செவ்வாய், மார்ச் 29, 2011

எல் கே ஜி முதல் ..காலேஜ் வரை ..பிள்ளைகள்

என்ன தான் டைம் டேபிள் ஷேடுயூல்  
போட்டு  லஞ்ச் கொடுத்தாலும், இந்த 
பிள்ளைகள் கொஞ்சம் கூட கவலை 
படாமல் சிறிதாவது டிபன் பாக்சில் 
வைத்து கொண்டு வந்து விடுகிறார்கள்!!
அவர்களுக்கு பேச்சு மும்மரத்தில் ஒழுங்காக 
சாப்பிடுவது இல்லை, டைம் வேறு பத்துவது 
 இல்லை.கடைசியில் சூடா இல்லை, 
டேஸ்டி ஆக இல்லை, ஒரே போர் ! 
என்று எல் கே ஜி முதல் ...  காலேஜ் 
பிள்ளைகள் , குறிப்பாக  பெண் குழந்தைகள் 
வளரும் பருவத்தில்ஒழுங்காக சாப்பிடாமல், 
போதிய தெம்பு இல்லாமல், வைட்டமின்
பற்றாக்குறை , மற்றும் கால்சியம்
போதுமானதுஇல்லாமல் , டீன் ஏஜ்  
பிள்ளைகள் ஒல்லியாக கண்கள் உள்ளே 
சென்று (படிக்கும் பேர்விழி என்று )
கன்னம் ஒட்டி உலர்ந்து ...சுருக்கமாக 
சொல்ல வேண்டும்மானால் ....
சோமாலிய நாட்டில் பசி
பட்டினி உடன் வளரும் பிள்ளைகள் போல ....
நானும் வளருகிறேன்.. 
என்று வளம் வருகிறார்கள்.
இதில் மற்றொரு வருத்தமான 
விசயம் என்ன என்றால் ...

 டீன் ஏஜ் பெண்கள் பீரிஎட்ஸ் நேரங்களில் முன்பும, அந்த நேர தருணத்திலும்..இன்னும் மோசமாக சாப்பிடாமல் , உடம்பு வலி, வயற்று வலி என்று இந்த கால நவீன காலேஜ்     பெண்கள் கொஞ்சம் கூட கஷ்டம் கூடாது !  என்று சாப்பிடுவதயே 
கஷ்டமாக நினைகிறார்கள்.நிறைய வீட்டில்! என் தோழிகள் வீட்டிலும் சரி, என் வீட்டிலும் சரி ..டீன் ஏஜ் பெண்கள் பெரும் பால்லோர் .. இப்படி தான் சோகை பிடித்து , 
சரியாக சாப்பிடாமல் வந்தவுடன் , டிரஸ் கூட மாற்றாமல் ... 
ரெப்ரெஷ் கூட பன்ணமல்செல்லை எடுத்து கொண்டு ..
ரூமில் படுத்து கொண்டு , மம்மி நான் அப்புறம்  சாப்பிடுகிறேன்..
என்று அநேகம் வீட்டில் கூறுகிறார்கள்.
பாஸ்ட் பூட் கடைகளில் கிடைக்கும் பரோட்டா,கட்லெட், நான் ,
சில்லி மஷ்ரூம், சோலா பூரி , காலி பிளவர் மஞ்சூரியன் , 
டோநேட்ஸ் , ஐஸ் காபி..என்று வயற்றை கெடுக்கும் உணவை 
அதிகம் விரும்புகின்றநர்  இன்றைய டீன் ஏஜ் பெண்கள் 
அநேகம் பேர்..!போதிய  ஊட்ட சத்து  இல்லாத பற்றா குறையால,
உடம்பில் அவர்களுக்கு எலும்பு எப்படி உறுதி ஆகும்? எதிர்காலத்தில் 
அவர்கள் எப்படி குழந்தை பெற்று கொள்வார்கள்?..சிந்திப்பார்களா ??
இன்றைய இளைய தலை முறையிநர் ?? இளம் பெண்களே ...
டீன் ஏஜ் பெண்களே..இதுவே உங்கள் வளரும் பருவம்.. சரியான 
ஊட்ட சத்து அடங்கிய உணவை தேர்ந்து எடுத்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை...உங்களை நீங்கள் 
தான் பார்த்து கொள்ள வேண்டும்!!.அம்மா சமைத்து கொடுத்து 
தான் அனுப்ப முடியும்.!.அதை ஒழுங்காக சாப்பிட்டு வந்தால் 
 தான் உடம்பில் போதிய ஊட்ட சத்து கிடைக்கும்... கண் கெட்ட 
பிறகு  சூரிய நமஸ்காரம் .பலன் அளிக்காது,, என்பது தெரியும் அல்லவா ? இதில் ஸ்டைலாக சின்ன டிபென் பாக்சில்  ஏதோ ஒன்றை  அடைத்து 
சென்று .. லஞ்ச் டைம் ஆரம்பிக்கும் முன்பே ப்ரோபசெர் பாடம் நடத்தி
கொண்டு இருக்கும் போதே..முதல் பெஞ்சில் உள்ள
டிபன் பாக்ஸ் , திறக்க பட்டு , வரிசையாக கடைசி 
பெஞ்சு  வரும் போது, முற்றிலும் காலி ஆகி , வெறும் 
டிபென் பாக்ஸ் பார்த்து ஏமாற்றம் அடைவது தான் மிச்சம்!!
 இதில் ப்ரொபசரை வேறு குறை சொல்லுவது..இந்த அம்மா 
ஒன்றுமே உருப்பிடியாய் நடத்துவதே  கிடையாது என்று...!!
ஓகே..இவர்கள் வயசு அப்படி..நாமும் அதை கடந்து தான்
வந்து  உள்ளோம் !!.பதினெட்டு  வயது.. பெண்கள் ஓட்டூ 
 போட்டால் மட்டும் போதாது..நல்லது எது என்பதை தெரிந்து 
வைத்து இருபது தான் புத்திசாலி தனம்.! 
காலையில் எவ்வளவு கஷ்டப்பட்டு , லஞ்ச் பார்த்து பார்த்து 
செய்து டிபன் பாக்சில் பாக் பண்ணி அனுப்புறோம்.!!
 இவர்கள் என்ன வென்றால் ..பொறுப்பே இல்லாம; இப்படி 
இருக்கிறார்கள் ..என்று  நினைத்து கொண்டு டிவி ஆண் 
 பண்ணினேன்... என் பென்னுக்கு பிடித்த நான்  செய்து காட்டி 
கொண்டு இருந்தார்கள்...பேப்பரில் எழுத பிடிக்காமல் .. 
ஓடி சென்று அதற்கு தேவையான சாமன்கள் அவர்கள் 
சொல்ல சொல்ல , தோதாக  நானும் எடுத்து  வைத்து 
கொண்டு டிவி யை பார்த்து  அப்படியே செய்தேன்
.என்ன ஆச்சரியம் !!!. 5 ஸ்டார்  ஹோட்டல் எல்லாம் 
பீட் பன்ணிவிட்டது .. நான் செய்தது ..தேங்க்ஸ் ஜெயா TV .

இங்கு சென்று உணவு பொருட்களில் கலோரி பாருங்க  Click and see
 தேங்க்ஸ் செந்தில்வாயல்

பட்டர் நான் 

தேவை

மைதா மாவு     அரை கிலோ 
யீஸ்ட்                 1 1 /2   ஸ்பூன் 
பிரட் இம்ப்ரூவேர்   ஒரு ஸ்பூன் 
சக்கரை              அரை ஸ்பூன்
உப்பு                     இரண்டு ஸ்பூன்
வெண்ணை      நூறு கிராம் 
செய்முறை
யீஸ்டை(மூன்று விதம்- ட்ரை, இன்ஸ்டன்ட் ,பிரெஷ் -ஏதோ ஒன்று ) வெது வெதுப்பான தண்ணீரில் கரைத்து கொள்ளவும்..நன்றாக நுரைத்து வந்தால் ..அது நல்லது.
மைதாவை சலித்து உப்பு,சக்கரை,பிரட் இம்ப்ரூவேர் ,பட்டர்  சேர்த்து 
சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்,முட்டை ஒன்று உடைத்து சேர்க்கலாம்..முட்டை வாசம் பிடிக்காதவர்கள் சேர்க்க வேண்டாம். (அவரவர் விருப்பம் போல் ...)
இதோடு கரைத்து வைத்துள்ள ஈஸ்டை சேர்க்கவும் .நன்றாக கெட்டியாக பிசைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு கவர் பண்ணி மூடி வைக்கவும்.இரண்டு மணி நேரம் கழித்து  பார்த்தால் மாவு இரண்டு மடங்காக பெருகி புஸ் என்று
 இருக்கும்.சாப்ட் ஆக இருக்கும் !!!.இதை மறு நாள் ஸ்டோர் பண்ண 
கூடாது .பிரெஷ் ஆக பிசைந்து செய்து விடனும்.யீஸ்ட் கலந்து 
 இருப்பதால்.. மாவு அடுத்த நாள் மிகவும் புளித்து போய் விடும்..
 இதை திரும்பவும் அடித்து பிசைந்து  , உருண்டைகளாக  பண்ணி 
சப்பாத்தி குழவியால் மெல்லிசாக..திரட்டி கொள்ளவும்! சப்பாத்தியை 
.இரண்டு  கைகளில் எடுத்து ஒரு பாதியை கைகள் நடுவே வைத்து 
கொண்டு மறு பாதியை லேசாக உதரவும் அல்லது வீசவும் 
(பிய்ந்து விடாமல்) இப்படிசெய்வதால் முக்கோணம் நான் சேப் 
கிடைக்கும் .பிறகு தோசை கல்லில் போட்டு  இரண்டு பக்கமும் 
பட்டர்  சேர்த்து மிதமாக பக்குவமாக சுட்டு எடுத்தால்
சுவையான பட்டர் நான் கிடைக்கும் !.காய்கறி கொண்டு 
இதை ஸ்டப்  செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.போளிக்குள் 
பூரணம் போட்டு குழவியால் மெல்லியதாய்  தேய்ப்பது போல் தேய்து போடலாம்..ஜின்ஜெர்  பேஸ்ட்  மாவில் கலந்து செய்தால் ஜின்ஜெர் நான் 
கிடைக்கும்  ,  அது போல் கார்லிக் சேர்த்தல் (பூண்டு) கார்லிக் நான் !!
எள்ளு, சீரகம். ,சீஸ் ,பொடியாக நறுக்கிய பசலை கீரை, வெந்தய கீரை 
தூவி வித விதமாகசெய்யலாம்  ..உங்கள் கண்மணிகளை அசத்தலாம்.
இதற்கு தொட்டு கொள்ள சதாரண குருமா போதும்! ஸ்டப் செய்த நான் 
சாப்பிட, தொட்டு கொள்ள சைடு டிஷ் வேணாம் !. தனி சுவை இதுவே.
இதில் அம்மாகளே ..மீதமான காய் கறிகள்,பொறியல்கள் ,வறுவல்களை 
பதமாக ஸ்டப் செய்வது உங்கள் சாமர்த்தியம்.! இனி பாஸ்ட் பூட்
பக்கம் உங்க செல்வங்கள் இதை சாப்பிட்ட பிறகு அங்கே செல்ல 
மாட்டார்கள் !!அவர்கள் டேஸ்ட் க்கு தகுந்த மாதிரி செய்து கொடுங்க.

16 கருத்துகள் :

  1. உடல் கட்டமைப்பு இப்போதுதான் ஸ்திரமாகும் நேரம். பசங்க நீங்க சொல்றாப்படிதான் இருக்காங்க. கைக்குழந்தையைக்கூட சமாளிச்சிடலாம். பதின்மவயதுக்குழந்தையை சாப்பிட வைக்க கஷ்டப்படுவது கொடுமை. (இடுப்பில் உக்காரவெச்சு நிலா காட்டி ஊட்டவா முடியும்) எங்க வீட்டுல பதின்மவயது ஆரம்பம் முதலே ஒழுங்கா கவனிப்பதால பிரச்சனையில்லை. பலருக்கும் உபயோகமா இருக்கும் இந்தப் பதிவு.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல குறிப்பு,நாணில் சொன்ன ப்ரெட் இம்ப்ரூவர் எனக்கு புதுசாக இருக்கு,கடையில் தேடி பார்க்க வேண்டும்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வது பையன்களுக்கும் பொருந்துகிறது. உங்கள் ஆலோசனைப்படி நான் நான் செய்து பார்க்கிறேன். இந்த ப்ரெட் இம்ப்ரூவர் எங்கே கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  4. எங்களது அழைப்பை ஏற்று தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நேரம் கிடைக்கும் போது தங்களும் நமது வலைப்பூ குழுமத்தில் பதிவிட அன்புடன் அழைக்கிறோம் , மேலும் எமது வலைப்பூவின் இளம் பதிவாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்கபடுதவும் .

    நன்றி ,
    Admin

    பதிலளிநீக்கு
  5. டெம்பிளேட் புதுசா...


    ஆமாம் இது எல்லாம் நானும் எங்க அம்மாவிடம் செய்தது தான்...இப்ப என் பொண்ணு செய்யும் பொழுது எனக்கு கோபம் தான் வருது...என்னத சொல்ல..இது தான் முன்வினை செயின்...என்று சொல்லுவாங்களோ...

    பதிலளிநீக்கு
  6. கவிதை வீதி # சௌந்தர்
    தங்கள் வரவுக்கும் ,
    கருத்துக்கும் மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  7. புதுகைத் தென்றல் வாங்க பெரும்பலோநேர்
    இன்னும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு
    வூட்டி விட்டு தான் காலேஜுக்கு அனுப்புறாங்க.!

    பதிலளிநீக்கு
  8. asiya omar வாங்க.பிரட் இம்ப்ரூவர் அனைத்து department ஸ்டோர்களில் கிடைக்கிறது!

    பதிலளிநீக்கு
  9. middleclassmadhavi யீஸ்ட் ,அஜினோமோட்டோ விற்கும் கடைகளில் கிடைக்கும்.என்ன குறைந்த அளவில் கிடைப்பது இல்லை.
    பேக்கரி களில் கிடைக்கும்!!

    பதிலளிநீக்கு
  10. TamilRockzs தங்கள் வலைப்பூ குழுமத்தில் பதிவிட விரைவில் வருகிறேன்.எதை பற்றி எழுதணும்? விவரம் கொடுங்க.எப்பொழுதும் எங்க ஆதரவு உங்களுக்கு!!

    பதிலளிநீக்கு
  11. GEETHA ACHAL ஆமாங்க டெம்ப்ளட் புதுசு தான்!
    "இது தான் முன்வினை செயின்".
    சரியா சொன்நீர்கள் !!!
    பட்டால் தான் தெரியுது .

    பதிலளிநீக்கு
  12. முக்கோண நாண் செய்யும் டிப்ஸ் புதிது. அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

    அக்கா, புது டெம்ப்ளேட்டில், படிக்கும் பகுதி ரொம்ப குறுகியதா இருக்கு. விரிவாக்க முடிஞ்சா நல்லது. பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க மேடம் ,டெம்ப்ளட் ல் மாற்றங்கள்
    விரைவில் செய்கிறேன்.chrom ல் படிக்கும் போது சிரமம் இருக்கும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு

welcome