சனி, டிசம்பர் 04, 2010

மெனோபாஸ்-பெண்களுக்கு மட்டும்!!

பெண்களுக்கு மட்டும் !!

ஓவ்வரு  பெண்ணும் தெரிந்து இருக்க வேண்டிய ஒன்று  ...

நான் பிஜி சென்று இருந்த போது எனக்கு இரண்டு தமிழ் 
குடும்பங்களின் அறிமுகம் கிடைத்தது! நானும் நமக்கு 
தமிழ் பேச இரண்டு பேர் கிடைத்து இருக்கிறார்கள் ! என்று
மகிழ்ந்தேன்.அப்பெண்கள் இருவரும் தோழிகள் ஆனார்கள்.
அவர்கள் இருவருக்கும் கர்ப்ப பையில் கோளாறு காரணமாக 
மாத விடாய் பிரச்சனைகள் உள்ளது..அதனால் இதில் 
ஒருவருக்கு கர்ப்ப பை முற்றிலும்  நீக்கப்பட்டு 
விட்டது என்று அறிந்தேன்.

கர்ப்ப பை நன்றாக இருக்கும் வரை தான் பெண்கள்
ஆரோக்கியமாக இருப்பார்கள் , அதை நீக்கி விட்டால் 
பல பிரச்சநைகள் சந்திக்க வேண்டி வரும்..அதிலும் 
மாத  விடாய்  நின்று விட்டால் எல்லா 
துன்பங்களும் ஒன்று சேர்ந்து வந்து விடும் ..அந்த சமயம்
ஏண்டா பென்ணாக பிறந்தோம்னு விரக்தி யின் எல்லைகே சென்று 
விடுவோம்..நாற்பது வயது தான் என்று இல்லை ..
எப்ப வேண்டுமானாலும்  வரலாம். ஜாக்கிரதை .!. லொட லொட 
என்று அடுக்கி கொண்டே போனார்கள் ..எனக்கு குழப்பமாகி போனது.

மேலும் அவர் அம்மா இந்த சமயத்தில் பட்ட துன்பங்களை தான்
நேரில் சிறு வயதில் பார்த்து இருக்கிறேன் என்றும் கூறினார்.
எதையோ  இழந்ததை போல் உள்ளது ,நீங்க ரொம்ப ஜாக்கிரதையாக 
அந்த சமயத்தில் இருக்கனும்..என்று தான் அனுபவித்ததை, சிறு 
வயதிலயே  சந்தித்து பெரும் துயருக்கும்  மன உளச்ச்சளுக்கு
ஆட்கொண்டு  சிரமப் படுவதாக கூறினார்கள்.

 
இது ஒரு சுழற்சி முறை ,
இதை ஈசி ஆக எடுத்து 
கொண்டு , எதிர்நோக்க 
இன்றைய பெண்களுக்கு 
தெரிந்து இருப்பது மிக 
அவசியமானத்தில் 
ஒன்றாகும்.!!! இதை 
கண்டு பயப்பட வேண்டிய 
கட்டாயம் ஒன்றும் இல்லை .
இவர்களும் பயந்து, 
நம்மையும் பயப்பட வைத்து , வாழ்கையை நரகம் ஆக்குகிறார்கள்..
இது பெண்களுக்கு பெண்கள் வேறு படும் என்பதை 
மனதில் கொள்ள வேண்டும்! அதனால் டென்ஷன் ஆகாமல் வரவேற்க 
பழகி கொள்ள வேணும் ...சிலர் கஷ்ட பட்டு இருக்கலாம்..அதை நரகமாக 
எதிர் கொள்ளாத  வரை....மருத்துவரை அணுகி இதன் விவரம் அறிந்தேன்...

இதோ நான் சேகரித்த விவரங்களை இங்கு பகிர்கிறேன்..நீங்களும் உங்க 
பொண்ணன கருத்துகளை என்னுட ன் பகிர்ந்து கொள்ள முன் வாருங்கள்.



ஒரு பெண்ணுக்கு  குறிப்பிட்ட அளவு  கரு முட்டைகள் இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை விடுபட்டு மாதவிடாய் நிகழ்கிறது. பெண் வயதாகு ம் போது அந்த  
முட்டைகளின் எண்ணிக்கை 
குறைந்து வந்து      45-55 வயதுக்குள் 
அவை தீர்ந்து போகும். இதுவே மாதவிடாய் நிறுத்தம் ஆகும். 
இதனால் பெண் உடலில் உற்பத்தி ஆகும் estrogen போன்ற 
ஹார்மோன்   குறைகின்றன. இது உடலை பல்வேறு 
 மாற்றங்களுக்கு உட்படுத்துகிறது!! ஒரு பெண்ணுக்கு 
மாதவிடாய் நிறுத்தம் பல்வேறு உளவியல் 
மாற்றங்களை விளைவுகளை ஏற்படுத்துகிறது!!
Premature Meno Pause
நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் 
செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி
 கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் 
சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். 
அதாவது மாதவிடாய் நின்று விடும் நிலைக்குப் 
பெயர்தான் மெனோபாஸ்!சிலருக்கு முப்பத்தைந்து  
வயதுக்கு முன்னாலும்கூட மெனோபாஸ் வரலாம். 
அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause)
என்று பெயர்.ஓவரியில் ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை 
ரிமூவ் பண்ணியிருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி 
போன்ற ட்ரீட்மென்ட் எடுத்தாலோ, இல்லையென்றால் 
வைரஸ் இன்ஃபெக்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்!

பெரிமெனோபாஸ்
நாற்பத்தெட்டு வயதில் மெனோபாஸ் ஆகப்போகிறதெனில், 
 நாற்பத்தைந்து வயதிலேயே அதற்கான அறிகுறிகள்  
ஆரம்பித்துவிடும். இதுதான் பெரிமெனோபாஸ்
சிடுசிடுவென்று விழுவது,  மூட் அவுட் ஆவது,   
மூட்டு வலி, கைகால் உளைச்சல்
இதன் அறிகுறிகள். . சரியாக இருபத்தெட்டு 
நாட்களில் வந்துகொண்டிருந்த மாத விடாய் 
சில மாதங்கள் கழித்தெல்லாம் திடீரென்று வந்து 
டென்ஷன் பண்ணுவது,   ஹார்மோன் குறைவதால்  
ஏற்படும் சிக்கல்கள் ,நம்மை "இனி நாம் அவ்வளவுதான்".
என்கிற தன்னிரக்கபடுவது பெரும்பாலோருக்கு ஏற்படும்.!
போஸ்ட் மெனோபாஸ்
முற்றிலுமாக மாதவிலக்கு நின்றபிறகு, ஆறு மாதமோ
ஒரு வருடமோ கழித்து ஏற்பட்டால் ...அவசியம்
 உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்தச் சமயத்தில் கர்ப்ப பை சிலருக்கு இறங்க 
கூடும் .சர்ஜரி செய்து சரி செய்து கொள்ளலாம்.!
 
மெனோபாஸ் நெருங்கும் போது ஏற்படும் 
தோன்றும் அறிகுறி 
அதிக வியர்வை 
படபடப்பு 
மூட் அவுட் 
மெனோபாஸிற்குப் பிறகு பல பெண்களுக்கு 
எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு,
போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ
போரோஸிஸ் என்று பெயர். ஈஸ்ட்ரஜன்
 இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க 
ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு 
வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் 
சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் 
இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட 
வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ் நரம்பு 
சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம்.

 

 

 

 

 

 

 

Phases of Menstrual Cycle


Menstrual phase starts on1st day and ends on 4th day
  • Follicular phase starts on 5th day and ends on 13th day
  • Ovulation phase starts on 12th day and ends on 16th day
  • Luteal phase starts on 15th day and ends on 26th day
  • Ischemic phase starts on 27th day and ends on            28th day
Ovulation demarcates the transition from the follicular phase to the luteal phase. 
The length of each phase varies but the average menstrual cycle is of 28 days. 
Hormonal contraception changes the normal cycles as it leads to hormonal  
changes which finally result in preventing reproduction. Follicles develop in 
the ovary of the females influenced by hormonal levels.

அதனால்  சகோதரிகளே !!தயவு செய்து கவலையை விட்டு 
தைரியமாக எதிர் கொள்ளுங்கள்..இன்றைய மருத்துவ 
உலகில் அனைத்து பிரச்சனைகளுக்கும்  தீர்வு உண்டு ...
உங்கள் கருத்துகளை சொல்லி செல்லுங்கள்..வாழ்த்துக்கள்.

10 கருத்துகள் :

  1. இதை ஆரம்ப கால பெண்களும் தெரிஞ்சி வச்சிருந்தால் தேவையில்லாத மன உலைச்சல் வராது அருமையான பதிவு:-)

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் செயலாணி.
    தங்கள் கருத்துக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு...பகிர்விக்கு நன்றி கீதா...

    பதிலளிநீக்கு
  4. நல்ல உபயோகமான பதிவு நல்ல தெளிவாக எழுதிஉள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  5. Thanks Kurinji!
    Your blog is cute and useful.
    Kolam are beautiful.
    see my gollu at http://mgm2010.blogspot.com/2010/10/blog-post_16.html
    thanks for joining.

    பதிலளிநீக்கு

welcome