செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

ப்ளாக் அடிக்ட்ஸ்

இன்டர்நெட் டெக்னாலஜி முனனேற,  அதற்கு ஏற்றார் போல் அடிக்ட்ஸ்
அதிகமாக உள்ளனர். இந்த அடிமைகளை டெக்னாலஜி ஏற்றார் போல்
வரிசை படுத்தலாம் .வித் விதமாக வடிவம் எடுத்து வருகின்றனர் ...




























டிவி அடிமைகள்  
முன்பு டிவி முன் நேரத்தை  போக்குவது  என்று டிவிக்கு அடிமையாக
இருந்தனர்,இன்று இண்டர்நேட்க்கு அடிமைகளாக உள்ளனர், குறிப்பாக ப்ளாக்
அடிமைகள் வளர்ந்து வருகின்றனர் .எதுவுமே அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு  ஆகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
எனக்கு தெரிந்த 88 ,வயது பாட்டி ஒருவர், டிவி யில் வரும் தொடர்களின்
கதாபத்திரங்களின் பெயர்கள் மற்றும் தொடரின் பெயர் இவைகளை ஹிண்ட்
போல எழு தி வைத்து கொள்கிறார் மறக்காமல் இருக்க, ஒரு நாள் கூட மிஸ்
பன்ண மாட்டாரம் . அவளவு ஈடுபாடு , அந்த அளவுக்கு அடிமையாக உள்ளார்.














லேன்ட் லைன் போன் அடிமைகள்
அடுப்பில் வைத்தது  கூட மறந்த நிலையில் , பில் எகிறும் என்ற நினைவே
இல்லாமல் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .

















மொபைல் அடிமைகள் 
மொபைல் எஸ் எம் எஸ் கலாசாரம் இன்று சிறு பிள்ளைகளை அதிக அளவு
பாதித்து உள்ளது . இளைஞர் , இளம் பெண்களும் இதற்கு அடிமை ஆகி
கொடி கட்டி பறக்குது.,, goodmorning ,goodnight , மொக்கை ஜோக்ஸ் அதிக அளவில்
எஸ் எம் எஸ் ல் forward , messagae , ஆக இளம் வயதினரை அதிகம் ஆட்கொண்டுள்ளது !
மொக்கை ஜோக் எஸ் எம் எஸ் பன்ணிய வண்ணம் இளைய தலைமுறை ரோட்டில்
விபத்துக்கு உள்ளாகினர்!ஸ்பீக்கர் போட்ட வண்ணம் பப்ளிக் ல் யாரை பற்றி
கவலை கொள்ளாமல் மனம் போன போக்கில் தங்களை மறக்கின்றனர்.

















i - pad , வாக்மேன் வாக்கி டாக்கி அடிமைகள்  
இவர்களுக்கு என்று தனி உலகம் இந்த ஐ-பாட், இதை காதில் வைத்து கொண்டு
எதை பற்றியும் கவலை படாமல் வண்டி ஒட்டி கொண்டு மெய் மறந்து உள்ளனர்     























இன்டர்நெட் அடிமைகள்
இன்று பல தரப்பு மக்கள் இண்டர்நெட்டை தவறாக பயன் படுத்துகின்றனர் .
ஒரு பெண்மணி கூறினார் ,என் மகனுக்கு இன்டர்நெட் ல் கேம்ஸ் விளையாடா
விட்டால் அன்று தூக்கமே வர்ராது.. அவளவு வெறியுடன் விளையாடுவான் ..
மற்றொரு ந்ன்பர் கூறுகிறார் ,,எனக்கு சாப்பாடு, தூக்கம் இல்லாட்டி கூட பரவாஇல்லை
இன்டர்நெட் இல்லாவிட்டால் அவ்ளோதான் !! பைத்தியம் பிடித்து விடும் என்றார்.






















ப்ளாக் அட்டிக்ட்ஸ் 
தர்போது வளந்து வரும் பதிவு உலகத்தில் ப்லோக்கேர்ஸ் மற்றவர்கள் ப்ளோகை
பார்வை இடுவதிலும்,தங்கள் ப்ளோகில் பதிவு இடுவதிலும் அதிகமாக நேரம்
செலவு செய்கின்றனர்.நாம் அடிமை களாக மாறாமல் இருந்தால் போதும்.!!!
என் தோழி க்கு போன் பன்ணினேன்.. போனை எடுத்து ஆன் செய்து விட்டு
பேசவில்லை .. அங்கு அவருடைய மகனிடம் டேய் , அந்த அடுப்பில் உள்ள
குழம்பில் கொஞ்சம் உப்பு அளவா எடுத்து போடு தங்கம் என்றார்,ஹலோ...
என்று நான் கத்தி  கொண்டே இருந்தேன்.. மறு முனையில் ...மற்றொரு  ஒரு
போனில் கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடுங்கள் நான் நெட்டில் உள்ளேன்
என்று கூறுவது கேட்டு போனை துண்டித்து விட்டேன் .அவ்ளோ பிசி அவர்கள் .
முக்கியமான் விஷயம் பற்றி ஒரு நண்பரிடம் கலந்து  ஆலோசிக்க அவர்
வீட்டுக்கு சென்றேன் .. அவர் மனைவி கொஞ்சம் உட்காருங்கள் இதோ
வந்து விடுவார் என்று போய் விட்டார்..அரை மணி நேரம் ஆகியும் மனுஷன்
வந்த பாடில்லை ..வேறு வழி இல்லாமல் என்னுடன் எடுத்து வந்த லேப் டாப்பை
திறந்து இந்த பதிவை போட ஆரம்பித்தேன். ..சிறிது நேரம கழித்து ,வாங்க
ரொம்ப நேரமாய் வெயிட் பன்னுரீகளா.? சாரி..என் ப்ளோக்ல பதிவு போட்டு
கிட்டு இருந்தேன்.. டைம் போனதே தெரியலே.. என்றார்.பரவா இல்லை என்று
நான் கூறி வந்த விட்டேன்...எங்கு செல்கிறது இந்த பாதை? நாம் சரியாக
செல்கிறோமா?   எத்தனை தருணங்களை நாம் நிதர்சனமாய் இழக்க உள்ளோம் ..
சிந்திப்போம், இதற்கு கண்டிப்பாக கவுன்சிலிங் அவசியம் ..அப்ப தான் வழி பிறஇக்கும்
.

5 கருத்துகள் :

  1. அந்த அடிமை பழக்கத்தில் இருந்து வெளியே வர என்ன தீர்வு, அதை சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப சிம்பிள்..ஸெல்ப் கண்ட்ரோல் தான் ..குறிபிட்ட நேரம் மட்டுமே ...
    என்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.தேவையானால் ..ரிமைன்டர்.
    ப்ளாக் அலாரம் .செட் செய்து கொள்ளவும் !!!!!!

    பதிலளிநீக்கு
  3. எல்லாருக்கும் தேவையானதைத்தான் எழுதுகிறீர்கள். அப்புறம் என்ன women's special?!!!!

    பதிலளிநீக்கு
  4. ஹலோ... இப்பதான் ப்ளாக் பக்கமே வந்தேன்.அதுக்குள்ளே ப்ளாக்
    பண்ணுறீங்களே ஞாயமா?

    பதிலளிநீக்கு
  5. நான் உங்களை சொல்வில்லை அய்யா ..(சீனுவாசன்.கு)

    பதிலளிநீக்கு

welcome