ஞாயிறு, ஜூலை 18, 2010

அசோகா





















தஞ்சாவூர் என்றாலே தலை ஆட்டும் பொம்மை,

ஞாபகம் வரும் !.அது போல் இந்த அசோகா அல்வா

ரொம்ப பாபுலர்.என் அப்பா தஞ்சையில் DSP , ஆக

வேலை செய்த போது , அடிக்கடி இந்த அசோகா

வாங்கி தருவார்கள். !என் அக்கா பிள்ளைகள்

தஞ்சாவூரில் என்ன ஸ்பெஷல் என்று கேட்பார்கள்.

நான் தலை  ஆட்டி பொம்மை, அசோகா தான் ஸ்பெஷல்

 என்பேன். தலை  ஆட்டி பொம்மை போல் நான் ஆடும்

வரை எங்கள்  பொடிசுகள்   என்னை  விடாது . பிறகு  அசோகனா ?

அசோகா சக்ரம் நம் நாட்டு கொடியில் இருக்குமே / அதை

யாராவது சாப்பிடுவார்கள? என்று நக்கல் வேறு ..பன்னுவார்கள்!!!

ஒரு தடவை டேஸ்ட்  செய்தால் போதும்.

பிறகு அசோகாவை விட மாடீர்கள்......

தேவையானவை

பாசி பருப்பு :            1 கப்

கோதுமை மாவு :    1  கப்   

மைதா ;                     1 /2 கப் 

சர்க்கரை :                 4 கப்   

நெய் :                        1 கப் 

ஏலக்காய் தூள் :      2 ஸ்பூன் 

கேசரி பவ்டர் :        1 சிட்டிகை 

முந்திரி :                  20  ,

ஜாதிக்காய் :           சிறிது

 குங்கும பூ :           சிறிது

செய்முறை

பாசி பருப்பை வாசம்  வரும் வரை வறுத்து குக்கர்ரில் போட்டு 

வேக வைத்து (3 விசில்) குழைய மசித்து தண்ணீர் இல்லாமல் 

வடித்து வைத்து கொள்ளவும். மைதா,கோதுமை மாவை கலந்து 

இரண்டு ஸ்பூன் நெய் விட்டு வாசம் வரும் வரை ரோஸ்ட் ஆக 

வறுத்து கொள்ளவும்,ஆறிய உடன் இதை ஒரு கப் தன்நீர்ரில் சிறிது 

கேசரி கலர் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும். 

அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம் நெய் விட்டு முந்திரி வருத்து

அதில் வேகவைத்த பருப்பு ,சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும் !

சர்க்கரை உருகி திரண்டு வரும் போது ஸிம்மில் வைத்து கொண்டு 

இப்ப மெதுவாக கரைத்து வைத்து  உள்ள மைதா,கோதுமை மாவு 

கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறவும்.கட்டி இல்லாமல் 

நன்றாக கிளறி கொண்டு இருக்கவும்.தண்ணீர் இல்லாமல் கெட்டியாக 

வரும் வரை அடுப்பை சிறு தீயில் வைத்து நெய்  முழுவதயும் சேர்த்து 

கிளறி நெய் பிரிந்து வரும் போது அடுப்பை நிறுத்தி ஜாதிக்காய், பாலில் 

கரைத்த குங்குமபூ ,ஏலக்காய், வறுத்த திராட்சை தூவி இறக்கவும்.

சூப்பர்  அசோகா அல்வா ரெடி! விசேசங்களுக்கு ஏற்ற ஸ்வீட் !

செய்து பார்த்து சுவைத்து பின்பு உங்கள் கருத்துகளை கூறுங்கள்









11 கருத்துகள் :

  1. நீங்க அசோகான்னு வையுங்க இல்ல கனகான்னு வையுங்க . ஆனா ஐடம் பாக்கும் போதே வாய் ஊருது..சூப்பர்...!!

    பதிலளிநீக்கு
  2. இன்று தான் முதல் தடவை இங்கு வருகிறேன்.
    தஞ்சை, திருவையாறு மற்றும் எங்கள் குடந்தை பகுதிகளில் அசோகா இல்லாமல் எந்த சுப காரியங்களும் நடக்காது.
    எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்டின் பெயரால் ஈர்க்கப்பட்டு வந்தேன்.
    உங்கள் ப்ளாக் அழகாக உள்ளது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சகோதரி கீதா அவர்களுக்கு.
    தங்களுக்கு ஒரு மெடல் காத்துக்கொண்டுள்ளது.
    அதை பெற்றுகொள்ளுங்கள்.எனக்கு முன்னரே உங்கள் வலைத்தளம் பற்றி தெரியாமல்
    போனதால் இதனை அப்போது தர இயலவில்லை.
    சரி. இப்போது கீழ் கண்ட இணைப்பில் வந்து அந்த மெடலை பெற்றுக்கொளவும்.

    http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/07/blog-post_06.html

    நன்றி.
    கக்கு- மாணிக்கம்

    பதிலளிநீக்கு
  4. மறுபடியும் ஒரு சுவைக்கான டிப்ஸ். ரொம்பவே ஈடுபாடு உங்கள்ளுக்கு ..!! ஆனால் இதை பக்குவமாக பண்ணி தர ஆள் வேண்டுமே .? எங்களுக்கு பார்சல் அனுப்புவீர்களா ? அது சரி ' இடியும் மின்னலும் ' எப்ப வரும்..?

    பதிலளிநீக்கு
  5. கக்கு - மாணிக்கம் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் சகோதரர் உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
    உங்கள் மெடலை எடுத்து வர இதோ கிளம்பி விட்டேன் .மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு
  6. டியர் முத்து கண்டிப்பாக பார்சல் உண்டு !
    கவலை படாதீர்கள். சீக்கிரம் அனுபுறேன் !
    பூகம்பம் , மின்னல் காற்று அழுத்தம் தாழ்வாக
    இருக்கும் போது தான் வரும்.அதான் பிஜி இல்
    அடிகடி வருதே.. இதுல வேறு வரணுமா? ஓகே .

    பதிலளிநீக்கு
  7. அசோகா, எங்கள் வீட்டில், திடீர் விருந்தாளிகளுக்கு கொடுக்கப்படும் இனிப்பு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அமைதி அப்பா !!!
    தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

welcome