அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க .
ப்ரீயாக கொடுத்ததை ஏளனம் செய்யாதீர்.
பிடிக்கவில்லையா தூக்கி தூர போடுங்க..
thanks acclaim images.com
அல்லது வேறு யாருக்காவது கொடுங்கள்..
மாட்டுக்கு பல்லு இருக்கான்னு செக் பண்ணுவது
போல நேருக்கு நேர் , முகத்தில் அறைந்தது போல
திருப்பி கொடுத்து அன்பை முறித்து ,கெடுக்காதீர்கள்.
என்னடா பட்டாசு போல் பட பட வென்று வெடிக்கிறேன் !!
என்று பார்க்கிரீர்ர்களா? சமீபத்தில் சந்தித்த ,கேட்ட சம்பவங்கள்
என்னை இப்படி எழுத தூண்டியது.மூன்று விதமான நெருக்கடிகள்.
ஒன்று
வீட்டு கிரக பிரவேசம் வைபோகதில் பெண்களுக்கு தாம்பூலத்து டன்
அனைவர்க்கும் ஒன்று போல சேலை,ரவிக்கை வாங்கி வைத்து
கொடுத்தேன் .மிகவும் நெருங்கிய சொந்தகார பெண் அந்த
விழாவுக்கு வரவில்லை,அவர் கணவரிடம் அவருக்கு என் சார்பாக
கொடுத்து விடும் படி கூறி கொடுத்தேன் ..அவரும் மகிழ்வுடன்
எடுத்து சென்றார்.ஒரே வாரத்தில் அந்த பெண் இங்கு என்னை
பார்க்க வந்து இருந்த போது நான் கொடுத்த சேலையை என்னிடம்
திருப்பி கொடுத்து விட்டு ,தனக்கு அந்த சேலை பிடிக்கவில்லை
என்று நேருக்கு நேரே சொல்லி கொடுத்து சென்று விட்டார்.
பார்பவர்களிடம் எல்லாம் இதை பற்றி சொல்லி என்னை குறை
கூறிக்கொண்டே இருந்தார். மிகவும் டென்ஷன் ஆகி விட்டேன்.!!
இரண்டு
என் தோழி அவர் உறவுக்கார பெண் வீட்டுக்கு தன் கணவருடன்
சென்னை சென்று விடி காலை பொழுதில் வீட்டுக்கு போய்
உள்ளார்.வெறும் கையுடன் எப்படி போவது என்று அருகில்
நின்ற வாழை பழ வண்டி காரரிடம் ஒரு சீப்பு பெரிய மோரிஸ்
பழங்களை குழந்தையை சுமப்பது போன்று எடுத்து சென்று
சொந்தகார பென்னின் குழந்தைகளை அழைத்து தந்து உள்ளார்.
உடனே அந்த நாகரீகம் தெரியாத பெண் ,வேண்டாங்க இந்த
பழம் எல்லாம் தயவு செய்து எடுத்து சென்று விடுங்க ,யாருக்கும்
பிடிக்காது ! தப்பாய் நினைக்காதீர்கள் என்று வேறு கூறி னாராம்.
இதில் வேடிக்கை என்ன வென்றால்... மோரிஸ் பழங்கள்
இவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தான் வாங்கி சென்று
இருக்கிறார் என் தோழி. கடுப்பாகி அவர்கள் வீட்டில் வேலை
செய்யும் பென்னை கூப்பிட்டு கொடுத்து விட்டு வந்தாராம்.
மூன்று
என் அக்கா வீட்டு அருகே ஒரு பாஸ்ட் பூட் கடை உள்ளது .கூட்டு
குடும்பம்மாக ஒன்றாக கடையை கவனித்து வருகிறார்கள்.அந்த
வீட்டு அம்மா தன் மகள் வைற்று பேத்தி பெரிய மனுஷி ஆகி
விட்டாள் ..என்று அக்கம் பக்கதினரை அழைத்தார்.என் அக்காவும்
சென்றார் .வெறும் கையுடன் போகாமல் தன் பேத்திக்கு என்று
சில புது சுடிதார்களை வாங்கியதில் , ஒன்றை எடுத்து சென்று அந்த
பென்னுக்கு பரிசாக கொடுத்து விட்டு வநாராம் !! சில தினங்கள்
கழித்து அந்த வீட்டு அம்மா என் அக்காவை அழைத்து நீங்க உங்க
பேத்தியின் பழைய டிரஸ்சையா தந்தீர்கள்? பழசு போல காட்சி
அளிக்குது !!நல்ல டிரஸ்சாக வாங்கி தந்து இருக்கலாம் ..என்றாராம்.
அது லைட் கலர், அந்த அமாவுக்கு அப்படி தோன்றி இருக்கு...என்ன
செய்வது? எண்டா கொடுத்தோம் ?பணமாக கொடுத்து இருந்தால்
இந்த கடை ஏறி இறங்குவது ஆவது மிச்சம் ஆகும்.என்றார் என் அக்கா.!!
இதலாம் மிஞ்சும் வகையில் எங்கள் வீட்டு வேலை செய்யும் சாந்தி
இங்கோ ..போன வருஷம் மாதிரி லட்டு சிலேபி கொடுத்து இந்த
தீபாவளி யை கெடுத்து விடாதீர்கள்.கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்
பாகு மட்டும் ஒரு கிலோ வாங்கி தநதுருங்க.!!போதும்..நான் அட்ஜஸ்ட்
செய்து கொள்கிறேன். சேலைக்கு பணமா கொடுத்துருங்க ..நான் வாங்கி
கொள்கிறேன்.என்று மிரட்டி விட்டு சென்று இருக்கு, அதாவது சரி
சாப்பிடுவது தானே .. போகட்டும் என்று க்ருஷ்ண ஸ்வீட்ஸ் செல்கிறேன்!!
gift box--click!
gift box--click!
மனசில் உள்ளதை கொட்டீருக்கீங்க,வேலக்காரங்க இப்ப எல்லா வீட்டிலும் இப்படி கேட்டு வாங்கத்தான் செய்றாங்க.பொருளின்,சிரமத்தின் மதிப்பு தெரியாதவங்க இப்படி நடப்பதுண்டு.
பதிலளிநீக்குஆமாங்க ,மனசில் இருப்பதை
பதிலளிநீக்குகொட்டி விட்டேன் !இதலாம் ஒரு பாடம் எனக்கு!!.விக்கிற விலை வாசியில் ,பொருளின் மதிப்பு தெரியாமல் ஓசியில் தானே
என்று படித்தவர்களே இப்படி நடந்து கொள்ளும் போது,படிக்காத வேலை செய்து பிழைக்கும் பெண்கள் கேட்பதில் தவறு ஏதும் இல்லை.
இனி யாருக்கும் எதுவும் தர கூடாது..பணமாகவே தந்து விடுவது நல்லது என்று நானும் என் தோழியும் முடிவு செய்து உள்ளோம்.
padhivu nalla iruku.... i appreciate u. me too also same to u as abt this topic. i like so much this blog............. really nice. congratulation...........
பதிலளிநீக்குEhanks Ravi kumar.
பதிலளிநீக்குU r always welcome.
This is the only way
to share our thoughts
and experience!
nice
பதிலளிநீக்குஇங்கீதம் தெரியாத மனிதர்களும் வாழ்க்கையில் இருக்க தான் செய்கிறார்கள்.... நல்மனம் புரியாதோர் இருந்தும் என்ன ..............
பதிலளிநீக்குநல்லதோர் ஆதங்கம் ....
ஆமாங்க..! இங்கீதம் தெரியாத மனிதர்களும் வாழ்க்கையில் இருக்க தான் செய்கிறார்கள் மாய உலகம் !
பதிலளிநீக்குஎன்ன செய்வது?