புதன், ஆகஸ்ட் 11, 2010

சந்தகை

இங்கு சந்தகை கிடைக்கும் ..

நான் கோவை மாவட்டம் புதிதாக வந்தவுடன்

பார்த்த தகவல். ஹோட்டல் அறிவிப்பு பலகை


சந்தகை  ரெடி !!அந்த கணமே யோசித்தேன் ,,,

எப்படி இருக்கும்...??என்ன சுவையில்     இருக்கும்?

நான் அப்படி ஒரு பெயரை அங்கு தான் முதன்

முதலில் பார்த்தேன் .. ஏக கற்பனைகள் உடன் எங்க

பாகத்து வீட்டு கெளன்டர் அம்மாவிடம் கேட்டேன்

சந்தகை எப்படி இருக்கும்?அவிகளுக்கு தெர்யுமே!

என்றார்.சந்தகை மரம் பார்த்தது இல்லையா ?என்றார்.


சந்தன மரம் கேள்விபட்டிருகோம்..அது என்ன சந்தகை 
மரம்..?அது எப்படி இருக்கும் கற்பனையில் மூழகினேன் 

அடுத்த நாள் ..சந்தகை மரம் வேணுமான்னு ஒரு பையன்

பாகத்து வீட்டு அம்மா சொல்லி கையில் அயுதம் போல்
வைத்து இருந்தான் .. ஓஒ இது தான் சந்தகை மரமா?


நன்றி கூகுளே pictures ,
நன்றி www.aayisrecipes.com ,
பொதுவாக முறுக்கு உரல் , அஞ்சலி கிச்சேன் உரலில்

இடியாப அச்சு ல் மாவை போட்டு நாங்கள் இடியாப்பாம்

செய்வோம் ! இங்கு சந்தகை பலகை இயந்திரம் மூலம்

சேவை,சந்தகை என்று தினுசு தினுசாய் வித்யாசமாக

செய்கிறார்கள்.விஷயம் ஒன்று தான் ..இடியாப்பம் மறு

பெயர் சந்தகை என்பது புரிய எனக்கு சில நாட்கள் ஆச்சு.
  அரிசியை ஊற  வைத்து அரைத்து அடுப்பில் வைத்து என்னை

விட்டு பதமாக கிளறி ஆற வைத்து கொழு க்கட் டயாக பிடித்து

ஆவியில் இரண்டு நிமிடம் விட்டு சூட்டுடென் இந்த சந்தகை

மரத்தில் வைத்து அமுத்தி இடியாப்பமாக பிழிந்து விடுகிறார்கள்


தேங்க்ஸ் my ,experienceincooking .ப்ளாக்,

இன்னும் சிலர் அரைத்த மாவை இட்லி தட்டில் இட்லிகளாக

வார்த்து சூட்டுடன் சந்தகை மரத்தில் போட்டு பிழிந்து அதை

variety , ஆக கட்டு சாதம் போல் எலுமிச்சை,தக்காளி ,தேங்காய்

தயிர் மற்றும் ஸ்வீட் கு தேங்காய்,வெல்லம், ஏலம் போட்டு

நெய் விட்டு கலர் புல் ஆக delicious   சந்தகை மேலா செய்து

சும்மா அசத்துராங்க!!. இப்ப எல்லாம் இட்லி மீந்து போனா உடனே

 சுட சுட சந்தகை தான் போங்க .எங்க வீட்ல!!அதுவும் சந்தகை மரத்துல
.
இப்ப நோகாமல் இன்ஸ்டன்ட் சந்தகை எல்லா கடைகளிலும்
 
பாக் செய்து கிடைக்குது. வாங்கி விருப்பபடி தாளித்து கொள்ள

வேண்டியது தான். இதில் அச்சு பொடிசாக இருந்தால் சந்தகை

சில்க் நூல் போல் அழகாக இருக்கும் ! நீங்களும் சந்தகை மரம்

வாங்குங்க .. சந்தகை செய்து சாப்பிடுங்கள். அணைத்து வயதினரும்

சாப்பிட ஏற்றது. மறக்காமல் கருத்து சொல்லீட்டு போங்க..நன்றி
.

1 கருத்து :

welcome