இருந்த போது , இந்த முந்திரி கொத்து மிகவும் பிரபலம் !
என் அம்மா இதை மிகவும் சிரத்தையாக செய்வார்கள் .
நீங்களும் செய்து மகிழுங்கள் இந்த தீபாவளிக்கு.!
தேவை
பூரணம் செய்ய
பாசி பயறு 100 கிராம்.
முந்திரி பருப்பு 100 கிராம்.
வெல்லம் 100 கிராம்.
எல்லக்காய் 10
தேங்காய் துருவல் 1 கப்
வெள்ளை எள்ளு 50 கிராம்
மேல் மாவு
பச்சை அரிசி மாவு 1 /4 cup
மைதா 3 /4 cup
மஞ்சள் கலர் 1 ,சிட்டிகை
சோடா உப்பு சிறிது
refined ஆயில் பொரிக்க
செய்முறை
பச்சை அரிசி,மைதா மாவை சலித்து மஞ்சள் கலர்,
சோடா உப்பு சேர்த்து கெட்டியாக (இட்லி மாவு )பதம்
தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
பூரணத்திற்கு பாசி பயறை நன்றாக நெய் அல்லது
எண்ணெய் விட்டு வறுத்து கொளவும், ஆறிய பின்
ரவை போல் பொடித்து கொள்ளவும் எள்ளு ,தேங்காய்
துருவலை தனி தனியாக வதக்கவும்.பிரவுன் கலர் வரும்
வரை தேங்காவை வதக்கவும்.பொடித்த முந்திரி ,நுணுகிய
ஏலம் சேர்த்து நன்றாக அனைத்தையும் கலந்து பொடிக்கவும்.
ஒரு பத்திரத்தில் வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு
கரைத்து பின்பு அதை வடி கட்டி கொள்ளவும். இளம் பாகு
காய்த்து (சிறு கம்பி பதம்) இறக்கி கொள்ளவும், அதிகம்
தண்ணீர் ஆகாமல் பார்த்து கொள்வது நல்லது..
இப்போ பொடித்த அனைத்தையும் கொட்டி
வெல்ல பாகை விட்டு கிளறி, கெட்டியாக பிசைந்து
கொளவும். மாவு கெட்டியாக சிறய சிறிய உருளைகளாக
பிடிக்கும் பதம் இருக்கவேண்டு (தேவைப்பட்டால் முதலில்
தனியாக எடுத்து வைய்த்த மாவை சேர்த்து கொள்ளவும்).
பிசைந்த மாவை சிறு சிறு உருளைகளாக பிடிக்கவும்.
மூன்று மூன்று உருண்டய்களாக சேர்த்து தயாராக
வைத்துள்ள மைதா ,அரிசி மாவு கலந்த மாவில் முக்கி
கொதிக்கும் எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்..
.
நிறைய நாட்கள் வைத்து சாப்பிடலாம்.சீக்கிரம் கெடாது!!

வித்யாசமான ஆப்பில் ஜிலேபி ரெசிப்பி தேடும் போது
கிடைத்தது.நீங்களும் பாருங்க..,நானும் ட்ரை பண்றேன்.
பலகாரம் எல்லாம் செய்யணும் ..தீபாவளி கழிச்சு உங்களை
சந்திக்கிறேன்.எல்லாருக்கும் நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துகள் !
இந்த நேரத்தில் என்னை உற்சாக படுத்தி ஓட்டு போட்டு உயர்த்திய
அன்பு உள்ளங்களுக்கு என் நன்றியை தெரிவித்து வணங்குகிறேன் ..
thanks Manjula madam
முந்திரிக் கொத்து எங்க மாமியாரும் செய்வாங்க. ரொம்ப டேஸ்டாருக்கும். பாசிப்பயறுக்குப் பதில் பாசிப்பருப்பு போடுவாங்க.
பதிலளிநீக்குவாங்க மேடம்,
பதிலளிநீக்குசுவையாக இருக்கும் !
எங்க வீட்டு தீபாவளி
ஒவொரு வருசமும்
முந்திரி கொத்து
இடம் பெரும்.
வாவ்... சூப்பர்.. எங்கள் வீட்டிலும் செய்வோம்..
பதிலளிநீக்குஇந்த தீபாவளிக்கு நானும் செஞ்சேன் :-)))
தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!! :-)
வாவ்... சூப்பர்.. எங்கள் வீட்டிலும் செய்வோம்..
பதிலளிநீக்குஇந்த தீபாவளிக்கு நானும் செஞ்சேன் :-)))
தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!! :-)
வாங்க ஆனந்தி ..
பதிலளிநீக்குநன்றி ..மீண்டும் வருக.
வாழ்த்துகள் !
Hi Geetha,
பதிலளிநீக்குMunthri kothu ennakku mihavum pikikkkum...Diwali vaalthugal..:)
Dr.Sameena@
http://www.myeasytocookrecipes.blogspot.com
thanks madam,.
பதிலளிநீக்குThanks for such a wonderful blog.
பதிலளிநீக்குஇந்த முந்திரிகொத்து வடசேரியில் உள்ள என் நெருங்கிய நண்பனின் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்.அவ்வளவு சுவையாக இருந்தது.
இந்த ரெஸிப்பி பார்க்கும்போது உடனே செய்துபார்க்க ஆவலாக இருக்கிறது.படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது மிகவும் சுவையாக இருக்குமென்று.
//தேங்காய்துருவல் 1கப் என்று கொடுத்துள்ளீர்கள்.1 கப் என்பது எவ்வளவு மில்லி(ml).//
உங்கள் பதிலை மிகமிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.நன்றி.
welcome niren.
பதிலளிநீக்கு//தேங்காய்துருவல் 1கப் என்று கொடுத்துள்ளீர்கள்.1 கப் என்பது எவ்வளவு மில்லி(ml).//
ஒரு கப் என்பது 100 gm முதல் 150 gm ஆகும் .
நீங்கள் எடுக்கும் கப் சைஸ் பொருத்தது !
அளவான சிறிய கப் உபயோகிங்கள் .
நன்றி.sorry for the late reply !!!
உங்கள் குறிப்பின்படி முந்திரிகொத்து செய்தோம்.மிகவும் சுவையாக இருந்தது.சுவையான குறிப்பை வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குடேஸ்ட் ரொம்ப நல்லாயிருந்தது.கலர் எங்களுக்கு படத்தில் இருப்பது போல் வரவில்லை.ஏன்?
வாங்க niren ,
பதிலளிநீக்குகலர் படத்தில் உள்ளது போல் வேண்டும் என்றால் ., பூட் கலர் yellow use பண்லாம்.
எங்க அம்மா சிறிது மஞ்சள் தூள் கலருக்காக சேர்ப்பார்கள்.அதிகம் சேர்த்தால், கலர் கிடைக்கும் ஆனால் ... உடம்புக்கு நல்லது இல்லை.
மிக்க நன்றி !