சனி, அக்டோபர் 09, 2010

வாங்க எங்க வீட்டுக்கு.. கொலு பார்க்க..!!!

அப்பாடா நானும் கொலு வச்சிட்டேன் ..

  என்றன்  வீட்டுகாரர் ஆசை ஆசையாய் பிஜியில்
இருந்து எங்களை பாக்க ஓடோடி வந்துள்ளார்..
இந்த நேரம் பார்த்து நவராத்திரி கொலு வந்திருக்கு.
நான் வேறு சகோதரர்கள் எல்லாம் உங்க வீட்டு
கொலுவில்   உங்க அம்மநிகளுக்கு கூட மாட
உதவி செயுங்கனு என் முந்தய பதிவில்  எழுதி
விட்டேன்..அதை பார்த்து விட்டு, என் கணவர்
வரிந்து கட்டி கொண்டு கொலு படிகளை
இறக்கி தூசி தட்டி   ஆங்கில், screw , nut , போல்ட்
என்று வீடு முழுவதும் போர் களம் ஆனது..

 இரண்டு வருடங்களாக சிம்பிளாக பூஜை அறையில்
கொஞ்சம் பொம்மைகள் மட்டுமே வைத்து கும்பிட்டோம்.
இந்த வருடம் எங்க ஊட்டுகாரர் வரார்ன வுடன் ஒரே
உற்சாகம் !!படி கட்ட ஆரபித்த வுடன் தான் தெரிந்தது ,
ஆங்கில், screw , nut , போல்ட் எல்லாம் துரு ஏறி  பல்லை
காட்டியது , அந்த படியை  இப்படி பிடி, தூக்கு மேலே..நல்லா
டைட் பண்ணு என்று ஏகப்பட்ட உத்திரவு.!!இரவு இரண்டு மணி
ஆனது தான் மிச்சம்.கொலு படி ரெடி ஆன   மாதிரி சுவடே இல்லை .

என்னுடைய கொலு படி டூ இன் ஒன்.மற்ற நேரம் அதை ராக் ஆக
யூஸ் பண்னலாம். .அதில் இருந்த சாமான்கள் எல்லாம் கீழே
இறக்கி வைத்து ரூம் முழுவதும் பரப்பி கிடந்தது. என் மகள்
இதலாம் ஒத்து வராது நமக்கு, பேசாமல் போன வருடம் போல்
சாமி ரூம்ல சின்னதா வை அம்மா..என்று தூங்க சென்று விட்டாள்.

என் கணவர் நோ நோ !! மேல இருந்து படிகள் எல்லாம் எடுத்தாச்சு ..
முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று பிடிவாதமாக
இருந்து முழு மூச்சாக பல மணி நேரம் போராட்டம்களுக்கு
பின்பு , ஒரு வழியாக விடிய விடிய கொலு படி தயார் செய்து  தந்தார்.

பிலாக் காபி போடு, விசிறி விடு என்று  ஒரே அமர்க்களம் ..!!
சும்மா     பெண்டு  கலண்டு விட்டது.. இருவருக்கும்..ஆனாலும்
பொம்மைகள் அடுகியவுடென், களைப்பு எல்லாம் பறந்து விட்டது.
என் மகள்.. அப்பா படி கட்டி விட்டார்களா? என்றாள் ஆச்சரியத்துடன்.  

இத்லிருந்து நான் கற்று கொண்ட பாடம் ..விடா முயற்சி.
அடுத்தது படிகளை பிரித்து அடுக்கும் போது லெப்ட் ஆங்கில்.
ரைட் அன்கிள் மார்க் செய்து தனி தனி யாக கட்டி வைக்கணும்.
பேஸ் ஆரம்பிக்கும் போது கீழே இருந்து ஆரம்பித்து ஒன்றுடன்
ஒன்று சேர்த்து கோர்க்க வேண்டும் !! அப்போது தான் screw ,
டைட் ஆக உட்காரும். ஆடாமல இருக்கும்.டைம் மிச்சம் ஆகும்!!

பொம்மைகளும் பாக் பண்ணி வைக்கும் போது அதன் மீது
பெயர்கள் எழதி வைத்தால் .. எடுப்பது சுலபம். களைப்பு
இல்லாமல் ..உற்சாகமாக வேலையை ஆரம்பிக்கலாம்.

அப்பாடா..அடடா .. கொலு வைத்தாச்சு ..அப்புறம் என்ன ?
வாங்க எங்க வீட்டுக்கு.. கொலு பார்க்க..!!!

 

15 கருத்துகள் :

 1. வாங்க வாங்க..பாட்டு பாட ரெடியா?
  அப்போ தான் சுண்டல் ..சரியா?
  வீட்டிலே பெண்களை எல்லாம்
  அழைத்து கொண்டு வாங்க!!

  பதிலளிநீக்கு
 2. எனக்கு சர்க்கரை பொங்கலும் ,கடலை சுண்டளும்தான் வேணும். ஆமாம் !

  பதிலளிநீக்கு
 3. இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

  ஃபிஜின்னா சொன்னீங்க? அங்கே எங்கே?

  பதிலளிநீக்கு
 5. வாங்க மேடம் !!Newzeland , அருகே தான் பிஜி ..அருமையான தீவு.நாங்க இருந்தது லட்டுககா தீவு.
  உங்க வீட்டு கொலு அற்புதமாக இருந்தது!!

  பதிலளிநீக்கு
 6. வாங்க மாணிக்கம் சார்,
  எல்லாம் ரெடி!!சக்கரை
  பொங்கல் சூடாக இருக்கும்
  போது சாப்பிட வாங்க ..

  பதிலளிநீக்கு
 7. எஸ்.கே வாங்க,
  நன்றி மீண்டும் வருக .

  பதிலளிநீக்கு
 8. கீதா,

  நாங்க நியூஸி வருமுன் 6 வருசங்கள் ஃபிஜியில் இருந்தோம்.

  அது என்ன லட்டூகா தீவு?

  Lautoka Town ?

  இல்லே அப்படி ஒரு தீவு இருக்கா?

  பதிலளிநீக்கு
 9. ஆமாங்க லட்டுகா தான்.
  FSC , பிஜி சுகர் கார்ப்(சக்கரை மில்)
  அங்கு தான் இருந்தோம்.
  லம்பாசா,ராக்கி ராக்கி போன்ற
  தீவுகளுக்கு சென்று வந்தோம்.
  ஏற் போர்ட் இங்கு தான் உள்ளது !
  நீங்க எந்த இடம் பிஜி யில் ?

  பதிலளிநீக்கு
 10. நாங்க BA Town.

  ராக்கி ராக்கி கிங்ஸ் ரோடில் வரும் சிற்றூர். அது தீவு இல்லை. லம்பாசா தான் வனுவாலெவு என்ற தீவில் இருக்கும் ஊர்.

  விடிலெவு தீவில் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் இருக்குமிடம் Nadi. உச்சரிப்பு நாண்டி என்று வரும்.

  எந்த வருசம் வந்தீங்க?

  நாங்க 1982 முதல் 1988 வரை.

  அப்போ FSC யில் டைரெக்டர் கிருஷ்ணமூர்த்தி நம்ம அத்திம்பேர்தான்.

  பதிலளிநீக்கு
 11. ஆமாம் மேடம் நீங்க சொல்வது கரெக்ட்.
  நாண்டி ஏர்போர்ட் மற்றும் முருகன் கோவில்
  சென்று வந்தேன்,அழகான அமைதியான கோவில்.
  BA டவுனில் உள்ள ஸ்டேடியம் ல் ஸ்போர்ட்ஸ் டே
  விழாவுக்கு FSC , லட்டுகா (LAUTOKA)சார்பில் வந்தோம் .
  இப்போ 2009 ,ஏப்ரல் லில் வந்தேன். என் கணவர்
  கடந்த இரண்டு வருடங்களாக அங்கு உள்ளார்.

  பதிலளிநீக்கு
 12. ரொம்ப மகிழ்ச்சி கீதா.

  நியூஸிலாந்துக்கு வந்தால் அப்படியே நம்மையும் கண்டுக்குங்க. கிறைஸ்ட்சர்ச் நகரில் வாசம். தற்போது இந்தியாவில் இருக்கேன். ஜனவரி இறுதியில் மீண்டும் நியூஸி.

  இனிய விழாக்கால வாழ்த்து(க்)கள்.

  பதிலளிநீக்கு
 13. நன்றி மேடம் !! கட்டாயம் வருகிறேன்!
  கொலு மூலமாக உங்கள் நட்பு கிடைத்தது.
  மிக்க மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி.
  இந்தியாவில் எங்கு இருக்கீரீர்கள்?
  விரைவில் சந்திப்போம்.!!

  பதிலளிநீக்கு
 14. இந்தச் சண்டி வேறெ எங்கே இருப்பேன்?

  சண்டிகர் என்ற ஊரில் இருக்கேன்.

  பதிலளிநீக்கு

welcome