திங்கள், நவம்பர் 01, 2010

சுகமான நினைவுகள்

find friends


 போன வாரம்  என் இனிய கல்லூரி தோழியை இருபது வருடங்களுக்கு

பின்பு இப்போது  பெங்களூர் சென்ட்ரல் ஷாப்பிங் மால் லில் சந்தித்தேன்!!

எதிராஜ் கல்லூரி மாணவிகள் நாங்கள். ரொம்ப பாப்புலர் நாங்கள் இருவரும் ...

friend-images

 ஸ்டாப் ஸ்டாப் தி பஸ் !!.என்று பஸ்ஸில்  ஒரே சத்தம்!!நேரா போலீஸ் 

 ஸ்டேஷன் ல கொண்டு போங்க..இப்பவே எனக்கு ரெண்டுல ஒன்னு

தெரியனும் ..என்ன நினைச்சு கிட்டு இருக்கானுங்க . இவனுங்க?

டோன்ட் தே ஹாவ்   தி கர்டசி டு ரெஃகுவஸ்ட்  "please pass  the money "

நோ  டிசென்சி  , நோ   பொலைட்நேஸ்  , பிஹேவ்விங் லைக் அனிமல்ஸ்.

என்று காச் மூச் !! னு ஒரே அமளி .திரும்பி பார்தால் என் தோழி தான்

கத்திக்கொண்டு  இருப்பது தெரிந்தது .நான் சமாதானம்  செய்து என் அப்பா

போலீஸ் ஆபிசெர் தான் , வா  ஈவனிங்  போய் கம்ப்ளைன் பண்னலாம்

இப்போ disturb   பன்னாதே  அவசரமா வேலைக்கு போறவங்க அவதிக்கு

உள்ளாவார்கள் என்று   சொல்லி காலே ஜூக்கு அழைத்து சென்றேன்!

விஷயம் இது  தான் . பஸ்சில் முன்னாடி இருந்தவர்கள் பின்னால்

இருக்கும் நடதுநேர் இடம் டிக்கெட் வாங்க சொல்லி பணத்தை அடுத்து

அடுத்து இருபவரிடம் கொடுத்து பாஸ் பன்னுவது வழக்கம் !இவள் இடம்

பணத்தை கையில் திணித்து வாங்க சொன்னதால் தான் இத்தனை கலாட்டா.  

ப்ளீஸ்  பாஸ் என்று சாந்தமாக கேட்காததால் ஒரே கோபம் என் தோழிக்கு .

நாங்கள் மனம் விட்டு பேசும் போது இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தோம் !

மனசு சிட்டாக பறந்தது !!! மிகவும் லேசாக , மகிழச்சியாக  துள்ளல் ஆக இருந்தது .

Rules of friendship


 அடுத்து திருவள்ளுவர் பற்றி எங்கள் மனம் பின் நோக்கி சென்றது .சுவையான

நினைவுகள்.என்றும் மறக்க முடியாத நிகழ்வுகள் அவை.விழுந்து சிரித்தோம்.

எங்க தமிழ் மேம் தூய தமிழ் லில் பேசுவார்.நாங்க அவரை இமிட்டேட் செய்வோம்.

முதல் செமஸ்டர் பேப்பரை எல்லோருக்கும் விநியோகம் செய்தார்.என்னை

அருகில் அழைத்தார்.என் பேப்பரை அனைவர்க்கும் தூக்கி காட்டினார்.நாம

என்ன அவ்வளவு அழகாகவா எழுதி இருக்கோம்னு ?ஒரே பட படப்பு.எனக்கு.

திருவளுவர் பற்றி குறிப்பு வரைக : என்ற கேள்விக்கு நான் திரு வள்ளுவர்

படத்தை வரைந்து இருந்தேன்.(நான் அழகாக வரைவேன்) அப்புறம் என்ன

ஸ்டார்ட் மியூசிக் தான் !!! அந்த கிளாஸ் முழுவதும் அர்ச்சனை தான் போங்க.

அதனால் நாங்க  ரொம்பவே பாப்புலர் .. பிறகு தினம் ஒரு தமிழ் வார்த்தைக்கு

சமர்த்தாக அர்த்தம் கண்டு பிடித்து  தமிழ் எக்ஸாம் ல நான்  தேறிட்டேன் !!


என் தோழிக்கு பெரிய பரந்த மனசு. ஒரு பையனை தத்து எடுத்து வளர்கிறாள்.
என்றும் எப்போதும் என் இனிய தோழியை நினைத்து பெருமை கொள்கிறேன் !

4 கருத்துகள் :

 1. உங்கள் தோழிக்கு பாராட்டுக்கள்.

  உங்கள் தோழி பெயரைச் சொல்லலையே..

  பதிலளிநீக்கு
 2. திருக்குறள் - படம் வரைந்து குறிப்பு வரைகன்னா கேட்டிருந்தாங்க? :-)) அந்த ஃப்ரெண்ட்ஷிப் A-Z நல்லாருக்கு!!

  பதிலளிநீக்கு
 3. தேங்க்ஸ் முத்துலெட்சுமி/muthuletchumi மேடம் .
  என் தோழியின் பெயர் கல்பனா .

  பதிலளிநீக்கு
 4. Thanks ஹுஸைனம்மா Madam!
  ஆமாம் . திருவளுவர் படம்
  வரைந்து இருந்தேன்.
  அப்போது எல்லாம் திருவளுவர்
  என்றாலே அலர்ஜி ஆக இருந்தது !
  அவள் விகடன் "பிளாஷ் பாக்"
  பகுதியில் வெளயீட்டு ,எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் இதற்கு பரிசாக பெற்றேன்."நன்றி அவள் விகடன்"

  பதிலளிநீக்கு

welcome