இது போல் உங்க தேவைக்கு ஏற்ப சாமான்களை சுமார் ஒரு மாதத்திற்கு
வேண்டியதை சிரமம் பார்க்காமல் மொத்த வியாபார கடைகளில் , ஒரு
தடவை இப்படி லிஸ்ட் போட்டு வாங்கி ஸ்டோர் செய்து கொண்டால் ....
அடுத்த மாதம் வரை ..அடிக்கடி கடைக்கு சென்று மனம் போன போக்கில்
சாமான்களை அடுக்கி அள்ளி கொண்டு வந்து வீணாவதை தவிர்க்கலாம்.!!
உங்க பாமிலிக்கு இது போல் ,உங்களுக்கு வேண்டிய அளவில் லிஸ்ட்
தயாரித்து வைத்து கொண்டால் மண்டையை பிய்த்து கொள்ள வேணாமே ...
ஒரு தடவை தயாரித்தால் போதும் !! வருடம் முழுவதும் இந்த மாஸ்டர்
லிஸ்டை யூஸ் பண்ணி வேண்டியதை மட்டும் டிக் செய்து வாங்கலாம்.!!
நான்கு பேர் உள்ள பாமிலிக்கு தோரயனமாய் தேவை படும் மளிகை ஐட்டம்
இந்த லிஸ்டில் சில சாமான்கள் விடு பட்டு இருக்கலாம் ..சுட்டி காட்டுங்க.ப்ளீஸ்..
மளிகை சாமான்கள் | அளவு |
மஞ்சள் தூள் | நூறு கிராம் |
கடுகு | இருநூறு கிராம் |
சீரகம் | நூறு கிராம் |
மிளகு | நூறு கிராம் |
தாளிக்கும் உளுந்து | நூறு கிராம் |
வெந்தயம் | நூறு கிராம் |
சோம்பு | ஐம்பது கிராம் |
கிராம்பு | இருபத்தி ஐந்து கிராம் |
பட்டை | இருபத்தி ஐந்து கிராம் |
பிரியாணி இலை | ஐ ந்து ரூபாய் பாக்கெட் |
வரமிளகாய் | ஒரு கிலோ |
தனியா | ஒரு கிலோ |
கடலை பருப்பு | ஒரு கிலோ |
துவரம் பருப்பு | இரண்டு கிலோ |
பாசி பருப்பு | ஒரு கிலோ |
உளுந்து | இரண்டு கிலோ |
ராஜ்மா பீன்ஸ் | கால கிலோ |
கொள்ளு | கால கிலோ |
பாசி பயறு | அரை கிலோ |
கொண்டை கடலை | அரை கிலோ |
உடைத்த கடலை | அரை கிலோ |
நிலகடலை | கால கிலோ |
தட்டை பயறு | கால கிலோ |
முந்திரி | இருபத்து ஐந்து கிராம் |
திராட்சை வத்தல் | இருபத்து ஐந்து கிராம் |
ஏலக்ககாய் | இருபது ரூபாய் |
கோதுமை மாவு | இரண்டு கிலோ |
சக்கரை | மூன்று கிலோ |
வெல்லம் | ஒரு கிலோ |
மைதா | அரை கிலோ |
வெள்ளை ரவை | ஒரு கிலோ |
சம்பா கோதுமை ரவை | ஒரு கிலோ |
கடலை மாவு | அரை கிலோ |
பச்சை அரிசி மாவு /பச்சை அரிசி | அரை கிலோ /ஒன்று |
கல் உப்பு/சால்ட் | தலா ௧ கிலோ |
சாப்பாடு அரிசி | இருபத்தி ஐந்து கிலோ பாக் |
இட்லி அரிசி | பாத்து கிலோ பாக் |
ஜவ்வரிசி | இருநூறு கிராம் |
ராகி மாவு | அரை கிலோ |
சேமியா /நூட்லஸ் | இரண்டு பாக்கெட் |
நல்ல எண்ணெய் | ஒரு லிட்டர் |
ரிபைன்டு ஆயில் | இரண்டு லிட்டர் |
விளக்கு எண்ணெய் | ஒரு லிட்டர் |
தேங்காய் எண்ணெய் | அரை லிட்டர் |
வாஷிங் சோப்பு /Detergent பவுடர் | ஒரு கிலோ |
குளிக்கிற சோப்பு | நான்கு |
டிஷ் வாஷிங் சோப்பு | நாங்கு |
ஆல் அவுட் காயில் / லிக்விடு | இரண்டு |
பெருங்காயம் | ஒரு டப்பா |
காபி /டீ/காம்ப்ளான்/பூஸ்ட் | தலா அரை கிலோ |
பேரிச்சை /தேன்/ஓட்ஸ் | தலா அரை கிலோ |
வெண்ணை/நெய் | ஒரு கிலோ |
மிளகாய் தூள்/மல்லி தூள் | தலா நூறு கிராம் |
புளி | ஒரு கிலோ |
பூண்டு | ஒரு கிலோ |
பிரியாணி மசால் பவுடர் | நூறு கிராம் |
காயந்த பட்டாணி | கால கிலோ |
பற்பசை பவுடர்/பேஸ்ட் -பிரஷ் | இரண்டு |
சூடம்/சாம்பிராணி | இரண்டு டப்பா |
ஓகே..இதை வாங்கினால் மட்டும் போதாது. தந்தை குலம் /அண்ணன் /தம்பிகள்
உங்க பாமிலிக்கு இதை நேர்த்தியாக டப்பாகளில் கொட்டி அடுக்கி வைக்க உதவும்
படி கேட்டு கொள்கிறேன்...ப்ளீஸ் முறைக்காதீர்கள்..நீங்க நல்ல மக்கள் ..செய்வீகே ..
அடுத்து பெண்களே /சகோதரிகளே !! வெங்காயம் நேற்று அதிக விலை என்று
படித்தேன். !! இந்த லிஸ்ட் எவ்வளவு காஸ்ட்லி என்பதை மனதில் கொண்டு
சிறிது கூட வேஸ்ட் ஆகாமல் ..அடுத்த மாதம் வரும் வரை ..எந்த காரணத்திற்கும்
நடுவில் சாமான் வாங்கும் நினைப்பை மறந்து விடுங்கள். உறுதியாக இருங்கள்.
உதாரனத்திற்கு துவரம் பருப்பு இரண்டு கிலோ வாங்கினால் ..அதை அந்த மாதம்
முழுவதும் அடிக்கடி சாம்பார் செய்து போர் அடிக்காமல் இருக்க வாரம் இருமுறை
வீதம் செய்ய ,துவரம் பருப்பை 5x2 =10
பத்து பங்குகளாக பிரித்து சின்ன கவர்களில்
கொட்டி பின் போட்டு விடுங்க ..காலை அவசரத்துக்கு கவரை பிரித்து கொட்ட ஈஸி
ஆக இருக்கும்...சாம்பார் ரிப்பீட் ஆகாது ..சாமானும் சீக்கிரம் தீராது.என் அனுபவம் இது.
பொறுமையா எழுதிருக்கீங்களே!! பலருக்கும் பயன்படும் நிச்சயம்.
பதிலளிநீக்குஹுஸைனம்மா Mam ..
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி !
மிகவும் பயனுள்ள பொறுமையான பதிவு..
பதிலளிநீக்குgood job....
பதிலளிநீக்குசூப்பர் டிப்ஸ் நன்றி கீதா
பதிலளிநீக்குமிகவும் உபயோகமான பதிவு.
பதிலளிநீக்குsuper kool post and useful nuggets of information !
பதிலளிநீக்குபயனுள்ள டிப்ஸ்... ரொம்ப யோசித்து கொடுத்திருக்கிங்க.. நன்றி
பதிலளிநீக்குயூஸ்ஃபுல் லிஸ்ட் & டிப்ஸ்! அஞ்சறைப் பெட்டியும் சூப்பர். இதுபோல்தான் (பயணம் புறப்படும் வரை) தேடினேன், கிடைக்கவில்லை :(
பதிலளிநீக்குஆ... சூப்பர்... பிரிண்ட் அவுட் எடுத்துக்குறேன்...
பதிலளிநீக்குஃபிலாஸபி பிரபாகரனின் கருத்தை.............. ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..
பதிலளிநீக்குசீக்கிரம் பிரிண்ட் எடுத்து ஜெராக்ஸ் பண்ணுங்க..philosophy prabhakaran!!
பதிலளிநீக்குyeskha நன்றி!
பதிலளிநீக்குஅஸ்மா madam தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி..
பதிலளிநீக்குஆமாம் சிநேகிதி.
பதிலளிநீக்குஎல்லாருக்கும் பயன் படும் !
நன்றி மீண்டும் வருக .
ரொம்ப சூபப்ர் கீதா, மிக அருமையான பதிவு, பகிர்வு, எல்லா இல்லத்தரசிகளுக்கும் தேவையானவை
பதிலளிநீக்குஅந்த எக்ஸல் காலம் எப்படி கொண்டு வந்தீங்க
இமேஜ் களை இனைப்பது போலவா?
நன்றி புவனேஸ்வரி ராமநாதன் mam.
பதிலளிநீக்குவோர்ட் ல டேபிள் உருவாக்கி கட் காப்பி பேஸ்ட் தான்.ரொம்ப ஈஸி ! நன்றி.
பதிலளிநீக்குNKS.ஹாஜா மைதீன் நன்றி.
பதிலளிநீக்குPriya Sreeram welcome!
பதிலளிநீக்குதேனம்மை லெக்ஷ்மணன் மேடம்,. தங்கள் கருத்துக்கு நன்றி !! மீண்டும் வருக ..
பதிலளிநீக்குகண்ணகி நன்றி!!
பதிலளிநீக்குநிறைய இல்லத்தரசிகளுக்கு அவசியம் பயன் படும்.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநல்ல பகிர்வு,மிக்க நன்றி.கரெக்டாக எழுதி இருக்கீங்க,விளக்கெண்ணெய் எதற்கு பயன்படுத்துவீர்கள்? நானும் இவ்வளவு சாமானும் வாங்கினால் அஞ்சறைப்பெட்டி ஃப்ரியோ என்று நினைத்தேன்,இதே போல் என்னிடமும் இருக்கு.அழகு.ஆனால் அந்த ஸ்பூன் இல்லை.
பதிலளிநீக்குattaendance
பதிலளிநீக்குhttp://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
பதிலளிநீக்குகீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !
Looks very good, But living in Moscow and we don't get most of the things.
பதிலளிநீக்குThank you and for sure I'll send it to my Mom and my Sister.
Thanks once again.
r
ஸாதிகா madam நன்றி.
பதிலளிநீக்குசி.பி.செந்தில்குமார் sir தேங்க்ஸ்
பதிலளிநீக்குasiya omar madam விளகெண்ணை விளக்குக்கு பயன்படும்.குழந்தைகள் கண் இமைகள், மற்றும் வாழை பழம் + விளகெண்ணை, சிறு குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்ய கொடுப்பார்கள்.. தங்கள் கருத்துக்கு நன்றி
பதிலளிநீக்கு? http://www.vinavu.com thanks.
பதிலளிநீக்குHope welcome.
பதிலளிநீக்குThank you.
We updated our list using this list.. thanks Geethaம்மா, we may add followings..
பதிலளிநீக்குபிரெட்
பால்
காஸ் சிலிண்டர்
பினாயில்
மெழுகுவர்த்தி
கருப்பு கவர் (குப்பை-கழிவு)
ஷாம்பூ
அப்பளம்
டால்டா
ரசம் பவுடர்
கரம் மசாலா பவுடர்
ரூம் ஸ்ப்ரே
சலவை சோடா
சமையல் சோடா
கழிப்பறை கிளீனர் (ஹார்பிக்)
தரை கிளீனர் (லைசால்)
பவுடர் (முகத்திற்கு)
டெட்டால்
ஊறுகாய்
பிஸ்கட்
எங்கள் முதியோர் இல்ல தேவை பட்டியலுக்கு... http://www.aarathy.org/res/requirements.html
எங்கள் பட்டியலை மறுவடிவம் செய்துகொண்டோம். நன்றி கீதாம்மா. பின்வருவனவற்றை சேர்க்கலாம்...
பதிலளிநீக்குபிரெட்
பால்
காஸ் சிலிண்டர்
பினாயில்
மெழுகுவர்த்தி
கருப்பு கவர் (குப்பை-கழிவு)
ஷாம்பூ
அப்பளம்
டால்டா
ரசம் பவுடர்
கரம் மசாலா பவுடர்
ரூம் ஸ்ப்ரே
சலவை சோடா
சமையல் சோடா
கழிப்பறை கிளீனர் (ஹார்பிக்)
தரை கிளீனர் (லைசால்)
பவுடர் (முகத்திற்கு)
டெட்டால்
ஊறுகாய்
பிஸ்கட்
எங்கள் தள பட்டியலிற்கு..
http://www.aarathy.org/res/requirements.html
எங்கள் பட்டியலை மறுவடிவம் செய்துகொண்டோம். நன்றி கீதாம்மா. பின்வருவனவற்றை சேர்க்கலாம்...
பதிலளிநீக்குபிரெட்
பால்
காஸ் சிலிண்டர்
பினாயில்
மெழுகுவர்த்தி
கருப்பு கவர் (குப்பை-கழிவு)
ஷாம்பூ
அப்பளம்
டால்டா
ரசம் பவுடர்
கரம் மசாலா பவுடர்
ரூம் ஸ்ப்ரே
சலவை சோடா
சமையல் சோடா
கழிப்பறை கிளீனர் (ஹார்பிக்)
தரை கிளீனர் (லைசால்)
பவுடர் (முகத்திற்கு)
டெட்டால்
ஊறுகாய்
பிஸ்கட்
எங்கள் தள பட்டியலிற்கு..
http://www.aarathy.org/res/requirements.html
please add match box surya
நீக்குசூர்யா சார் நன்றி! தங்கள் டிரஸ்ட் பற்றி அறிந்து கொண்டேன் !! உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துகள் !!
பதிலளிநீக்குவிரைவில் நானும் எதாவது உங்கள் அமைப்புக்கு செய்ய உள்ளேன் !
மிக்க நன்றி கீதாம்மா!
பதிலளிநீக்குThank You... When I wanted to prepare a list this was very much helpful...
பதிலளிநீக்கு