வெள்ளி, மார்ச் 11, 2011

கண் எதிரே ஒரு பயங்கரம்.

மகளிர் தினம் அன்று எங்க காலேஜ் மாணவியை தொடர்பு கொண்டேன்.

அபபடியே அந்த நிகழ்ச்சி என் கண் முன் தோன்றி மறைந்தது.

சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பு நான் கண்ட பயங்கரம்!!

நான் காலேஜில்  Lecturer   ஆக பனி புரிந்த  நேரம் அது !!

உடுமலை GVG  விசாலாட்சி  காலேஜ் வாசல் அருகே...

அன்று என் வண்டி ரிப்பேர்.  காலாற நடந்து சென்றேன்!

பீக் டைம்.  மாணவிகள் சே !! சனிக்கிழமை கூட காலேஜ்

வைத்து உசிரை எடுக்கிரார்கள் என்று கூறி கொண்டே 

என்னை பார்த்ததும் பேச்சை நிறுத்தி விட்டு கடந்து 

சென்றார்கள்....காலேஜ் வாசலுக்கு எதிர்புறம்  நெருங்கினேன் .

வேகமாக வந்த ஒரு மினி பால் வேன் மயிர் இழையில் என்னை 

உரசி கொண்டு இரண்டு அடி எனக்கு முன்பு சென்று கொண்டிருந்த 

டிவிஎஸ் பிப்டி (மாணவி பின்னால் அமர்ந்து, அவள் அண்ணன் 

வண்டியை ஓட்ட ) பின்னால் அமர்ந்து இருந்த மாணவியை முட்டி

தள்ளி , மாணவி தூக்கி வீ சப்பட்ட நிலையில்  ..அந்த வேன் அந்த 

பெண் வய்ற்றின் மீது பாய்ந்து ஏறி நிலை குலைந்து  ஒரு மரத்தின் 

மீது முட்டி நின்றது ! படக் என்று அதில் இருந்து டிரைவர் கிழே குதித்து 

ஓடினார்.(வண்டியில் ப்ரேக் பிடிக்காத காரணத்தால் .. ) கண் மூடி 

 திறப்பதர்க்குள் , நொடியில் நடந்தது !! மாணவியின் அண்ணன் 

ரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கையை  இரு கைகளில் ஏந்தி , காலேஜ் 
 
வாட்ச்    மேன்  உதவி உடன் , இர ன்டு பேரூம்    டிவிஎஸ் பிப்டி ல்  அமர்ந்து 

மாணவியை நடுவில் சாய்த்து ! வேகமாக ஆஸ்பத்திரி  நோக்கி சென்றனர்.

அன்று முழுவதும் எனக்கு மனசே சரி இல்லை, லீவ் போட்டு விட்டேன்.
M .A (லிட்) பைனல்  இயர் மாணவி ..campus interview வில் செலக்ட் ஆகி 

இருந்தாள்! நாங்கள் ஹாஸ்ப்பிட்டலில் போய் பார்த்த போது, எனக்கு 

சீக்கிரம் சரி ஆகி விடும் மேம் ..என்று தனம்பிகையுடன் கூறினாள்!!!

பல லட்சங்கள் செலவு செய்து வைத்தியம் பார்த்தும் பலன் இல்லை.

பல அறுவை சிகிச்சை க்கு உட்பட்டு , குணம் ஆக வில்லை.ஏதோ

நரம்புகள் கோளாறு காரணாமாய் அவளால் எழுந்து உட்கார கூட 

முடியலை. ரண வேதனை உடன் , சிரித்த முகம் மாறாமல் , தொலை தூர 

கல்வி மூலம் விட்ட படிப்பை தொடர்கிறாள். என்றனர்.இது தான் விதி

என்பதா?..என்னால் ஜீரணித்து கொள்ளவே முடிய வில்லை.  இன்று

நினைத்தாலும் , ஆண்டவன் மீது கோபம் வருகிறது...உயிருடன் செத்து

கொண்டு இருக்கிறாள்..யாரை நொந்து என்ன செய்ய..அவன் செய்யல

அனைத்தும்.. சக்கர நாற்காலி மீது கூட உட்கார முடியாத நிலை.!!!!

அந்த பெண்ணை தான் நான்  தொடர்பு   கொண்டேன் போனில்....!


15 கருத்துகள் :

  1. படிக்கவே மனம் பதறுகிறதே ...நேரில் உங்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் ...மிகவும் கோரமான விபத்து ....அந்த பெண் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் ...

    பதிலளிநீக்கு
  2. உங்களைப் போன்ற ஆசிரியைகளின் ஊக்க வார்த்தைகளால் அவர் தன்னம்பிக்கையோடு இருப்பார் என நம்புகிறேன். பயங்கரத்தை நினைத்துப் பார்க்கவே பதறுகிறது. நீங்கள் பார்த்தே இருக்கிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
  3. அந்தப் பெண் சீக்கிரம் நலம் பெற இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
    நன்றாகப் படித்த பிளஸ் 2 மாணவியை 2 வீலரில் கொண்டு விடச் சென்ற தந்தையும் அவளும் ஆக்ஸிடென்ட்டில் இறந்த அவலமும் இப்போது நடந்ததது!

    பதிலளிநீக்கு
  4. (எனக்கு சீக்கிரம் சரி ஆகி விடும் மேம் ..என்று தனம்பிகையுடன் கூறினாள்!) Antha manavi seekiram kunam adaiya vendum...(Background matrinal nanraga irukkum. padika siramamaga ullathu.)

    பதிலளிநீக்கு
  5. கோவை நேரம் தங்கள் வருகைக்கும்,
    கருத்துக்கும் மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  6. middleclassmadhavi வாங்க !
    சம்பவங்கள் நடந்து கொண்டு தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. ஹுஸைனம்மா நீங்கள் சொல்வது சரி !
    தன்னம்பிக்கை தான் வாழ்க்கைக்கு அச்சாரம் .

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா நன்றி… !
    BACKGROUND விரைவில் மாற்றுகிறேன்,

    பதிலளிநீக்கு
  9. சென்ற நவம்பர் மாதம், ஒரு விபத்தில், என் நெருங்கிய தோழிகளில் ஒருவர் இறந்தார். அவளது இரட்டை பிறவி சகோதரி, தன் கைகள் - கால்கள் - அசைக்க முடியாத நிலையில் இன்னும் இருக்கிறாள்.... என்னை பெரிதும் பாதித்த சம்பவம் இது. இதை பற்றி கூட ஒரு பதிவு எழுதி இருந்தேன். சில சம்பவங்களுக்கு, காரணம் புரியாது. சுனாமி போல வந்து வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. :-(

    பதிலளிநீக்கு
  10. P.S. It is hard to read your blog post with small letters and distracting background.

    பதிலளிநீக்கு
  11. என்ன கொடுமை...படிக்கும் பொழுதே அழுகையாக இருக்கும்..இது எல்லாம் நீங்க நேரில் பார்க்கும் பொழுது..அப்பாடா..நினைக்கவே பதறுது.இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் தளராமல் இருக்கும் அந்த மாணவிக்கு பாராட்டு...

    பதிலளிநீக்கு
  12. bandhu தங்கள் வருகைக்கும்,
    கருத்துக்கும் மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  13. GEETHA ACHAL வாங்க! நெஞ்சு பதறுகிறது ங்க!
    அந்த மாணவியை பாராட்டி ஆகனும் .

    பதிலளிநீக்கு
  14. Chitra ஆமாம் சுனாமி போல வந்து
    வாழ்க்கையையே மாற்றி விடுகிறது!
    BACKGROUND விரைவில் மாற்றுகிறேன்,

    பதிலளிநீக்கு

welcome