செவ்வாய், ஏப்ரல் 12, 2011

மனதை கெடுக்காதீர்!! ப்ளீஸ்.

பெண்களுக்கு பெண்களே எதிரி 

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் !
ஒருவர் மனதை கலைக்காதீர்கள் ப்ளீஸ்..

என் நெடு நாள் தோழி என் வீட்டிர்க்கு  வந்து இருந்தார்.
அவர் முகம் எல்லாம் வாடி களை இழந்து காணப்பட்டது!
என்ன விபரம் என்று கேட்டேன் ?.அவர் அக்கா பெண்ணுக்கு 
சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது..ஒரே வாரத்தில் 
அப்பெண் , அங்கு இருக்க பிடிக்காமல் வந்து விட்டாள்!!!.
காரணம் இது தான்....
மாப்ளை வீட்டில் , மாமியாரிடம் ..சின்ன மாமியார் (கூட பிறந்த 
சகோதரிகள் ) திருமணம் ஆவதற்கு ஒரு மாதம் முன்பு இருந்து 
எப்படி மாமியார், மருமகளிடம் திருமணம் ஆனபின் நடக்க 
வேண்டும் என்று ட்ரைனிங் தந்து இருக்கிறார்கள்.

திருமணம் முடிந்ததும் , மிகவும் உஷாராய் இரு .இந்த காலத்து 
பெண்கள் கல்யாணம் ஆனவுடன் ..புருஷனை தன கைக்குள் 
போட்டுகொண்டு, உன்னிடம் இருந்து உன் மகனை பிரித்து 
சென்று விடுவாள்.!  எச்சரிக்கை யாக இரு. உன் கன்ட்ரோலில்
வைத்து கொள் அநைத்தையும் என்று !! விஷத்தை ஏற்றி தூபம்
போட்டு உள்ளனர் ..மாமியார் பாவம் பரம சாது..இருப்பினும் , 
இவர்கள் தினம் பிரைன் வாஷ் செய்து அவர் மனதில் நஞ்சை
ஊட்டினர் .விளைவு....,
என் தோழி , அக்கா பெண் போன  ஒரே வாரத்தில் , ...வந்து விட்டாள்.


 மாமியார், கூட பிறந்த சகோதரிகள் விரித்த வலையில் சிக்கி .
 மருமகளை  ஆட்டி படைக்க  ஆரம்பித்து ..மருமகளின்  நகை ,
மற்றும் மாப்ளை பரிசம் அனைத்தையும் தன வசம் கைப்பற்றி !
பத்திரமாக வைக்கும்படி வினை விதைத்த தன் சகோதரிகள் 
வசம் ஒப்படைத்து விட்டு, போதாத குறைக்கு தன் மகனிடம் 
மருமகள் பேசுவதை கூட பொறுக்கமாட்டாமல் ...நடந்து 
கொள்ளும் மாமியார் பார்த்து மிரண்டு போன புது பெண் 
ஓடி வந்து விட்டாள்..இப்போ அணைத்து நகைகளை 
தங்கள் கைவசம் வைத்து கொண்டு , மாமியாரை என்ன
செய்தி என்று கேட்கிறார்கள் கூட பிறந்த உடன் பிறப்புகள்.!
இதில் தோழியின் இரவல் நகை வேறு அக்கா பெண்ணின் 
சின்ன மாமியாரிடம் மாட்டிகொண்டது ..இவர்கள் பிரச்சினை 
விஸ்வரூபம் எடுத்து ...இன்று அந்த பெண் மாட்டி கொண்டு 
முழிக்கிறாள்..மாப்பளை கோழை ...இன்னும் அம்மா ,சித்தி 
பேச்சை கேட்டுகொண்டு ..வாழ்கையை நரகம் ஆக்கி..
கல்யாணம் முடிந்து ஒரே வாரத்தில் நிம்மதியை பறி
கொடுத்து விட்டு இருக்கிறார்கள். கூடபிறந்தவர்கள்
 இவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்

 (எல்லா பெண்களுக்கும்  இது கிடையாது ..
மனதை கலைக்கும்  பெண்களுக்காக..மட்டும்)
அதனால் பெண்களே உங்க வேலை மட்டும் பாருங்க...
நீங்களும் பெண்கள் தானே.ஒரு பென்னுக்கு எப்படி 
த்ரோகம் நினைக்க முடிகிறது?நாளை உங்களுக்கு 
இப்படி ஒரு நிலை வராது என்று என்ன நிச்சயம்?
உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? ஒருத்தருடைய 
பொருள் நகை எதற்கு ? அடுத்தவர் மனசு கஷ்ட படுவதில் 
உங்களுக்கு என்ன ஆனந்தம்? மனசை கலைக்காதீர்..

இது இப்படி என்றால் மற்றொரு சம்பவம் என் நினைவுக்கு வருது 
என் மாணவி கூறியது : அவள் திருமணம் முடிந்தவுடேன் 
அவர்கள் சொந்தகார பெண் .. கையை பிடித்து கொண்டு ..
ஏமமா ...மாப்ளை வீட்டாரை பார்த்தால்.. பெரிய இடம் போல் 
தெரிகிறது !.உன்னை நல்லா வச்சு காப்பாத்து வாங்களா?
இப்படி சிக்கி கிட்டேயே ...பயமா இருக்கு.என்றாராம்.!!
அதற்கு என் மாணவி கூறியது :எலாத்துக்கும் மனசு தான் 
 காரணம்.. நாம் எப்படி நடந்து கொள்கிறோம் .. என்பது 
 தான்.!.  பெரிய இடம் என்றாலும்..அவர்களும் மனிதர் 
தானே? எதற்கு பயப்பிட வேணும்.என்றாளாம்..!.
அவள் மனதிலும் நஞ்சு கலந்து இருந்தால்...அவள் 
வாழ்கை திசை மாறி இருக்கும்.!!! அதனால் சுய 
புத்தியுடேன் செயல் படுங்கள்.கேட்பார் பேச்சால் 
விளைவுகளை எதிர் நோக்காதீர் .!!!!

இன்று ராம நவமி 
 

12 கருத்துகள் :

 1. சுய
  புத்தியுடேன் செயல் படுங்கள்.கேட்பார் பேச்சால்
  விளைவுகளை எதிர் நோக்காதீர் .!!!!//
  மிக மிக காலத்திற்கு ஏற்ற பதிவு. பாராட்டுக்கள்.
  ராமநவமி ஒட்டி எனது வலைப் பூவிற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
  http://jaghamani.blogspot.com/
  விழி அழகு ...
  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நன்றி ராஜேஸ்வரி மேடம்.
  ராம நவமி சார்பாக இங்கு சென்று வாங்க.
  http://iamhanuman.blogspot.com/
  விழி அழகு ..அருமை !!

  பதிலளிநீக்கு
 3. பெண்களுக்கு கொடுத்துள்ள நல்ல அறிவுரைகள் படித்தேன். அருமை.

  ஸ்ரீராமநவமி நல்ல நாளில் கீதாச்சாரம் மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளச் செய்ததற்கு நன்றி.

  இன்று என் வலைப்பூவினில் புதிய பின்தொடர்பவராக (As a new follower) வந்துள்ள உங்களை இருகரம் கூப்பி வருக, வருக, வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. இன்னும் நிறைய பேர் இப்படி தான் இருக்காங்க...என்னத சொல்ல...

  பதிலளிநீக்கு
 5. உதவி செய்யவில்லை என்றாலும், உபத்திரவம் செய்ய நாலு பேரு கிளம்பிடுவாங்க போல....

  பதிலளிநீக்கு
 6. இதுகலாம் என்னைக்குதான் திருந்துக்கங்களோ தெரியல...

  பதிலளிநீக்கு
 7. வை.கோபாலகிருஷ்ணன்
  சார் வாங்க! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தங்கள் வரவேற்பால் மிகவும் சந்தோஷம் !

  பதிலளிநீக்கு
 8. GEETHA ACHAL madam
  இவர்கள் திருந்த மாட்டார்கள்.
  கருத்துக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 9. Chitra வாங்க.! உதவி இல்லா விட்டால் கூட பரவ்பரவா இல்லை ! குழப்பம் உண்டு பன்ணாமல்
  இருந்தால் போதும்.

  பதிலளிநீக்கு
 10. Menaga வாங்க..இவர்கள் பட்டால் தான் திருந்துவார்கள்
  அப்போ தான் வலி புரியும்.

  பதிலளிநீக்கு
 11. இவர்கள் பட்டால் தான் திருந்துவார்கள்
  அப்போ தான் வலி புரியும்.//

  ஆனால் அதற்குள் நாம் பட்டு அதன்வலியை அனுபவித்திருப்போம். மகா கொடுமை.

  :(

  பதிலளிநீக்கு
 12. புதுகைத் தென்ற ! வாங்க..நீங்க சொல்றதும் சரி தான்!!

  பதிலளிநீக்கு

welcome