வந்துவிட்டது நவராத்திரி...ஏறுங்க பரண் மேல ,
பொம்மையை இறக்கி தூசி ,தட்டுங்க..சகோதரர்கள்
எல்லாம் ப்ளீஸ் கூட மாட ஹெல்ப் பண்ணுங்க !!!
புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல்
நவமி வரை ஒன்பது நாளும் அனுஷ்டிக்கப்படும்.
நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு
நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது
மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில்
நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை
ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி
என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து
வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல
நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய
முக்தியையும் நல்குவாள் என்று சொல்லப்படுகின்றது!
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின்
தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில்
இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின்
தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில்
இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன
போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான
இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன்
அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் .
விரதம் அனுஷ்டிப்போர் அமாவாசையில் ஒரு வேளை
உணவு உண்டு பிரதமை தொடக்கம் பகல் உணவின்றி
இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம்
உண்பது நல்லது.ஒன்பதாவது நாளாகிய மகாநவமி
அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள்
விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன்
பாரணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள்
முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி
ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள
உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு
நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம்
இசைக்கருவிகளைப் பராயணம் செய்து குடும்ப
அங்கத்தவர்களுடன் பாரணையைப் பூர்த்தி செய்யலாம்.
ஆண்கள் தயவு செய்து மன்னிக்கவும்...
உங்களுக்கு வேலை ஜாஸ்தி வந்து விட்டது.
இந்த ஒன்பது நாட்களும் கொஞ்சம் உங்க
வீட்டு கொலுவில் உங்க அம்மணிக்கு பரந்த
மனதுடன் உதவுங்களேன்...ப்ளீஸ்!!!
இனி வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி மேலா தான்..
உங்க நவராத்திரி டிப்ஸ்,மற்றும் சுவையான நிகழ்வுகளை
அடுத்து வரும் பதிவில் பகிர்வோமா? உங்க வீட்டு கொலு
புகை படங்களை எனக்கு அனுப்புங்க..ப்ளோகில் போட்டு
அசத்திடலாம்...வாங்க கை சேர்த்து எண்ணங்களை
பகிர்ந்து அசை போடுவோம்.நவராத்திரி கொண்டாடுவோம்.
எங்களுக்கு கொலு வைக்கும் பழக்கம் கிடையாதுன்னு
எஸ்கேப் ஆக மட்டும் முடியாது..நாலு பொம்மை
வாங்கி இந்த வருடம் கொலுவை இனிதாக கொண்டாட
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளுக்கு.
சூப்பர்ப் பதிவு..படத்தினை பார்த்தவுடன் உங்க வீட்டு கொலு என்று நினைத்தேன்...அப்புறம் தான் தெரிந்தது...
பதிலளிநீக்குவாங்க மேடம் ,
பதிலளிநீக்குநான் 18 ,வருடங்களாக கொலு வைத்து வருகிறேன் ..
விரைவில் என் வீட்டு கொலு படங்களை பகிர்ந்து
கொள்ள உள்ளேன் , சுவையான நிகழ்சிகளை
வர பதிவுகளில் உங்களுடன் பகிர இருக்கிறேன் .
தங்கள் வருகைக்கு நன்றி.