மாசாணி அம்மன் கோயில் சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்று !
பொல்ளாச்சி ல் இருந்து 14 ,கிலோமீட்டர் ல் ஆழியார் அணை
சந்திப்பில் ஆனைமலையில் மல்லாந்து படுத்த நிலையில் இந்த
அம்மன் உள்ளது! "மயான சயனி " என்பதில் இருந்து
மாசாணி அம்மனாக திகழ்கிறார். சுமார் 15 ,அடி நீளம் ,
நான்ங்கு கைகளுடன் கம்பிரமாக காட்சி அளிக்கிறார்.
இந்த அம்மனுக்கு ஒரு உண்மை கதை உள்ளது !
வெகு காலங்களுக்கு முன்பு இங்கு ஆழியார் அருகே
ஒரு அரசன் ஆண்டு வந்தார் ,அவருக்கு அடர்ந்த மாங்காடு
நிறைந்த மாமரங்கள் உண்டாம். அங்கு கடந்து செல்லும்
யாரும் கீழே கிடக்கும் மாங்காய் களை எடுக்க கூடாது ,
மீறி எடுபவர்களை கொன்று விடுவாராம் .கொடூரமான
அரசர் .அணையில் குளிக்க வந்த பெண்களில் ஒருவர்,
மிதந்து வந்த மாங்காய் ஒன்றை எடுத்து கடித்து சாப்பிடாராம்.
விஷயம் உடனே அரசனுக்கு செல்ல ,கோபத்துடன் அங்கு வந்து
அந்த பெண் மாங்காயை தெரியாமல் எடுத்து விட்டதாக வும்,
மன்னிதுவிடும்படி அந்த பென்னின் தந்தை அதற்கு ஈடாக எதுவும்
தருவதாக சொல்லியும் ,எதையும் கேட்காமல் தண்டனையை
நிறை வேற்றினார் !!ஆழியார் அருகே கல்லறை ல் புதைத்தனர் .
நாளடைவில் அந்த பெண் தனக்கு நேர்ந்த அநீதிக்காக அந்த
அரசனை கொன்று , அந்த இடத்தில் அப்பென்னின் உருவத்தை
படைத்தது இன்று மக்கள் பய பக்தியுடன் வழி பட்டு வருகின்றனர்.
இங்கு மற்றொரு புதுமை என்வென்றால் ,செய்வினை மற்றும்
துரோகிகளால் ஏமாற்ற பட்டவர்கள், உடமைகளை பறிகொடுத்தவர்
இங்கு வந்து சன்னிதானத்தில் உள்ள சிலை மீது காய்ந்த மிளகாய்களை
அரைத்து பூசுகின்றனர்.இதற்கு என்று விசேஷ பூஜைகள் நடத்துகின்றனர்.
மிளகாய் எரிவது போல் ஏமாற்றியவரை தாக்குமாம் , பாதிக்கப்பட்டவரின்
மனசு சாந்தி கொண்டு அவருடைய பிரச்சனைகள் 3 வாரங்களில் தீருமாம் !
அதன் பின்பு அம்மணை சாந்தம் செய்ய தைல அபிசேகம் செய்யணுமாம்.
அநேகம் பேருக்கு பிரச்சனைகள் தீராமல் உண்டு.என் தோழி ஒருவர் ,தன்
மாமியார் ,சின்ன மாமியார் ,நாதனார்,களால் (செய்வினை)தன் கணவரை
பிரிந்து இருகிறாராம் .இவர்களால் பல அவமானங்கள் அடைந்து , தனியாக
கஷ்டங்களுக்கு ஆட்பட்டு இருகிறாராம்.இந்த அம்மனிடம் முறை இட்டு
மிளகாய் அரைத்து பூச போகிறாராம் , விரைவில் வரபோவதாக சொன்னார்.
நான் அவருக்கு ஆறுதல் சொல்லி தினமும் காலை 4 .௦30 ,-5 .30 ,சுவாமி படம்
முன்பு விளக்கு ஏற்றி உன் கஷ்டங்களை சொல்லி முறை இடு எல்லாம்
சரி ஆகிவிடும் என்று கூறி உள்ளேன் . தெய்வம் இருக்க என்ன பயம்?
இருபினும் சில துரோகிகள் செய்வினை என்ற பெயரில் ஒரு தனி பட்ட
மனிதரின் செய்கைகளை முடக்குவது ஏன்? கணவன் மனைவியை
பிரிக்க நினைப்பது ஏன்? இவர்களும் மனிதர்கள் தானே? எதற்கு இந்த
மாதரி செய்து கஷ்டபடுத்தனும்? இவர்களுக்கு இது மாதிரி நடந்தால்
எப்படி இருக்கும்.. யோசித்து பார்பார்களா? தெய்வ பக்தி உள்ள வரை
எதுவும் நம்மை ஆட்கொள்லாது என்று நான் சொன்னேன் என் தோழி இடம் .
நல்ல பகிர்வு...! நானும் ஒருமுறை மாசானி அம்மன் கோயிலுக்கு சென்றது உண்டு...!
பதிலளிநீக்குஎழுத்து பிழைகளை கொஞ்சம் கவனிங்க...!
நன்றி தமிழ் அமுதன்
பதிலளிநீக்குசரி பார்க்கிறேன்..மனிக்கவும்