புதன், ஜூலை 21, 2010

நாற்பது வயது பிளஸ் ....























நாற்பது பிளஸ்  ஐ வெல்வது எப்படி?

பெண்களை பேதை ,மங்கை,மடந்தை பேரிளம்பெண் என்று
வார்த்தைகளால் வருணிகிரார்கள்!!.சிறுமி,கன்னி ,பள்ளி பருவம்,
கல்லுரி வாழ்க்கை,காதல் ,கல்யாணம் குழந்தை பேறு,வளர்ப்பு
என்று பல கட்டங்களை கடக்கும் போது ,நாற்பதுகளில் பக்குவபட்ட
காலம் என்பதால் பொறுப்புகள், சுமைகள் சந்திக்க இருக்கும்
காலகட்டம் ஆகும் ,பிரச்சனைகளை எவ்வாறு எதிர்  கொள்வது ,
பொடிபொடி ஆக்குவது?எல்லாம் நம் கைகளில் தான் உள்ளது.
தள்ளாட்டம் போ... துள்ளாட்டம் வா..என்ற பாலிசி தான் வேண்டும்
இந்த இனிய நாற்பதை வரவேற்க. வயது ஆகி விட்டதே என்ற நினைப்பை
முதலில் மனதில் இருந்து களைந்து  விட வேண்டும்.என்னால் முடியும்
என்று மனதுக்குள் சொல்லி பாருங்கள். உங்கள்  மனம் பரவசம் அடைவதை.
தினம் மலர்களோடு,செடிகளோடு ,மீன் தொட்டியில் உள்ள மீன்களோடு
பேசுங்கள் ,எத்தனை உற்சாகமாய் இருக்கும் என்று பாருங்கள்.


ஒன்று

மனசு தான் வாழ்ககையில்  சந்தோசம், துக்கம் பற்றி அதிகம் கவருவது!!
மனதில் நமக்கு வயது ஆகி கொண்டு போகிறதே என்கிற தாழ்வு மனபான்மை
காரணமாக உற்சாகம் குறைகிறது.அதனால் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல்
போகிறது.இதை சவாலாக ஏற்க வேண்டும், அபோது தான் மனம் பக்குவபடும்


இரண்டு

எனக்கு வயசு ஆச்சு எதுக்கு காஸ்ட்லி ஆன டிரஸ் என்று அலட்சியம்
கூடவே கூடாது!!ஆள் பாதி ஆடை பாதி என்பதுக்கு ஏற்ப உடுத்துகிற உடை
கௌரவமாக இருந்தால் ..நம்மை கௌரவமாக பார்ப்பார்கள்..நமக்கு
 பொருத்தமான அழகான உடை உடுத்தி கொள்வது மிக அவசியம்  இந்த இனிய
நாற்பதுகளில்... டிசெண்டாக நம் பர்சனாலிட்டி யை மெயின்டைன் செய்யனும்.


மூன்று

முகத்தை எந்த நேரமும் கடு கடுனு வைக்காமல் சிரித்த முகத்துடன் இருந்தால்
எத்தனை நன்றாக இருக்கும்? நம் முகத்தை கன்னாடியில் பார்க்கும் போது கடு கடு என்று இருந்தால் முக பொலிவு இல்லாமல் போய் விடும்.மனதை  சந்தோசமாக வைத்து கொண்டால் முக பொலிவு தானாகவே வந்து விடும்.


நான்ங்கு

நம்மை நாம் தான் கவனித்து கொள்ள வேண்டும்!நாற்பதுகளில் வரும் உடல்
தொந்தரவுகளை சமாளிக்க வேண்டும்.எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.அதிக நார் சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

ஐந்து  

கண்டிப்பாக வருடம் ஒரு முறை அல்லது ஆறு மாதம் ஒரு முறை ரத்த அழுத்தம்,நிரழிவு உபாதைகான டெஸ்ட், எடை ,மற்றும் மார்பக புற்று
நோய் கண்டறிய மேமொக்ரம் ,கற்பப்பை புற்று நோய் கண்டறிய
பாப் ஸ்மியர் டெஸ்டுகளை மேற்கொள்வது நல்லது! வரும் முன்  
காப்பது சிறந்தது அல்லவா..?


ஆறு


நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம் என்பதை கருத்தில் கொண்டு 
நோய் வந்த பின்பு அவஸ்தை படுவதை விட முதலில்லே அணைத்து 
டெஸ்டுகளை செலவை பார்க்காமல் பார்த்து விடுவது நன்று.கண்டு 
கொள்ளாமல் விட்டு விட்டு பின்பு அல்லலுக்கு உட்பட வேண்டி இருக்கும்.!!


ஏழு 


சிலர் கன்னாடி கண்களுக்கு போட்டு கொண்டால் வயது அதிகமாக காட்டும்
என்று மாநேஜ்  பன்னுவார்கள். அது அவர்களின் விஷன் பாதித்து பவர்
கூடும் என்பதை பற்றிய அறிய மாட்டார்கள்.!அவசியம் செக் பன்ணவும்.  

எட்டு 


எதற்க்கும் டென்ஷன் ஆகாதீர்.மிக ஈசி  ஆக எடுத்து கொண்டால் எல்லாம் ஓகே .பதட்டம் "ஆங்சைட்டி"வேண்டாம் இன்றைய சூழ்நிலைக்கு உங்களை மாற்றி 
கொண்டால்..வாழ்கை இளமையாகவே இருக்கும் .!உங்கள் பலம், மற்றும் 
பலவீனத்தை மனதில் கொள்க..எதில் உங்கள் வீக்னெஸ் என்பதை 
கண்டு கொண்டால்..அதில் கவனத்தை செலுத்தி முற்றிலும் களைய 
முயற்சி செய்தால் ..உங்கள் பெர்சனாளிட்டி டேவேலோப்மன்ட் முன்நேறும்.  


ஓன்பது 


மெனோபாஸ் என்பது பெண்கள் வாழ்கையில் ஒரு சுழற்சி !!ஓவ்வருடைய 
உடல் வாக்கிற்கு ஏற்ப நடக்கும் ஒரு நிலை என்பதை மனதில் கொண்டு 
அதை சுலபமாய் எதிர் கொண்டால். ஒரு பிரச்சினையும் கிடையாது.


பத்து 


அனைத்து  சூழ்நிலையிலும் தைரியமாக நம்பிக்கையுடன் வாழ்கையை எதிர் 
கொண்டால் நிச்சயம் நமக்கு தான் வெற்றி ..நிம்மதி ஆட்கொள்ளும்.!மனம் 
உற்சாம் அடைந்தால் இந்த நாற்பது பிளஸ் லும் நம் மனம் போல் உடல்  
இரக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விடும்.பிறகு என்ன? நமக்கு மழிழ்ச்சி தான்.





































முதுமைக்கு முற்றுபுள்ளி வைப்போம் !உடல் தளர்ந்தாலும் ..உள்ளம் 
உற்சாகமாக இருந்தால் இளமயுடேன்,துள்ளல்லுடன்   எப்போதும்
 இருக்கலாம்.  பெண்மையை போற்றுவோம் !!

2 கருத்துகள் :

welcome