வெள்ளி, அக்டோபர் 08, 2010

நிஷா









 நான் பிஜி சென்ற சமயம் நிஷா வை  சந்தித்தேன்!
என் கணவர் நிஷா meet my wife , கீதா என்றார்.
ஓடி வந்து கட்டி தழுவி முத்த மழைகளால் ஆசையாக
என்னை வரவேற்றார். திஸ் இஸ் நிஷா my ஹவுஸ் கேர்ள்
.( Cook Maid )என்று நிசாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் I am an ' இந்தியன் from சவுத்  '  என்று மிகவும் பெருமையுடன் சொன்னார் .
நானும் மிக்க மகிழ்ச்சியுடன் பாசத்துடன்  ஆர்வமாக நமது மொழியில் பேச ஆரம்பித்தேன் ...,   பிறகு தான் தெரிந்தது ... அவர்கள்ளுக்கு தென் இந்தியா மொழிகள் எதுவம் தெரியாது என்று...! என் கணவர் பின்பு  தெளிவு படுத்தினர் . அவர்கள் அனைவரும் 'இந்தோ பிஜியன் ' , ஆனால் இந்தியாவை நேரில் பார்த்தது இல்லை என்று. இது மிகவும் வியக்க தக்க விஷயம் ... அது  பற்றி நான் இன்னொரு நாள் பார்க்கலாம் .



இரண்டு நாள் அவர் சமைத்த உணவை சாபிட்டு விட்டு
நாக்கு செத்து விட்டது. எப்படிதான் இவர் சமாளிக்ரர்..பாவம், சரி ..  , நம் கைங்கிரியத்தை காட்ட வரிந்து கட்டி கொண்டு சமயல் அறைக்கு சென்று அரிசி பருப்புதேட ..ஒட்ஸ்,ப்ரெட் wheat பிக்ஸ், க்ரம்ப்ஸ் &
மற்றும் காய்ந்தரொட்டி மட்டுமே இருந்தது.அன்று மாலை என்
கணவரை அழைத்து கொண்டு சூப்பர் மார்க்கெட் சென்று அரிசி பருப்பு
என்று நம் இந்திய உணவுக்கு தேவையான இட்லி அரிசி முதல்
அனைத்து item கிடைத்த திருப்தியில் முழு மூச்சாக சமையல்
ஹோதா வில் இறங்கி இட்லி சாம்பார், தயிர் வடை பிசி பேலா
என்று தினம் ஒன்று செய்து நிஷாவை அசத்தி விட்டேன்.என்
கணவரும் நீ போவதற்குள் நிஷாவுக்கு நம் சமையல் எல்லாம்
சொல்லி கொடுத்து  பழக்கி விடு, என்று கூறினார். 

யோகர்ட்  (தயிர்) அங்கு மிகவும் காஸ்ட்லி ..தயிர் பிறை ஊற்றி
வைத்தேன்.நிஷாவுக்கு ஒரே சந்தோசம். அடுத்த நாள் நான் தயிர்
தயாரிக்கிறேன் என்று கூற , பாலை தயிரில் ஊற்றவா? தயிரை
பாலில் ஊற்றவா? என்று நான் ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ் ல் purchase
செய்து கொண்டிருக்கும் போது நிஷாவிடம் இருந்து போன்...
பாலில் தயிரை ஊற்று என்று சொலி விட்டு மாலை சாப்பிடும்
போது வீட்டில் தயிரை தேட  ஒரு டம்லர் தயிரை பாலில் கொட்டி
பொங்க வைத்து விட்டது அப்போது தான் தெரிந்தது.....

அடுத்து இட்லிக்கு ஆப்பத்துக்கு மாவு ரெடி செய்ய சொல்லி விட்டு
கண் அயர்ந்தேன் !!   எழுந்து பார்தால் !!! இட்லி மாவு கரேல் என்று
கருப்பாக இருந்தது. உளுந்து தோலை கலைந்து எடுக்காமல்
அப்படியே போட்டு ஆட்டி உள்ளது  தெரிந்தது ..அப்புறம் என்ன
மறு நாள் கருப்பு இட்லி தான் போங்க....இருவரும் விழுந்து
விழுந்து சிரித்து வயிறு வலி வந்தது தான் மிச்சம்.

என்னுடைய புண்ணியத்தில் மீதி நாட்கள் அனைத்தும் நிஷா
கால் மேல் கால் போட்டு கொண்டு சப்பு கொட்டி கொண்டு 
அதை செய் உன் கணவருக்கு இதை செய் என்று அன்பு கட்டளை
வேறு... என் கணவருக்கு பிடித்ததை சமைபதை  விட நிஷாவுக்கு
சமைத்தது  தான் அதிகம்..அது வேறு விசயம். 

நம்ம ஊரில் வேலை செய்யும் பெண்களிடம் வேலை வாங்குவதே
மலையை பிளப்பது போன்ற விசயம் ..வெளி நாடுகளில் வீட்டு வேலை
செய்யும் பெண்கள் நம் நாட்டு பெண்மணிகளை மிஞ்சி விடுகிறார்கள் !!
டிமிக்கி விட்டு விட்டு நம்மை வேலை செய்ய வைத்து வேடிக்கை பார்ப்பதில்
விவேகமாக இருக்கிறார்கள் !!

இன்னும் எமிலி, எக்னேஸ் எல்லாம் பற்றி அடுத்த பதிவில் பகிர்கிறேன்!

4 கருத்துகள் :

  1. எங்க போனாலும் சமையல் தானா உங்களுக்கு ? நல்ல பதிவு . வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆமாங்க சமயலில் இருந்து எஸ்கேப் ஆகி
    ஜம்முனு உக்காந்து சாப்பிடலமுனு தான்
    அங்கே போனேன் !!! நம்ம ராசி இப்படி!!
    அப்புறம் என்ன பண்றது!!..அதான்,..

    பதிலளிநீக்கு
  3. பயங்கர அனுபவமா இருக்கே....

    உங்கள பாத்தா நிஷாக்க்கு எப்படி தெரிஞ்சுதோ..... ஹா..ஹா...ஹா...

    பதிலளிநீக்கு
  4. அதை ஏன் கேக்குறீங்க ? நம்ம நெத்தியில் தான் அழகா ஒட்டி இருக்கே ..பிறகு என்ன ... !

    பதிலளிநீக்கு

welcome