செவ்வாய், அக்டோபர் 12, 2010
பொம்மை
என் வீட்டு கொலுவுக்கு வந்தவர்கள் எல்லாம் நீங்க பொம்மை
எங்கு வாங்குவீர்கள் என்று கேட்கிரர்ர்கள்!! காரணம் அனைத்தும்
பழய பொம்மைகள்..லட்சணமாக அழகாக காட்சி தருகிறது.!!
இருபது வருடங்களுக்கு முன்பு கபாலீஸ்வரர் கோயில் வாசலில்
வாங்கியது.!! உயரமான பொம்மைகள்.,தத்ருபமாக தோன்றுகிறது.
வன்னங்கள் கூட மாறவில்லை!! அன்று வாங்கியது போல் இரூக்கு.
சரஸ்வதி,ஆயூத பூஜை ,வைஜய்தசமி அன்று பொம்மைகள்
குறைந்த விலையில் வாங்கி அடுத்த வரும் கொலுவுக்கு
ரெடி பண்னலாம். பொம்மைகளை பராமரிப்பது ஒரு வித கலை.
கொலு முடிந்ததும் பொம்மைகளை ஓவ்வன்றும் எடுத்து பழய
காட்டன் துணியில் சுற்றி ஒன்றோடு ஒன்று உரசாமல் கவனமாக
கள்ளி பெட்டிகளில் அடுக்கவேணும. துணி சுற்றிய பொம்மை மீது
நியூஸ் பேப்பர் போட்டும் கவர் செய்தும் வைக்கலாம்.!! புது பொம்மை
போல் காட்சி அளிக்கும்.மூக்கு ,கை,இவைகள் உடையாத வன்னம்
பார்த்து கொள்ள வேண்டும்.கவனமாக கை ஆளுவது அவசியம்.!
இந்த வருட கொலு கலாட்டா
பொம்மைகளை இறக்கிய வேகத்துடன் கொஞ்சம் ரிலாக்ஸ்
பண்ணி கொண்டு மலையம்மா இந்த பொம்மைகளை கொஞ்சம்
துடைத்து ஓரமாக வையுங்கள் ..இதா வந்து விடுகிறேன் என்றேன்.
என்திரன் பாணியில், மலையம்மா பொம்மைகளைஎடுத்து வாளியில்
அடுக்கி குழாய் அடியில் கழுவ எடுத்து சென்றதை என் கணவர் பார்த்து
விட்டார்..ஒரு நிமிடம் தாமதித்து இருந்தால் அவ்ளோதான் !!பொம்மை
எல்லாம் சில் நொடிகளில் கரைந்து இருக்கும்.கொலு அம்பேல் தான்..
நல்வேளை உடனே பின் தொடர்ந்து சென்று மலையம்மா கையில்
இருந்து வாளியை பிடுங்காத குறையாக பறித்து கொண்டு வந்தத பிறகு
தான் எனக்கு உயிரே வந்தது.பாவம் மலயம்மமாக்கு, சிட்டி ரோபோ போல்
தெளிவாக சொல்லி இருக்கனும் என்று நாங்கள் உனர்ந்தோம் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
thank you very much for preserving
பதிலளிநீக்குdolls.
thirunavukkarasu sir..
பதிலளிநீக்குU R welcome!!