நீ முதலில் இந்த பாலை குடி ..பெறகு சொல்றேன்.
இம்..இப்ப சொல்லு! என்ன ஆச்சு?
வாயை துடை... என் கையை பிடித்து
கொண்டு நட !அப்ப தான் சொல்லுவேன்!
மீதி கதையை..சரியா?
எனக்கு தூக்கம் வருது.! போ !! மீதி கதை வேணாம் .
எனக்கு டயர்ட் ஆக இருக்கு.போ போ ..வேணாம் போ .
உச்சா பெட் எல்லாம் ..நனைத்து விடும்.
எனக்கு வேணாம் போ.
சரி படுத்து கொண்டு இந்த பந்தை
மெதுவா அமுக்கி பிடி !
போ வேணாம்.! கை வலிக்குது.
கொஞ்ச நேரம் கழித்து....
தலை வாரி கொள் . இந்த டிரெஸ்ஸை
போட்டு கொள் ..கையை தூக்கு ..
பவுடர் அடித்து விடுகிறேன்.
வலிக்குது..வேணாம்.!
டயாபர் கழட்டு.. கஷ்டமா இருக்கு.
ப்ரீ யா படுக்கணும்...மீதி கதை சொல்லி முடி.!!
சீக்கிரம்.. எனக்கு துக்கம் துக்கமா வருது.
என் தோழியும் அவள் அம்மாவும்
பேசிக்கொண்டு இருந்தார்கள் .
சில மாதங்களுக்கு முன் திடீர் என்று
தோழியின் அம்மா ஸ்ட்ரோக் வந்து
பாதிக்கப்பட்டார். மூளை பாதித்து , சிறு
குழந்தை போல் மழலை பேசி ,
குழந்தையாகவே மாறி
விட்டார்.! அத்தனை சுறுசுறுப்புடன்
இருப்பார்...இப்போமனதளவில் பச்சை
குழந்தை போல் இருக்கிறார்.தோழியும்
அம்மாவை குழந்தையாக வே பாவித்து
சேவை செய்கிறார்.
என் கையை பிடித்துகொண்டு ,
இது போல் நான் ஆகி விட்டால்..
என்னை யார் கவனிப்பார்கள் என்று
நா தழுதழுக்க கேட்டார்.!
மூளையில் பாதிப்பு ஏற்பட்டால்..
இப்படி மாறி விடுவார்கள் !!!
நேரில் பார்த்த எனக்கு மிகவும்
வியப்பாகவும் , அதிர்ச்சியாகவும்
இருந்தது அவரின் செயல்கள்....
ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்..
தோழியும்
பதிலளிநீக்குஅம்மாவை குழந்தையாக வே பாவித்து
சேவை செய்கிறார்.//
மனம் கனக்கிறது.
Thanks இராஜராஜேஸ்வரி Madam
பதிலளிநீக்குமுடிவில் மனம் கனக்கிறது
பதிலளிநீக்குமிகவும் கஷ்டமாக இருக்கு...அவங்க சீக்கிரமாக குணம் அடைய கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்...
பதிலளிநீக்குசிநேகிதி வாங்க நன்றி .
பதிலளிநீக்குநன்றி GEETHA ACHAL.
பதிலளிநீக்குரொம்ப கழ்டமா இருக்கு தோழி
பதிலளிநீக்குசில மாதங்களுக்கு முன் திடீர் என்று
பதிலளிநீக்குதோழியின் அம்மா ஸ்ட்ரோக் வந்து
பாதிக்கப்பட்டார். மூளை பாதித்து , சிறு
குழந்தை போல் மழலை பேசி ,
குழந்தையாகவே மாறி
விட்டார்.! அத்தனை சுறுசுறுப்புடன்
இருப்பார்...இப்போமனதளவில் பச்சை
குழந்தை போல் இருக்கிறார்.தோழியும்
அம்மாவை குழந்தையாக வே பாவித்து
சேவை செய்கிறார்.
.....மனதை கலங்க வைக்கும் பதிவு. நாம் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் இருக்கும் வரை, வேறு எதை பற்றியும் நினைப்பதில்லை.
படித்ததும் மனசு கஷ்டமாகிடுச்சு...
பதிலளிநீக்குJaleela Kamal Thanks!
பதிலளிநீக்குChitra தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி !
பதிலளிநீக்குநன்றி Menaga.
பதிலளிநீக்குமனம் கனக்கிறது.நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்
பதிலளிநீக்குபடிக்கும்போதே மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. யாருக்கும் என்றும் இதுபோன்ற கஷ்டங்கள் வரக்கூடாது.
பதிலளிநீக்குகுழந்தைபோல ஆகிவிடும் அவர்களை தொடர்ந்து கண்காணித்துப் பார்த்துக் கொள்வது மிகவும் கஷ்டமான காரியம் தான். மிகவும் பொறுமையும், சகிப்புத்தன்மையும், பொருளாதார வசதிகளும், ஆள்பலமும் தேவைப்படும். ஒரு கட்டத்தில் பார்த்துக்கொள்பவர்களுக்கே சலிப்பு ஏற்படக்கூடும். அதற்குள் அவர்களை கடவுள் சரியாக்கி விடவேண்டும் அல்லது ஐக்கியப்படுத்திக்கொண்டு விடவேண்டும். இதுபோன்ற சிலரைப்பார்த்து பழகி வருவதால், என்னால் அந்தக்கஷ்டத்தை நன்கு உணர முடிகிறது.
ஆயிஷா அபுல் வாங்க. பிராத்திப்போம்
பதிலளிநீக்குவை.கோபாலகிருஷ்ணன் சார், முற்றிலும் உண்மை.நம் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது.
பதிலளிநீக்குஎன் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (6/11/11 -ஞாயிறுக்கிழமை) காலை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com
பதிலளிநீக்கு