தேங்க்ஸ் google images |
நேற்றைய முன் தினம் பால் வாங்கி வந்தேன்.
அடுப்பில் ஸிம்மில் வைத்து விட்டு மற்ற
வேலைகளை எப்போதும் போல் செய்ய
ஆரம்பித்தேன்!இரண்டு போன் கால்கள்
வந்தது.ஜப்பான் சுனாமி பற்றி சன் நியூஸ்
பார்க்கும் படி சொன்னார்கள் தோழிகள்..
அப்படியே ஹாலில் உட்கார்ந்து ,அந்த
கோர காட்சிகள் ஸ்தபிக்க வைத்தது!!
மனசை உலுக்கி எடுத்து விட்டது !
கண் இமைக்காமல் முழுவதையும்
பார்த்தேன்.வேதனைக்கு உட்பட்டேன். .
வீடு முழுக்க கருகி தீய்ந்த புகை வாடை,
வயிற்றை புரட்டி எடுத்தது ..ஓடி சென்று
சமையல் அறையில் பார்த்தால்.....அரை
லிட்டர் பாலும் காலி ..அழுகையே வந்து
விட்டது, என் அஜாக்கிரத்தை நினைத்து..
என்னை நொந்து கொண்டேன்.!! தண்ணீர்
ஊற்றி ஊற வைத்தேன்..
பழனி ம்மாவிடம் பாத்திரத்தை விளக்கப்
போட்டால்அவ்வளவு தான்.! என்னை
வறுத்து எடுத்து விடும்..
இப்போது எல்லாம் செல் போனை எடுத்து
கொண்டு சமையல் அறையில் ஐக்கியம்
ஆகி விடு கிறேன்..மேடையில் ஐ ப்போன்
சகிதம், லேப்டாப் உடன். ,அடுப்புக்கு நேர்
எதிரே மேடை மீது அமர்ந்து கொள்கி றேன்!.
நாம் வேலை மும்முரத்தில் இருந்தால்..அடுப்பை
நிறுத்தி விட்டு , அடுத்ததை கவனிக்க வேணும்.,, எங்கும் செல்ல கூடாது !
சுத்தமாக பாலை அடுப்பில் வைத்த
ஞாபகமே இல்ல்லாமல் மறந்து
போனதே காரணம்.!!!
சில நேரங்களில் .. நம் கை மட்டும் வேலைகள் செய்த வண்ணம் இருக்கும்... மனசு மற்றும் கவனம் வேறு எங்காவது ஓடி கொண்டிருக்கும்...கவனம் தேவை.
இல்லாவிட்டால் ஏடா கூடம் ஆகி பிரச்சனைகள் வரும்.
நானும் இது மாதிரி நிறையவாட்டி செய்து அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கின்றேன்...அதுக்கு தான் இப்பொழுது எல்லாம் பால் குக்கர் இருக்கின்றதே...அதனால் பிரச்சனை தீர்ந்தது...
பதிலளிநீக்குநம்ம வீட்டுலயும் பலநாள் பொங்கலோ பொங்கல் தான். :)) அடுப்பில வெச்சிட்டு வேற வேலையில் புகுந்திடுவதுதான் காரணம்.
பதிலளிநீக்குGEETHA ACHAL மேடம் நன்றி!
பதிலளிநீக்குபுதுகைத் தென்றல் வாங்க..
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி!
நானும் இது மாதிரி நிறையவாட்டி செய்து இருக்கின்றேன்.
பதிலளிநீக்குஆயிஷா madam நன்றி!
பதிலளிநீக்குwww.classiindia.com Best Free Classifieds Websites
பதிலளிநீக்குIndian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
Thanks Free Traffic !
பதிலளிநீக்குகவனம் தேவை.
பதிலளிநீக்குஇல்லாவிட்டால் ஏடா கூடம் ஆகி பிரச்சனைகள் வரும்.//
very often.
ஆமாம் ராஜேஸ்வரி மேடம்.
பதிலளிநீக்குநீங்களாவது பால போட்டுட்டு ஹாலில் உட்கார்ந்தீங்க , ஹிஹி நான் ஆபிஸுக்கே போய்ட்டேன், என் பையன்கள் வாடைய பார்த்து அடுப்பை அனைத்து இருக்காஙக்,
பதிலளிநீக்குஇப்படி எப்பவாவது அஜாக்கிரதையா நடப்பதுண்டு.மறதியா போய்ட்டேன்.
பக்கது வீட்டில் மீன் பொரித்து விட்டு கடாய சிம்மில் வைத்து விட்டு ஆபிஸுக்கு போய்ட்டார் கரிஞ்சி தீய்ந்து அந்த வாடை ஒரு வாரம் வரை போகல,
நன்றி ஜலீலா மேடம்
பதிலளிநீக்குSMS gone.. ac on என்ற விளம்பரம் மாதிரி ... ஆபீஸ் ல் இருந்து ஆப் பன்ண முடியாதா?
பொதுவா சமைக்கிறப்ப நம்ம முழுகவனமும் அதுல இருக்கறது ரொம்ப நல்லது.. நிறைய பிரச்சினைகள் அதனால தவிர்க்கப்பட வாய்ப்பிருக்கு :-)
பதிலளிநீக்கு