அது போல் இந்த ரவா இட்லியும் பேர் போனது!
எங்கள் வீட்டில் அன்று (ஞாயிறு ) ரவை உப்புமா
செய்ய ரவையை வறுத்தேன் காலை டிபெனுக்கு ..
உப்புமாவா? நோ நோ எங்களுக்கு ப்ரேக் பாஸ்ட்
வேணாம்!! என்று ஒன்று போல அனைவரும்
ஸ்ட்ரைக் பன்ண ஆரம்பித்து விட்டார்கள்!!
சட்டேன்று யோசனை வந்து ,மதியம் மோர்
குழம்பு செய்ய எடுத்து வைத்து இருந்த தயிர்
ஞாபகத்துக்கு வர ஓகே.. உப்புமா இல்லை ..
டெலிசியஸ் இட்லி எல்லார்க்கும் என்றேன்.
ஸ்ட்ரைக் வாபஸ் வாங்கி கொண்டார்கள்
பெரிய மனதுடன். ...இப்போ பார்போமா?
தேவை
ரவை : 1 கப்
தயிர் : 1 1 /4 கப்
சோடா : 1 ஸ்பூன்
தாளிக்க
கடுகு : 1 ஸ்பூன்
உளுந்து :1 ஸ்பூன்
கடலை பருப்பு :1 ஸ்பூன்
இஞ்சி பொடிசாக : 1 ஸ்பூன்
வரமிளகாய் :2
கருவேப்பிலை :சிறிது
மல்லி தழை :சிறிது
முந்திரி பொடிசாக :2 ஸ்பூன்
உப்பு ,எண்ணெய் தாளிக்க
செய்முறை
ரவையை தயிரில் கொட்டி உப்பு ,சோடா மாவு கலந்து
1 மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் எண்ணெய்
சட்டிவைத்து என்னை 2 ஸ்பூன் விட்டு கடுகு தாளித்து
வர மிளகாய் கிள்ளி போட்டு ,உளுந்து,கடலை ,இஞ்சி,
கருவேப்பிலை,மல்லி, மற்றும் முந்திரி ஒவென்றாக
போட்டு பதமாக தாளித்து வறுத்து மாவில் கொட்டி
கிளறி மூடி வைக்கவும். நன்றாக் ஊறிய பின் இட்லி
தட்டில் சிறிது எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றவும் .
பத்து ௦ நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி
ஆறிய பின் எடுத்து செர்வ் பணவும்.இதற்கு மல்லி சட்டினி
அல்லது வேர்கடலை சட்டினி ,பாசி பருப்பு சாம்பார் நல்ல
காம்பிநேஷன்.சாப்ட், கலர்புல் டேஸ்டி டெலிசியஸ்
ரவ இட்லி அன்று எங்க வீட்டில் சீக்கிரம் பறந்து விட்டது !!
அப்படியே கூகிள் லில் சர்ச் பன்னும் போது யுடியுபில்
கேரளத்து பைங்கிளி ஒருவர் ரவ இட்லி செய்வது பற்றி
காணொளி பார்த்தேன் !! நீங்களும் பாருங்கள்.!!
நன்றி :கூகிள் இமேஜஸ்,யுடுயுப்வீடியோ
இட்லி சூப்பர் நிறைய போட்டு இருக்கீங்க..வீடியோவரை..!!
பதிலளிநீக்குவாங்க கீதா மேடம், மறுபடியும் அறு சுவை குறிப்பு ..! இட்லி பார்க்கும் போதே நாவில் சுவைக்க அதிக ஆசை வருகிறது ...!! ம்ம் .. உங்கள் வீட்டில் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்...? அடிகடி அறுசுவை உணவு ஸ்பெஷல் ..!! வாழ்த்துக்கள்..!!!
பதிலளிநீக்குthanks muthu
பதிலளிநீக்குthanks jailani