சனி, அக்டோபர் 02, 2010

மார்பக புற்றுநோய்


 உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில்,
10.4% நிகழ்வுகள் மார்பக புற்றுநோயால் ஏற்படுகிறது,
இது தோல் மேல் ஏற்படாத புற்றுநோயில் இரண்டாவது
இடத்தையும் (நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாக)
புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் ஐந்தாவது பெரிய
காரணமாகவும் இருக்கிறது 2004ஆம் ஆண்டில்,
உலகெங்கும் 519,000 மரணங்கள் மார்பக புற்றுநோயால்
ஏற்பட்டது (புற்றுநோய் மரணங்களில் 7%; மொத்த
மரணங்களில் 1% ) மார்பக புற்றுநோயானது,
ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு
வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Breast Cancer Awareness Month (BCAM)
also referred to in America as
National Breast Cancer Awareness Month (NBCAM)


மருத்துவ அமைப்புகளில், மார்பக புற்றுநோயானது,
மார்பக பரிசோதனையில் ஒரு "மும்மை சோதனை"
மூலம் கண்டறியப்படுகிறது (பயிற்சி பெற்ற மருத்துவரின்
மார்பக பரிசோதனை), மேம்மோகிராஃபி, மற்றும்
நுண் ஊசி கண்டறிதல் சைட்டோலஜி ஆகியவை ஆகும்.
மேம்மோகிராஃபி மற்றும் கிளினிக்கல் மார்பக சோதனை
ஆகிய இரண்டுமே, ஒரு கட்டி புற்றுநோய்தானா என்று அறியவும்,
சில நேரங்களில் பிற காயங்கள் ஏதும் உள்ளனவா என்று அறியவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. நுண் ஊசி கண்டறிதல் மற்றும்
சைட்டோலஜி (FNAC)
, என்ற சோதனையை, GP இன்
அலுவலகத்தில், மரத்துப்போகும் பொருளைப் பயன்படுத்தி,
கட்டியிலிருந்து திரவத்தை எடுக்க முயற்சி செய்வதாகும்.
தெளிவான திரவமானது, கட்டி புற்றுநோயாக இல்லை என்று
தெரிவிக்கும், ரத்தத்துடன் கூடிய திரவமானது புற்றுநோய்
செல்கள் உள்ளனவா என்று நுண் பெருக்கி கண்ணாடி
(மைக்ரோஸ்கோப்) பரிசோதனைக்கு அனுப்பப்படும்.
இந்த மூன்று சோதனைகளையும் ஒன்றிணைத்து,
மார்பக புற்றுநோயை மிக அதிக துல்லியத்துடன்
கண்டறிய பயன்படுத்தலாம் !
மார்பக புற்றுநோயானது முதலில், அறுவைசிகிச்சை
மூலமாகவும் பின்னர் மருந்துகள், கதிரியக்கம்
அல்லது இரண்டினாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது.
கண்டறிதல் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு
ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சைகள் அதிக
தீவிரத்துடன் தரப்படுகின்றன. நல்ல முன் கண்டறிதலுடன்
கூடிய ஆரம்பநிலை கான்சர்கள் (DCIS அல்லது நிலை 1
அல்லது நிலை 2) லம்பெக்டோமி மற்றும் கதிரியக்கம்
ஆகியவை மூலம் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகின்றன
மிகவும் குறைவாக கண்டறியப்பட்ட மற்றும் மீண்டும்
வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்ட பிந்தைய நிலை
கான்சர்கள் அதிதீவிர கீமோதெரபி
மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றனமார்பக புற்றுநோயை கண்டறியக்கூடிய முதல் அறிகுறியானது
மார்பகத்தின் திரட்சியானது பிறத் திசுக்களிலிருந்து வேறுப்பட்டதாக
இருப்பதை அறிவதாகும். ஒரு பெண் கட்டியை உணர்ந்தவுடனே
80% மார்பக புற்றுநோய்கள் கண்டறியப்பட்டு விடுகின்றன.
மார்பகத்தின் திரட்சி கண்ணுக்கு புலனாகும்
அளவுக்கு மாறும்போது,
அது பல ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கும் நிலையே ஆகும்.
ஆரம்பநிலை மார்பக புற்றுநோய்கள் முலை ஊடுகதிர்ப்பட
சோதனை (மேமோகிராம்) மூலமாக அறியப்படுகின்றன.

மார்பக புற்றுநோயின் பிற அறிகுறிகளாவன, மார்பக அளவு,
வடிவம் ஆகியவற்றில் மாற்றம், தோலில் பருக்கள் தோன்றுதல்,
மார்பு காம்பு திரும்புதல் அல்லது ஏதேனும் ஒரு காம்பிலிருந்து
தானாகவே நீர்வடிதல். மார்பக புற்றுநோய் இருக்கிறதா அல்லது
இல்லையா என்று தீர்மானிப்பதில்,
வலியானது ("மாஸ்டோடைனியா")
ஒரு நம்பகமற்ற கருவியாகும், டெர்மல் லிம்பாடிக்ஸ் எனப்படும்
மார்பக தோல்பகுதியில் உள்ள சிறிய நிணநீர் பைகளை மார்பக
புற்றுநோய் செல்கள் தாக்கும்போது, அதனுடைய வெளிப்பாடானது
தோல் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும், எனவே இது வீக்கமுடைய
மார்பக புற்றுநோய் ( inflammatory breast cancer- IBC)
என்றழைக்கப்படுகிறது.

மார்பகப் புற்றுநோயின் அறிகுறி என்று குறிப்பிடப்படும் மற்றொன்று
மார்பகத்தில் பேஜட் குறைபாடு (Paget's disease of the breast)
ஏற்படுவதாகும். இந்த அறிகுறியானது எக்சிமாடாய்ட் தோல்
மாற்றங்களால் வெளிப்படும். அதாவது மார்பு காம்பின் தோலானது
சிவந்தும், சிறிதளவு உறிந்து வருமாறும் மாறும். பேஜட்
தீவிரமடையும்போது, எரிச்சல், அரிப்பு, அதிகமான உணர்திறன்
மற்றும் வலி ஆகியவைக் காணப்படும்.

சில நேரங்களில், மார்பக புற்றுநோய், மெட்டாஸ்டாடிக்
(மாற்றிடமேறிய) குறைபாடாக இருக்கும், அதாவது புற்று
ஏற்பட்ட இடத்திலிருந்து பிற இடங்களுக்கு பரவக்கூடும்.
மெட்டாஸ்டாடிக் மார்பக புற்றுநோயானது மெட்டாஸ்டாடிஸின்
இருப்பிடத்தைப் பொறுத்து அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும்.
மெட்டாஸ்டாடிஸ் உருவாகக் கூடிய பொதுவான
இடங்களாவன: எலும்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் மூளை
ஆகியவையாகும் காரணமற்ற எடையிழப்பும் கூட, சில நேரங்களில்
மார்பக புற்றுநோயின் புதிரான அறிகுறியாக கொள்ளப்படலாம்.
அதனால் அணைத்து பெண்களும் குறிப்பாக நாற்பது வயதை தொட்டவர்கள்
மருத்தவரிடம் தகுந்த அல்லோசனை பெற்று
செக் பண்ணி மார்பக புற்று நோயை
அறவே ஒழித்து விழிப்பு உனர்வை ஏற்படுத்துவோம் !!!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome