வியாழன், அக்டோபர் 28, 2010

தீபாவளி வரிசை


  






தேங்க்ஸ் டு பத்மா கிட்சேன் (படம்)


தீபாவளி வந்து கொண்டே இருக்கு..

பொறந்த வூடு சீர் ..அதாங்க !! தீபாவளி வரிசை வச்சுடீங்களா? 

ஆமாங்க புரியலையா ? தஞ்சாவூர் பக்கம் இந்த பழக்கம் உண்டு!!

 தீபாவளி,பொங்கல் போன்ற விசேச தினங்கள் வருவதற்கு முன்பு

பெண்களுக்கு  பிறந்த வீட்டில் இருந்து அவரவர் சக்திக்கு ஏற்ப தங்கள்

வீட்டு பெண்களை நினைத்து ,சீரும் சிறப்பும் ஆக புகுந்த வீட்டில்

 வாழ  தங்கள் மகள் அல்லது  தங்கள் சகோதரிகள் சந்தோசத்துக்கு

 என்றும் அவர்களை நினைத்து தந்தை அல்லது சகோதரர் கடைசி

வரை பிறந்த வீட்டு சீராக தீபாவளி, பொங்கல் வரிசை என்று  ஒரு வாரம்

 முன்பே அவர்கள் வீட்டுக்கு சென்று அவர்களை பெருமை படுத்துவது

 தான் இந்த விழா வைபோகம்...தொலைவில் இருபவர்களுக்கு ,பணம்

மனி ஆர்டர்   செய்வது இபோது நடை பெற்று வரு கிறது..மூன்று முதல்

 எத்தனை தாம்பாளங்கள் வேணுமானாலும் நம் வசதிக்கு ஏற்ப வரிசை

 வைக்கலாம் நம் குடும்ப பெண்களுக்கு !! பொறந்த வீட்டு சார்பாக.!!!

இந்த வழக்கம் இப்போது அனைத்து வூர்களிலும் பின்பற்றபடுகிறது.


 என்ன எங்கே கிளம்பிடீங்க? ..  பொறந்த வீட்டு சீர் அதான் தீபாவளி

வரிசை வைக்கவா?!!..போங்க  போங்க உங்க வீட்டு பெண்கள் 

உங்க வருகையை எதிர்பார்த்து காத்து இருக்காங்க!!!சீக்கிரம் ப்ளீஸ்..


தஞ்சாவூர் சைடு இன்னும் ஒரு விசேசம் உண்டு !!

அதாவது  முதல் முறையாக கல்யாணம் ஆகி பெண்

வீட்டுக்கு வரும் மாப்பிள்ளை மற்றும் அவரை சேர்ந்த 

சொந்த பந்தங்களுக்கு கொடுக்கும் விருந்து சாப்பாட்டில்

இலைக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப பணம் நகை வைப்பது

வழக்கம் !!அதுவும் மாப்பிளைக்கு ஸ்பேஷசல் கவனிப்பாக 

தங்கம் ,வெள்ளி அல்லது ரொக்கம் 5 முதல் 10 ஆயிரங்கள்

வரை இலையில் வைப்பது கௌரவம் ..என்று கூறுகிறார்கள்.

என் தோழி வீட்டு கல்யாண வைபோகத்தில் இதை தெரிந்து

கொண்டேன்.அவர் வீட்டு விருந்தில் இந்த பழக்க வழக்கம்

தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தவரை

அவர் வீட்டு மாப்ளை இது பற்றி எடுத்து சொல்லி தன்னிடம்

உள்ள பணம் நகைகளை கொடுத்து இலையில் வைக்க சொல்லி  

பிரச்னையை சுமுகமாக கையாண்டுள்ளார்...சபாஷ் மாப்பிளை..

அது வரை விருந்தில் யாரும் கை நனைக்க முன் வர வில்லை...

உறவுகள் தொடர.. இது போல் வழகங்ககளை ஈஸி யாக  கை

ஆள தெரிந்து இருப்பது மிக அவசியம் ஆகும். பிரச்சனைகளை

ஊதி பெரிது படுத்தாமல் , ஒருவராவது விட்டு கொடுத்து அரவணைத்து

சென்றால் மட்டும் ... வாழ்கை சக்கரம் ஸ்மூத் ஆக சுழலும் ..இனிக்கும்.!!

4 கருத்துகள் :

  1. ஊருக்கு ஊர் பழக்கவழக்கம் மாறுபட்டு இருக்கும் போல,பகிர்வுக்கு மகிழ்ச்சி.முன்பு எல்லாம் வந்த சமயம் உங்கள் ப்ளாக்கில் கருத்து தெரிவிக்க முடியவில்லை.இப்ப சரியாகிவிட்டது போல.

    பதிலளிநீக்கு
  2. வாங்க மேடம் !
    ஆமாம் ,இப சரியாய்
    உள்ளது .அடிகடி வந்து
    தங்கள் பொன்னான
    கருத்துகளை கூறுங்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்வு கீதா . தீபாவளி வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு

welcome