செவ்வாய், நவம்பர் 30, 2010

உண்மை வலிக்கிறது

உலகத்தை புரிந்து கொண்டேன் !

என் வீடு அருகில் ஒரு பாட்டி 92 , வயது ஆகிறது.

5 , மகன்கள் உள்ளனர் . மகள் இல்லை . மூன்று மகன்கள் 

இறந்து விட்டனர். பேரன் பேத்திகள் ,கொள்ளு பேரன் பேத்திகள்

இருகின்றனர். இறந்து போன ஒரு மகனின் மனைவி பாட்டி வீட்டு

பக்கத்தில் தான் இருக்கிறார். ஆனாலும் பாட்டி தனியாக சமையல் 

செய்து சாப்பிடுகிறார், அனைவரும் பணம் கொடுத்து விடுகின்றனர் .

ஆனால் அருகில் ஒருவரும் இல்லை. வயது அதிகம் ஆவதால் தற்சமயம் 

சமைத்து சாப்பிட முடிய வில்லை. இடுப்பு எலும்பு முறிந்து அறுவை 

சிகிச்சை செய்து இப்பொது நன்றாக இருக்கிறார். இருபினும் தன் கூட 

ஒருவரும் இல்லையே என்று அடிக்கடி கூறுகிறார்.எங்கள் வீட்டுக்கு மட்டும் 

வந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருப்பார். தனிமை அவரை மிகவும் 

பாதித்துள்ளது.வயது ஆவதால் முடியவில்லை அவரால்.பாவம்! 

சமீபத்தில் அவர்கள் இல்ல விழாவுக்கு அனைவரும் பாட்டி வீட்டில் கூடினர்.

அவருக்கு சாப்பாடு இனிமேல் மெஸ்ஸில் ஏற்பாடு செய்து விடூவோம் ,

என்று முடிவு செய்து , என் முன்னிலையில், பாடடி இடம் பேசினார்கள். 

பாட்டி எனக்கு சாப்பாடு பிரச்சனை இல்லை ,, என் கூட யாராவது 

இருந்தால் போதும் என்றார். ஒருவரும் முன் வரவில்லை. அவர்கள் சொன்னது :

முதல் மருமகள் : மெஸ்சில் பணம் கொடுத்து சாப்பிடட்டும், நமக்கு இவர்கள் 

சகவாசம் வேண்டாம், ,என் புருஷன் உயிருடன் இருந்த போது தான் இந்த 

கிழவி நிம்மதியா என்னை வாழவிடலை, தினம் எங்களுக்குள் சண்டை மூட்டி 

விடும் . இனியாவது நான் என் வழியில் செல்கிறேன், என்னை விடுங்கள் என்றார்.

இரண்டாவது மருமகள் நாங்கள் பணம் மெஸ்ஸில் செலுத்தி விடுகிறோம் 

எங்களை ஆளை விடுங்கள், இளைய  மகனுக்கு தான் எல்லா நகையும் 

தந்தார்கள், அவர்களே கவனித்து கொள்ளட்டும்., நாங்கள் தொலைவில் 

இருககிறோம் அடிகடி வர முடியாது .ஒரு வழி பாட்டிக்குசெய்கிறோம் என்றார்.

மூன்றாவது மருமகள் இவருடைய டார்ச்சர் தாங்காமல் புருஷனை விட்டு 

சென்று விட்டாராம் . நான்காவது மருமகள் .என் பிள்ளைகளை ,குழந்தைகள் 

காப்பகத்தில் அன்று விட சொன்னார்கள் ., இன்று இவங்களை முதியோர் 

இல்லத்துக்கு அனுப்புங்கள் .என்று கூறி விட்டு தனக்கும் இந்த பிரச்சனைக்கும 

சமந்தமே இல்லை என்பது போல் உட்கார்ந்து இருந்தார் ஒரு ஓரமாக.....

கடைசி மருமகள் கூறியது: இதோ பாருங்க , எல்லாருக்கும் வீடு இருக்கு .

எங்களுக்கு மட்டும் இல்லை , அதனால் பாட்டி இருக்கிற வீட்டு பத்திரத்தை 

கொடுங்க நாங்க பிழைச்சுகிற... பிறகு  பாக்கலாம் பாட்டி விசயத்தை. என்றார்.

பாட்டி எனக்கு யாரும் வேண்டாம் என்று தலையில் அடித்துக்கொண்டு போனார். 

யாரை நொந்து கொள்ள ..என்ன சொல்ல.. அமைதியாக சென்று விட்டனர்.


31 கருத்துகள் :

 1. வலைப்பதிவர்களே உஷார்

  http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

  பதிலளிநீக்கு
 2. இதுதான் உலகம்,வாழ்க்கை...தனிமை மிக கொடுமையானதுதான் வயதான காலத்தில்...

  பதிலளிநீக்கு
 3. கொடுமையான விஷயம்.. தங்களுக்கும் வயதாகும் என்பதை பலர் மறந்து விடுகிறார்கள்.. மனைவியை பேச விட்டு முந்தானைக்கு பின்னால் ஒளியும் மூடர்கள் என்று தான் திருந்த போகிறார்களோ..

  பதிலளிநீக்கு
 4. வருத்தமான விடயம்..வெறும்பயலின் கருத்தே எனதும்..

  பதிலளிநீக்கு
 5. பகிர்வுக்கு நன்றி. வித்தியாசமான பார்வை.

  பதிலளிநீக்கு
 6. இதுதான் நிதர்சனம். எல்லோரும் மருமகள்களையே குற்றம் கூறாதீர்கள். நன்றாக இருந்த போது குழந்தைகளை காப்பகத்தில் விடச் சொன்ன அந்த கிழவி இப்போது அனுபவிக்க வேண்டியதுதான். ஹரீஷும் வெறும் பயலும் இன்னும் திருமணம் ஆகாதவர்களா இருக்க வேண்டும். உலகம் புரியாதவர்கள். இரண்டு காசு கையில் வைத்துக் கொண்டு குழந்தைகளைத் தூற்றினால் இதுவும் வரும் இன்னமும் வரும். பிஞ்சுக் குழந்தைகளை காப்பகத்தில் விடச் சொன்ன கிழவி தான் போவதற்கென்ன கேடு?

  பதிலளிநீக்கு
 7. வெறும்பய --தங்கள் பெயரை குறிபிடுங்கள்!
  கருத்துக்கு நன்றி!.

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா சொன்னது:
  எல்லாம் அவன் செய்யல ~

  பதிலளிநீக்கு
 9. மனது வலிக்கும் செய்தி இது. இன்று இந்த மாதிரியான மருமகள்கள் அதிகமாகி விட்டனர். பெண்களே , பெண்களுக்கு உதவ வராத இந்த சூழ்நிலையில் ஆணை தப்பு சொல்லி என்ன பயன் ?

  பதிலளிநீக்கு
 10. உங்கள் புதிய டெம்ப்ளட் , எழுத்துகள் படிக்க கொஞ்சம் சிரமமாக உள்ளது...

  பதிலளிநீக்கு
 11. வாங்க ஈரோடு தங்கதுரை
  எழுத்துகளை விரைவில் சரி செய்து விடுகிறேன்..தங்கள் கருத்துக்கு மிக நன்றி!

  பதிலளிநீக்கு
 12. இரு பக்கத்து நியாய அனுதாபங்கள் தெரிவித்து இருந்தாலும், பாட்டியின் இன்றைய நிலை பரிதாபத்துக்குரியதே. :-(

  பதிலளிநீக்கு
 13. you have a wonderfull blog............visit my blog if time permits............http://lets-cook-something.blogspot.com/

  பதிலளிநீக்கு
 14. அந்த பாட்டி மேலும் தவறு இருக்குறது அல்லவே..

  பதிலளிநீக்கு
 15. உங்கள் கருத்துகளில் இருந்து நான் மாறுபட்ட கருத்தை சொல்வதால் மன்னிக்கவும்.

  உண்மையான விஷயம் என்னவென்றால் - உண்மையிலேயே தன குழந்தைகளை நேசிக்கும் பெற்றோர்களே முதியோர் இல்லத்தில் விடப்படுகின்றனர்.
  சில விதி விலககுகள் உண்டு. வீடு முதலான சொத்துக்கள் தன்னிடம் இருக்கும் போது சில பெரியவர்கள் சில கேட்கமுடியாத வார்த்தைகளால் தன் வீட்டுக்கு வந்த மகள்களை(மருமகள்களை) திட்டி விடுகின்றனர்.
  இந்த பெண்களுக்கு நினைவு சக்தி அதிகம் அதை நேரம் வரும்போது காட்டுகின்றனர்.
  -
  http://vikkiulagam.blogspot.com/2010/11/blog-post_4783.html

  இது சம்பந்தமான என் கருத்து இந்த இடுகையில் உள்ளது நேரமிருந்தால் கவனிக்கவும்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 16. //பாட்டி இருக்கிற வீட்டு பத்திரத்தை

  கொடுங்க நாங்க பிழைச்சுகிற... பிறகு பாக்கலாம் பாட்டி விசயத்தை. //

  திண்னை காலியாக வெட்கமின்றி காத்திருப்பவர்கள்..

  பதிலளிநீக்கு
 17. பாரத்... பாரதி.
  வாங்க .கருத்துக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 18. விக்கி உலகம் நல்வரவு !
  உங்க ப்ளாக் போஸ்ட் பார்த்தேன். சரியாசொன்னீங்கே..வயதான காலத்தில் அவர்களுக்கு என்று சேமிப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 19. பெயரில்லா சொன்னது:
  மாறுபட்ட கருத்தை வரவேற்கிறேன் ..
  ---------------------------------------------
  ஓட்டு போட்டு கருத்து சொல்லி என் போஸ்டை பிரபலமாக்கிய அனைத்து அன்பு உள்ளங்களை வணங்கி ,என் நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன் !

  பதிலளிநீக்கு
 20. அடுத்தவரை நாம் நம்பி இருக்கும்
  போது சற்று அனுசரித்து தான் போக வேண்டும்.... இல்லாவிட்டால் நாம் நம்மை நம்பித்தான் இருக்க வேண்டும் ......:-):-(

  பதிலளிநீக்கு

welcome