இளம் பெண்களே .....கை நிறைய சம்பாதிக்கும் அழகிய
நங்கையரே! ஒரு சேதி சொல்கிறேன் ..கொஞ்சம் கேட்டு
கொண்டு போங்க...நீங்க ரொம்ப பிஸினு எனக்கு தெரியும்.!
இருந்தாலும்..பரவா இல்லை .இதை கொஞ்சம் கேளுங்களேன்
...ப்ளீஸ் ....ஈகோ வேண்டாம். ப்ளீஸ்..!!
எங்க பாமிலி நண்பர் இல்ல கல்யாண வைபோகதுக்கு சென்று இருந்தோம். இரண்டு பெண்கள ஒரு பையன் அவர்களுக்கு.!பையன் கல்யாணத்துக்கு சென்று வந்தோம்.பெண்கள் இருவரும் நல்ல வேலையில் கை நிறைய சமபாதிக்கிறார்கள் ..இருவருக்கும் திருமணம் ஆகி, பெரிய பெண்னுக்கு இரண்டு வயதில்
பையன் ,,சின்ன பெண்னுக்கு குழந்தை இல்லை .இரண்டு பெண்களின் கணவர்மார்கள் திருமணத்துக்கு வரவில்லை. கேட்பவர்களுக்கு எல்லாம் ஒத்தை வரியில் அவர் ரொம்ப பிசி ..அதான் வரலை..என்று கூறினார்கள்.குடும்ப நண்பர் சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல்..!
அவர் மகன் கல்யாண களையே இல்லாமல் வருத்ததுடன் சோகமாக இருந்தார். ஒரே பிரச்சினை என்று மெதுவாக
கூறினார்..ஆயிரம் தான் இருக்கட்டும் சொந்த மச்சினன்
கல்யாணத்துக்கு கூட வராமல் அப்படி என்ன ..பிரச்சினை வேலை ?
ஈகோ பிரச்சனை தான் காரணம்.யார் பெரிய ஆள் என்ற பிரச்சனை தான் ..அதன் விளைவு தினம் சண்டை !!
கணவரை விட்டு அம்மா வீட்டில் செட்டில் ஆகியாச்சு .
குடும்ப நண்பரோ ...உள்நாட்டு பஞ்சாயத்து நடத்தி மகளை கணவரோடு சேர்த்து வைக்க பிரயாசை மேற்கொண்டு தோல்வியை சந்தித்து உள்ளார்.
நானும் சம்பாதிக்கிறேன் இல்லையா ? நான் மட்டும்
ஏன் விட்டு கொடுக்கனும்? என்று இரண்டாவது பெண்ணும் ..
அக்காவை பின்பற்றி அம்மா வீட்டுக்கு ஒரு சில மாதங்களில்
வந்தாச்சு..அதனால் இரண்டு மாப்பிள்ளைகளும் வரலை.
நண்பர் நிலை பாவம்..இல்ல விழாவுக்கு மாப்பிள்ளைகள்
வராததால் .. வருத்ததுடன்..இருந்தார்...
இளம் பெண்களே ..கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்.
நீங்க நல்லா யோசிங்க திருமணத்துக்கு முன்பே..பிறகு முடிவு
எடுங்க.ஈகோ பிரச்சனையால் வாழ்கையை தொலைக்காதீர்கள் !!!
விட்டு கொடுபதால் நீங்க குறைந்து போக மாடீர்கள்..எத்தனை
சிரமம் கொண்டு உங்களை பெற்றவர்கள் திருமணம் செய்து
கொடுகிறார்கள்..நீங்கள் சந்தோசமாக குடும்பம் நடத்தும் பாங்கை
ரசிக்க உங்க பெற்றோருக்கு கொடுப்பினை இல்லாவிட்டால் ......
அவர்கள் யாரிடம் சொல்வார்கள் அவர்கள் துக்கத்தை?
அது போல் இந்த காலத்து மாப்பிளைகளுக்கு ஒரு வேண்டுகோள் .
தயவு செய்து உங் வீட்டு ஈகோ பிரச்சனைகளால் நல்லது கெட்டதை
ஒதுக்கி வைக்காமல் அடுத்தவர்கள் மனம் கஷ்ட்டபடாமல் உங்களால்
முடிந்ததை செய்து ,வெளியே காட்டாமல்,விட்டுகொடுக்காமல்
குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்ளுங்கள்..ப்ளீஸ்....
வெள்ளி, நவம்பர் 26, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
சொல்வது சரி தான், கொஞ்சம் காலம் கழித்தால் அவர்களுக்கே புரியும்.
பதிலளிநீக்குஆமாம் மேடம்.
பதிலளிநீக்குநல்ல கருத்து சகோ..
பதிலளிநீக்கு//விட்டு கொடுபதால் நீங்க குறைந்து போக மாடீர்கள்//
உண்மை தான்.விட்டு கொடுத்து வாழ்ந்தால் வாழ்வில் பிரச்சினைகளே வராது..விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை..
ரொம்ப வருத்தமாருக்கு...
பதிலளிநீக்குவாங்க ஹுஸைனம்மா madam
பதிலளிநீக்குநன்றி
ஹரிஸ் sir நன்றி.
பதிலளிநீக்குwelcome.
இந்த உன்னதமான கருத்தை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு