சனி, டிசம்பர் 18, 2010

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது



source http://z9tech.com/
 பரிசுத்தமான அன்பு செலுத்தும் ரோபோவை ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் உல்ரிச் கண்டுபிடித்திருக்கிறார்.
இதற்கு பெயர் ‘ஃபங்ஷனைடு’. வழக்கமான ரோபோ போல கை, கால், தலை, வெடுக் வெடுக் நடை இதெல்லாம் இதற்கு கிடையாது. பெரிய சைஸ் தலையணை போல இருக்கும். மடியில் வைத்துக் கொள்ளலாம்.  அதை சோபாவில் வைத்து அதன் ‘மடியில்’ படுத்துக் கொள்ளலாம்.
பலரைப் பற்றிய தகவல்களை இதில் சேமித்து வைக்க முடியும். தோலின் நிறத்தை வைத்து, யார் தொடுகிறார் என்பதை ஃபங்ஷனைடு தெரிந்துகொள்ளும். நம் பாடி உஷ்ணநிலையை  வைத்து சார்/மேடம் ..      அமைதியாக இருக்கிறார்களா, கோபத்தில் இருக்கிறார்களா என்பதை உணர்ந்துகொள்கிறது. நாம் குஷி மூடில் இருந்தால் அதுவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற வகையில் தனது ‘உடலை’ வைத்துக் கொள்கிறது. நாம் சோகமாக இருக்கும் சூழ்நிலையில் அதை மடியில் வைத்துக் கொண்டால் ஆறுதலாய் உடம்பை வருடிக் கொடுக்கிறது.மனிதரின் உணர்ச்சியை புரிந்துகொண்டு அதற்கேற்ப
ரியாக்ஷனை வெளிப்படுத்துவதற்காக மைக்ரோ சென்சார்கள், மனிதனின்
தசைகள் போன்ற மென்மையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
நம்மிடம் அன்பு, பாசம் காட்டத்தான் கேர்ள்பிரெண்ட், பாய்பிரெண்டை நாடுகிறோம்.  ஃபங்ஷனைடுகள் வந்துவிட்டால் இதற்கெல்லாம் அவசியம் இல்லாமல் போய்விடும். தனிமையில் வாடும் முதியவர்கள், ஆதரவின்றி இருப்பவர்களுக்காகவே இதை உருவாக்கினேன் என்கிறார் உல்ரிச்.

எந்திரன் படம் வெளி ஆனதிலிருந்து  ரோபோவை  விரும்பாதவர்களே இல்லை.
அந்த அளவுக்கு ரோபோ அனைவர் மனதை கவர்ந்து உள்ளது.எங்க வீட்டு பொடிசு
எங்க  மலயம்மா (வேலை செய்யும் அம்மா) பெட் நேம் சிட்டி என்று வைத்து
இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்களேன் !! அவ்வளவு craze  ரோபோ மீது..
தேங்க்ஸ் z9tech

16 கருத்துகள் :

  1. //நம் பாடி உஷ்ணநிலையை வைத்து சார்/மேடம் .. அமைதியாக இருக்கிறார்களா, கோபத்தில் இருக்கிறார்களா என்பதை உணர்ந்துகொள்கிறது//
    ஆகா.. அற்புதம்..


    நல்ல பதிவு.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அவ்வளவு craze ரோபோ மீது..
    உண்மைதான்....சிட்டி ஏலவற்றையும் ஈர்த்துவிட்டது.....

    பதிலளிநீக்கு
  3. தேவன் மாயம் thanks.
    இந்த robo அன்பை கொடுக்கும் .. நம்புவோம்!!

    பதிலளிநீக்கு
  4. பாரத்... பாரதி..வாங்க.
    இந்த அற்புதத்தை விரைவில் காண்போம்..

    பதிலளிநீக்கு
  5. வரவேற்கத்தக்க ஒரு கண்டுபிடிப்பு.

    பதிலளிநீக்கு
  6. காதல் செய்யும் ரோபோ...! இந்தியாவுக்கு எப்போ வருதாம்...

    பதிலளிநீக்கு
  7. S பாரதி வைதேகி தங்கள் கருத்துக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  8. philosophy prabhakaran

    எதுக்கு கேக்குறீங்க?
    கேள்வியே சரி இல்லையே!!

    பதிலளிநீக்கு
  9. நல்ல தகவல்கள்

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

welcome