்டியது தான்

    ஆஹா .. உங்களுக்கு ஒரு கஷ்டம்னா எங்களுக்கு எம்புட்டு சந்தோஷம் ?

    பதிலளிநீக்கு
  9. வாங்க தந்தை குலம்...என்ன ஆனந்தம்பா..எங்களுக்கு ஒரு காலம் வராதா என்ன.. இல்லை நீங்க தான் வீட்ல கலேர் கலேரா டொஸ் வாங்காம
    போக போறீங்க !! பாப்போம்லே அதையும் ..

    பதிலளிநீக்கு
  10. நல்ல ஓட்டம்தான் என்றாலும் உங்கள் கனவு எனக்கும் கணவாய் மட்டுமாவது வராதான்னு இருக்கு. இதை படித்ததும் எனக்கும் பசி. சொன்ன எல்லா பதர்த்தையும் ஒரு கை பர்கனம்போல இருக்கே! செஞ்சு தர ஆள் இருந்த நல்லாத்தான் இருக்கும். ஒங்க திண்டாடதுளையும் ஒரு கொண்டாட்டம் கொண்டுவந்த அழகு அருமை கீதா. உங்களை தொடருகிறேன்!

    பதிலளிநீக்கு
  11. கனவு கோர்வை இல்லா சம்பவங்களையும் கோர்ப்பது, இதோ உங்கள் கனவில் வஞ்சிக்கோட்டை வாலிபன் பாடு தில்லானா மோகனாம்பாள் பதுக்கு மாறி போச்சே!

    பதிலளிநீக்கு
  12. வாங்க மீரா மேடம்,நல்வரவு.
    நமக்கு யார் செய்து தருவார்கள்
    என்று நம்மை போன்றவர்கள்
    கனவு மட்டுமே காண முடிகிறது.

    விஜிமா சொன்ன மாதிரி , நீங்களும்
    என் உளறலை கண்டு பிடித்து
    விட்டீர்கள்.அவர்களுக்கு சொன்னா
    பதிலை உங்களுக்கும் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு

welcome