திங்கள், ஜூலை 26, 2010

கொங்கு தமிழ் மக்களே ...என் இனிய கோவை கொங்கு மக்களே !!

உங்களால் தான் மரியாதையை கற்று கொண்டேன் !

ஆம், நான் பிறந்தது,வளர்ந்தது,படித்து எல்லாம்

சென்னையில் தான்..மரியாதை என்பது கோவை 

வந்த பிறகு தான் தெரிந்தது!அது வரை வயதானவரை

கூட பார பட்சம் இல்லாமல் ஒருமையில் அழைத்தேன் ! 

இங்கு வந்த பின்பும் உடனே மாற்ற  முடியலை . பூ விற்கும் 

பெண்மணியை இங்கே வா, ஒரு முழம் பூ கொடு என்றேன் !

அந்த பெண் பூவை கொடுத்து விட்டு என்னை ஆழமாய் பார்த்து ,  

அம்மணி !!பெரிய படிப்பு எல்லாம் படிச்சு  இருக்கீங்க ..கொஞ்சம் 

கூட மரியாதை இல்லாமல் வா,போ..நு     சொல்றீக . நீங்க 

படிச்ச பள்ளிகூடத்தில் சொல்லி தரலையா? உங்களுக்கு ..

என்றாரே பார்க்கலாம்.!! அன்றிலிருந்து .ஒவ்வரு வார்த்தைக்கும் 


ங்க ..போட்டு பேச கற்றுக்கொண்டேன் !மிக நன்றாக உள்ளது.

அடுத்து சென்னையில் காய்களை தொட விட மாட்டார்கள். 

மீறி தொட்டு விட்டால் ..அவ்ளோ தான் ..சகட்டுமேனிக்கு 

யாருஎன்ன என்று பார்க்காமல் திட்ட  ஆரம்பித்து விடுவார்கள்.

அவிக, இவிக என்று மிக அழகாக அழைகிறார்கள் இங்கே !! 

அடுத்ததாக மனிதாபிமானம் ..இங்கே கண்டேன். 

என் அம்மா ஹோட்டல் ஒன்றுக்கு போன போது

அங்குள்ள படிகளை கடக்க மிகவும் சிரமம் அடைந்த போது  

கல்லாவில் அமர்ந்து இருந்த பெண்மணி மற்றும் சர்வர் 

ஓடி வந்து இரண்டு பக்கம் தாங்கி பிடித்து சாப்பிடும் நாற்காலியில் 

அமர வைத்து fan , போட்டு தண்ணீர் கொடுத்து உதவினார்கள். 


இவர்கள் பேசும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது. 

சாதரனமாக பஸ் இப்ப வருமா என்று கேட்டால்..

அது லேட்டாய்  வரும் என்றாலும், கிளவரம் இப்பதான்

போச்சு தாயீ ..இப்ப வந்துவிடும் என்று பாசிடிவ் ஆக 

சொல்லுவார்கள்.எதற்கும் டென்சன் ஆகாமல் ..அடுத்த 

ஆல்ட்டர் நெட் என்ன.. இப்படி பண்ணினால் தீர்ந்து போச்சு !!

என்று படு காஸ்ஷூலாக ஆக மலைப்பாக கருதும்

விசயங்களை கூட நொடி பொழுதில் ஈசி ஆக மாற்றி

விடுவார்கள். நானும் இப்போ   ஈசி ஆக எடுத்து கொள்கிறேன்.  


உதவும் மனப்பான்மை நிறையே உண்டு இவர்களிடத்தில்! 

பாசமும் நேசமும் ஊறி போன ஒன்று இவர்களிடம் ...

பாகத்து வீட்டில் என்ன நடக்குது என்று தெரியாது

அங்கு. ஆனால் இங்கு ஊர்ரில் இல்லாவிட்டால் கூட

சிறு சத்தம் கேட்டால் கூட ஓடி வந்து விசாரிக்கிரார்கள்.

பிரச்சனை என்றால் நமக்கு என்ன என்று இல்லாமல் ,

ஓடோடி வந்து ஆலோசனை கூறி உதவுகிறார்கள்.

நாம் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி கொண்டோம் என்றால் 

எல்லாம் நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.19 கருத்துகள் :

 1. நல்ல பதிவுங்க...! நான் கூட கோயமுத்தூருலதாங்க..
  நெறய கத்துகிட்டேன்...!
  நானும் கோவை பத்தி எனக்கு புடிச்ச கோயமுத்தூர் அப்ப்டின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேங்க..!

  நேரம் இருந்தா படிச்சு பாருங்க..!

  http://pirathipalippu.blogspot.com/2008/12/blog-post_08.html

  பதிலளிநீக்கு
 2. எங்க ஊரை பற்றி பெருமையா கூறியதற்கு ரொம்ப நன்றிங்க.....

  பதிலளிநீக்கு
 3. அத்தனையும் உண்மை தானுங்கோ அம்மணி....! மரியாதை மற்றும் பண்பு என்பதற்கு மறு பெயர் 'கோவை தமிழ் ' ..! அதை அங்கு இருந்து அனுபவித்து பார்த்தல் மிக நன்றாக உணர முடியும்.. தங்கள் அதை அனுபவ பூர்வமா உணர்ந்து உள்ளீர்கள் ..?ஆமாம் அம்மணி தங்கள் எத்தனி நாளாக கொங்கு மண்டலத்தில் வாழ்ந்துவருகிர்கள்..? உங்களின் கருத்துகளில் இருந்து கொங்கு மேல் தங்களின் அளவு கடந்த அன்பு காண முடிகிறது.. ?? கொங்கு மண்டலத்தின் சார்பாக வாழ்த்துகள்..!!

  பதிலளிநீக்கு
 4. தமிழ் அமுதன் நன்றி .உங்கள் ப்ளோகில் படித்தேன்
  சரியாக சொன்னீர்கள் .

  பதிலளிநீக்கு
 5. கோவையை பற்றிய உங்கள் கணிப்பு சரியே.

  இந்த பதிவில் எழுத்துக்களை படிப்பதில் சிரமம் இருக்கிறது. எழுத்துக்களை மஞ்சள், வெள்ளை நிறத்திற்கு மாற்றவும். அல்லது பின்னணியை மாற்றவும்.

  பதிலளிநீக்கு
 6. வாங்க muthu,
  அனுபவ பூர்வமா உணர்ந்து உள்ளேன்
  19 வருடங்களாக அனுபவித்து வருகிறேன் ,சென்னை போகவே பிடிக்க வில்லை ,எங்க ஊட்டு காரருக்கு தான்
  நன்றி சொலல வேணும்.

  பதிலளிநீக்கு
 7. manjoorraja
  ஓகே கண்டிப்பாக மாற்றுகிறேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 8. எனக்கும் பிடிக்கும் அவர்கள உச்சரிக்கும் தமிழ் அழகாக இருக்கும்

  பதிலளிநீக்கு
 9. கும்பகோணதிலிருந்து படித்து முடித்துவிட்டு வேலைக்காக சென்னை வந்தபிறகு இந்த பேச்சு வழக்கும் மரியாதையும் எனக்கு மிகவும் பல நேரங்களில் எரிச்சலடைய வைத்துள்ளது.
  யாரிடம்மும் 'இவ்வாறு பேசுங்கள்' என்று சொன்னால் நிலைமை இன்னமும் கேவலமாகிவிடும்.
  வேறு வழி இல்லாமல் ஜீரணித்து கொண்டாயிற்று.முப்பது வருஷமாயிற்று.
  ஆனாலும் இன்றும் கூட யாராவது அசல் சென்னை வாசி என்னிடம் கேட்கும் கேள்வி ' இன்னா நீயி மெட்ராசு ஆளு
  கெடியாதா? ' 'வேத்து ஊரு ஆளு மேரிக்கி பேசிக்கினுக்கீற? '
  காரணம், பேச்சு வழக்கை நான் மாற்றிகொள்லாமல் இருப்பதே.

  பதிலளிநீக்கு
 10. ஆமாம் சகோதரே மிக சரியா சொனீங்க !
  நன்றி ..மாற்றம் அவசியம்,நல்ல
  விசயங்களை மாற்றாமல் இருப்பது
  நல்லது.

  பதிலளிநீக்கு
 11. கோவையைப் பற்றி புகழ்ந்ததற்கு நன்றிங்க.. கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி வரை இந்தப் இனிய பேச்சு உண்டு. ஆனால் கோவை மாநகரம் மாறி வருகிறது. நீங்கள் சொல்வது உடுமலை, கோபி, ஈரோடு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பெருந்துறை, சென்னிமலை போன்ற பகுதிகளில் மிகச் சரி. ஆனால் இப்போது கோவையில் மற்ற மாவட்டத்தினர் தொழில் செய்கின்றனர். அவர்களது பேச்சு உடனடியாக மாறுவதற்கு இயலாது. அதனால் நீ, போ, என்ன வேணும் என்பது போன்ற மரியாதைக் குறைவான (கோவை பகுதிக்கு) சொற்களைக் கேட்க முடிகிறது. குறிப்பாக தேநீர் கடைகள், உணவகங்கள்...

  அது சில நேரம் எரிச்சலைத் தரும். ஆனால் வாங்க, சரிங்க என்பது சில மாவட்டங்களில் உச்சபச்ச மரியாதை என்று எனது நண்பர் சொல்கிறார். ஆனால் கொங்கு மண்டலத்தைப் பொருத்தவரை அது குறைந்தபட்ச மரியாதை...

  என்ன நாஞ்சொல்றது சரிதானுங்களே..
  உங்கள் பதிவு அருமீங்.. அம்மணி..

  பதிலளிநீக்கு
 12. //வாங்க muthu,
  அனுபவ பூர்வமா உணர்ந்து உள்ளேன்
  19 வருடங்களாக அனுபவித்து வருகிறேன் ,சென்னை போகவே பிடிக்க வில்லை ,எங்க ஊட்டு காரருக்கு தான்
  நன்றி சொலல வேணும்.//

  என்னங்க நீங்க...இத்தன நாளா இருந்துட்டு சொல்ல வேணும்னு சொல்றீங்க...அப்புடிச் சொல்லக்கூடாது... சொல்லோணும், கேக்கோணும், பாக்கோணும் என்று சொல்லோணும்....சரியாங்க. -:)

  பதிலளிநீக்கு
 13. வாங்கோ ரகு, நன்றி!!
  "வாங்க, சரிங்க என்பது சில மாவட்டங்களில் உச்சபச்ச மரியாதை என்று எனது நண்பர் சொல்கிறார். ஆனால் கொங்கு மண்டலத்தைப் பொருத்தவரை அது குறைந்தபட்ச மரியாதை..."
  கரெக்ட் ..
  உடனே மாத்த முடிலங்கோ!!!
  புரியுதுங்கோ .

  பதிலளிநீக்கு
 14. Very well said dear.
  Here(USA) in an INDIAN STORE, hearing my Tamil, a girl came near me and asked me whether are you from Coimbatore?(then vanthu painthadu kadineele).
  Then we became friends.(yes with a young girl i became friend).
  Why I am telling this, 35 years of staying in Chennai doesnot made my language change of my birth place Coimbatore.
  Thanks for the write up dear.
  I felt happy visiting here.
  viji

  பதிலளிநீக்கு
 15. superb...i am a coimbatorian....i really happy about your thoughts about our "kongu language"....keep it up...

  பதிலளிநீக்கு

welcome