திங்கள், அக்டோபர் 25, 2010

பரபரப்பு
அவசரம் !! ஓடு..ஓடு ..ஓடி கொண்டே இரு !!

எப்ப நிற்கும் இந்த பரபரப்பு ? இந்த ஓட்டம்?

அப்பாடா என்று நம் வாழ்கையில் எப்போ வரும்?

இது சாத்தியமா? வாழ்கை சக்கரம் சுழன்று கொண்டு

இருக்கு !! நாமும் ஒட்டமும் நடையுமாக சுழற்சிக்கு

ஏற்ப சுழன்று கொண்டு இருக்கிறோம்.!!எப்ப ரெஸ்ட் ?

என்று மனம் ஏங்கும்.கூடுதலாக வேலை பார்க்கும்

பெண்களுக்கு வீட்டையும், அலுவலகதையும் இரண்டு

கண்களாக பாது காக்க வேண்டிய சூழ்நிலை !!எப்படி

சமாளிப்பது? எப்படி எதிர் கொள்வது ? ஒரே பரபரப்பு ...

அதுவும் காலை நேர பரபரப்பு இருக்குது பாருங்க ...

அட அப்பா ...ஓவ்வரு வீட்டிலும் ஓவ்வரு பரபரப்பு.

என் கூட வேலை பார்க்கும் ஜெயா..நீ எப்படி சனிகிழமை

கூட இவ்வளவு பிரெஷ் ஆக வந்து இருக்கிறாய்?என்று

கேட்பாள் ..போன வாரம் வீட்டில் காஸ் அடுப்பை மூடினேனா ?

என்று பரபரப்பாக இரண்டு மணி நேரம் பெர்மிசஷன் போட்டு

விட்டு ,வீட்டுக்கு போய் செக் செய்து பின்பு ஆபிஸ் வந்தார்.!!

அழகு நம் கையில் என்ற விவெல் சோப்பு விளம்பரம் போல 


பரபரப்பு நம் கையில் தான் உள்ளது!!சரியாக திட்டம் இட்டால்,


வெற்றி நமக்கு தான்!! என்ற தாரக மந்திரம்.தான் இதுக்கு வழி!

சமீபத்தில் பெங்களூர் செல்ல ட்ரைன் ஏறினேன் .ட்ரைன் கிளம்ப

ஆய்தம் ஆனவுடன் ஸ்லொவ் மோஷன் ல் ஒரு தம்பதி ஓடி வந்து

ஏறினேர்..மூச்சு இரைக்க நின்றனர் ..டி டி ஆர் டிக்கெட் கேட்க இருவரும்

ஒருவருக்கொருவர் டிக்கெட் எடுத்து வரலையா என்று கேட்டு கொண்டு

கடைசியில் சண்டை இட ஆரம்பித்து ,டி டி ஆர் ஒரு வழியாக இருவரயும்

வண்டியை விட்டு இறங்க சொல்லி ..அபராதம் கட்ட சொல்லி விட்டார்.

 ஸ்கூல்/காலெஜ் ல் ..டே ப்ளநேர் ,இயர் ப்ளநேர் என்று திட்டம் இடுவோம் .

அது போல் நாமும் அன்றாடம் என்ன செய்ய போகிறோம் என்று சிறு

குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும.முக்கியமாக நாம் செய்ய வேண்டிய

வேலைகளை ரெமெயின்டேர் அல்லது சிறு டைரி யில் இன்று என்ன

எல்லாம் செய வேண்டும் என்பதை முன் கூட்டீயே பிளான் பன்ண

வேண்டியது அவசியம்.டைம் மேனஜ்மென்ட் மிகவும் முக்கியம்.

குறிபிட்ட நேரத்தில் வேலைகளை முடிக்க தெரிந்து இருக்கனும்.  

நேரம் வீனாகுவதை உணர வேண்டும்.முடிக்க முடியா விட்டால்..

அதை பெண்டிங்கில் வைத்து விட்டு அடுத்து திட்டம் இட்ட

 வேலைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.எறும்பு எப்படி 


மழை  காலத்துக்கு உணவை பத்திர படுத்து கிறதோ ,அது போல்

நாமும் அன்றாட வேலைகளை உடனுக்கு உடன் திட்டம் இட்டு

முடித்து ரிலாக்ஸ்  ஆக பரபரப்பு இல்லாமல் நிம்மதி யாக மூச்சு

விடலாம். நேரத்திற்கு நம் வேலைகளை கை ஆளலாம் சந்தோசமாக !

பரபரப்புக்கு காரணம் :

எடுத்த பொருளை எடுத்த இடத்தில வைக்காமல் தேடுவதில்...

வேலைகளை தள்ளிபோடுவது..

சோம்பேறி தனமாக பொறுப்பு இல்லாமல் இருப்பது..

மனம் போன போக்கில் இருப்பது.!

திட்டம் இடாமல் விட்டேதேரியாக இருபது.

மொபைல், மற்றும் டிவி ,கம்யு ட்டரில் நேரத்தை கொல்வது..

கடை சி நிமிஷம் வரை எதயும் கண்டு கொள்ளாமல் இருப்பது.

எல்லாம் எடுத்து கொண்டோமா என்று சரி பார்க்காமல் உள்ளது.

கனவில் எப்போதும் வாழ்வது.

ஊர் வம்பு நியாயம் பேசி நேரத்தை வீண் அடிப்பது ..

இதை வெல்வது எப்படி ?

இரவு படுக்க போகும் முன்பு இன்று என்ன செய்தேன்?
பெண்டிங் வேலைகள் என்னவெல்லாம் உள்ளது?
என்று படுத்தவுடன் பத்து நிமிடம் இன்று நடந்தவைகளை
ஒரு கன்நோட்டமாக  மனதில் அசை போடுங்கள்.

காலை கண் விழித்தவுடன் நேற்று பெண்டிங் வேலைகள்
மற்றும் இன்று எனவெல்லாம் செய்ய வேண்டும் ?
எதை சீக்கிரம் முன்னதாக முடிக்க வேண்டும்.
என்று மனதில் பட்டியல் போட்டு கொள்ள வேண்டும்.

மனிதனுக்கு குறைந்தது 6 -7 , மணி நேரம் உறக்கம் வேண்டும்.
அபோது தான் இவை எல்லாம் வொர்க் அவுட் ஆகும்.
இல்லாவிட்டால் எல்லாம் பரபரப்பில் தான் கழிய வேண்டும்!!செய்தால் மனமும் உடலும் உற்சாகமாக இருக்கும்.!
பிறகு என்ன பரபரப்புக்கு ஒரு குட் பய் தான்,.

6 கருத்துகள் :

 1. இயந்திரம்போல் ஓடிக்கொண்டிருக்கிறோம்! ஒரே பரபரப்புதான்! பல உடல் நோய்கள் சீக்கிரத்திலேயே வர இதுவும் காரணம்!

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு! எறும்பை உதாரணம் காட்டி எழுதியிருப்பதும் அழகு!

  சமையல், வேலைகள், ஏன் தூங்குவதற்குக் கூட ஒரு சில மணி நேரங்கள் என்று எல்லாவற்றிற்கும் டைம் மானேஜ்மெண்ட் என்று பழகி வரும்போதே மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவை சில சமயம் கெட்டு டென்ஷன் வருகிறது! கொஞ்சம்கூட எதிலுமே திட்டமிடாது இருப்பவர்களின் நிலை என்ன என்று அப்போதெல்லாம் எண்ணிக்கொள்வேன்!

  பதிலளிநீக்கு
 3. அடகீதா உங்களை இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டேன். ரொம்ப வித்தியாசமா இருக்குங்க உங்க பிளாக்...... வாழ்த்துக்கள். நிறைய தகவல்கள் கொடுக்கிறீர்கள்..நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நன்றி மேடம்!!
  அடிக்கடி வாங்க..
  உங்க ப்ளாக் கவிதை
  சூப்பர்!!

  பதிலளிநீக்கு

welcome